ACA சபையின் கிளை சபை கன்மலை சபை
Title: கர்த்தர் உங்களுக்கு குறித்து வைத்துள்ளதை நிறைவேற்றுவார்
Date: 12:06:2016
Speaker: Brother Michael
Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael
" கர்த்தர் உங்களுக்கு குறித்து வைத்துள்ளதை நிறைவேற்றுவார் "
யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
உங்களுக்கு என்னவெல்லாம் கர்த்தர் குறித்து வைத்துள்ளாரோ, அவை எல்லாவற்றையும் ஏற்ற காலம் வரும் பொழுது நிறைவேற்றுவார். அதை அவர் தவராமல் நடபிப்பார்.
1. கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தை அளிப்பார்
கர்த்தர் உங்களுக்கு என்ன தர விரும்புகிறார் என்றால் சமாதானத்தை தர விரும்புகிறார்.
யோபு 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
நீங்கள் எந்த காரியங்களில் எல்லாம் நிறைவு அடையாமல் இருக்கிறீர்களோ, பொருளாதாரப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், சமுதாயப் பிரச்சினைகள் இருக்கின்றன, ஆகவே நாம் யாவரும் சமாதானமாய் இருந்து கர்த்தரோடு உடன்படிக்கை செய்து கொண்டால் நம் சத்துரு நம்மிடத்தில் சமாதானம் செய்யும்படி வருவான்.
நீதிமொழிகள் 16:7
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நாம் பாவம் செய்வதினால் தான் சாத்தான் நம்மை ஆட்கொண்டு சமாதான குலைச்சல் தருகிறான். சமாதானத்தை இழந்து போவதற்கு நாம் தான் காரணம். நீங்கள் கர்த்தருக்குப் பிரியமாக நடந்து கொண்டீர்களேயானால் நம் சத்துருவே நம்மிடம் சமாதானமாய் வந்து நம் வழியை விட்டு விலகிப் போவான். எல்லாம் கர்த்தர் செய்வார். நம் இயேசு சமாதானத்தின் தேவன், அவர் நிச்சயமாக உங்களுக்கு சமாதானத்தை தருவார்.
ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
2. நீங்கள் ஒரு குறைவையும் காணமாட்டீர்கள்
கர்த்தர் நமக்கு கிருபை பாராட்டி சத்துருவுக்கு முன்பாக ஒரு பந்தியை விஷேஷித்த விதமாய் ஆயுத்தம் பன்னுவார்.
I கொரிந்தியர் 13:10
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
இயேசு உங்கள் வாழ்க்கையில் வந்தார் என்றால் நீங்கள் ஒரு குறைவையும் காணமாட்டீர்கள். நாம் சுத்தமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இயேசு வருவார். அவர் பிரசன்னமும், மகிமையும் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்க வேண்டும்.
3. கர்த்தர் அதிசியமான காரியங்களை செய்வார்
யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
நிச்சயமாக நம் தேவனாகிய கரத்தர் செய்வார், விசுவாசியுங்கள். என்னவே முடியாத அதிசியமான காரியங்களை நமக்கு செய்வார், நீங்கள் சாட்சி அளிப்பீர்கள். நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களை கர்த்தர் நம் வாழ்க்கையில் செய்வார். கர்த்தர் உங்களிடம் உடன்படிக்கைப் பன்னுவார்.
ஆதியாகமம் 17:1
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
ஆபிரகாம் தவறு செய்ததினால் ஆண்டவர் அவருக்கு கண்டித்து உணர்த்துகிறார்.
ஆதியாகமம் 16:16
ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.
13 வருடங்கள் ஆபிரகாமுக்கு ஆண்டவர் நடத்துதல் இல்லை, அவர் போஷிக்கவில்லை, அவர் பேசவில்லை, ஆண்டவருடைய பிரசன்னம் அந்த குடும்பத்தில் இல்லை. ஆதியாகமம் 17:1 ல் கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமாகி, நான் சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு முன்பாக உத்தமனாய் இரு என்றார்.
ஆபிரகாம் கர்த்தரிடத்தில் வைத்த உடன்படிக்கையை மறந்ததினால் 13 வருடங்கள் இடைவெளி ஆனது. ஆனாலும் நம் தேவன் வாக்கு மாறாதவர். ஆபிரகாமுக்கு அளித்த வாக்கின்படியே ஆண்டவர் அந்த வாக்குதத்தை நிறைவேற்றினார்.
நீங்களும் கர்த்தரோடு உடன்படிக்கை செய்தால் நீங்கள் நினைத்து கூடப் பார்க்க முடியாத காரியங்களை செய்ய கர்த்தர் வல்லவராயிருக்கிறார்.
ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
ஆதியாகமம் 18:15
சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
ஆதியாகமம் 18:16
பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம்விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
ஆதியாகமம் 18:17
அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
ஆதியாகமம் 18:18
நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன்
பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள்
நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
கர்த்தருக்கு கடினமான காரியம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. நான் வசந்த காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் மகனோடு இருப்பாள்” என்றார்.
கர்த்தர் தனக்குள், “நான் செய்யப்போகிறவற்றை ஆபிரகாமிற்கு மறைக்கமாட்டேன். ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
நான் ஆபிரகாமோடு சிறந்த உடன்படிக்கை ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். நான் இதைச் செய்ததால் அவன் தன் பிள்ளைகளையும், சந்ததிகளையும் எனது விருப்பப்படி வாழ கட்டளையிடுவான். அவர்கள் நீதியோடும், நேர்மையோடும் வாழும்படி அவர்களுக்குப் போதனை செய்வான் என அறிவேன். கர்த்தராகிய நான் வாக்குறுதியளித்தபடியே அவனுக்குச் செய்வேன்” என்று சொல்லிக்கொண்டார்.
ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
நமக்கு குறித்திருப்பதை நம் தேவனாகிய கர்த்தர் நிச்சயமாக நிறைவேற்றுவார். ஏற்ற காலம் சமீபிக்கும் போது எல்லாம். கழுகு காத்திருந்து தன் செட்டைகளை அடித்து உயரப் பறப்பது. நாமும் காத்திருந்து கர்த்தருடைய ஆசிர்வாதங்களைப் பெற்று அவருக்கு முன்பாக நாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதுவே நம் தேவனின் விருப்பமாக உள்ளது. ஆமென்.
No comments:
Post a Comment