Wednesday, November 29, 2017

பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்


கன்மலை கிறிஸ்துவ சபை

Message: Brother Kamal

Date: 26.11.2017

    பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்

ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

நம் வாழ்க்கையின் அநேக சமயங்களில் பயம் நம்மை பிடிக்க முற்படுகிறது. நாம் எப்பொழுதெல்லாம் பயப்படுகிறோமோ அப்பொழுதெல்லாம் ஒரு கலக்கம் நம் இருதயத்துக்குள்ளாக வருகிறது. எப்பொழுதெல்லாம் பயம் நம் வாழ்க்கையில் வருகிறதோ நம் வாழ்க்கையை செயல்பட விடாத படிக்கு அது முயற்சிக்கிறது. நாம் எப்பொழுதெல்லாம் பயப்படுகிறோமோ அப்பொழுது நாம் கவலைப்பட ஆரம்பிக்கிறோம். பயம் நம் வாழ்வில் முன்னேறி செல்வதை அது தடுக்கிறது. பயம் அவ்விசுவாசத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வருகிறது.


மூன்று விதமான பயங்களை குறித்து நாம் காணலாம். இந்த மூன்று விதமான பயங்களிலும் கர்த்தர் நமக்கு துணை நிற்க விரும்புகிறார். கர்த்தர் துணை நின்று இந்த பயத்தை நீக்க விரும்புகிறார். அதனால் தான் அவர் சொல்கிறார் பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன். 

1. அவர் எதிர்காலத்தை குறித்த பயத்தை போக்கி துணை நிற்பார் 

மத்தேயு 10:31
ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

இந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. அவருடைய சித்தம் இல்லாமல் ஒரு முடி கூட கீழே விழாது. ஏனென்றால் நீங்கள் விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள். அநேக அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள். நாம் விசேஷித்தமானவர்களாக இருக்கிற படியால் நம் தலையில் உள்ள முடியெல்லாம் அவர் எண்ணி வைத்து இருக்கிறார். 

சங்கீதம் 139:16
என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

என் தாயின் கற்பதில் என்னை காப்பாற்றினீர் என்று சொல்ல பட்டு இருக்கிறது. ஆண்டவர் நம்மை தாயின் கருவிலே தெரிந்து எடுத்தார். 

சங்கீதம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 139:2
என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

சங்கீதம் 139:3
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

சங்கீதம் 139:4
என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

அவர் நம்மை அறிந்து இருக்கிற ஆண்டவராய் இருக்கிறார். இந்த வசனங்கள் சொல்கிறது அவர் நம்மை முழுவதும் அறிந்து இருக்கிற ஆண்டவராய் இருக்கிறார். அவர் நம்மை அறிந்திந்து இருக்கிற ஆண்டவராய் இருக்கிற படியினால் நம்முடைய தேவை இன்ன என்பதை அவர் அறிந்து இருக்கிறார். நம்முடைய எதிர்காலத்தை குறித்து அவர் அறிந்து இருக்கிறார். 

மத்தேயு 6:31
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

மத்தேயு 6:32
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

நம்முடைய பரம பிதா எல்லாவற்றையும் அறிந்து இருக்கிறார். நம்முடைய தேவை இன்னதென்பதை அவர் அறிந்து இருக்கிறார். உங்கள் தேவை என்ன என்பதை அவர் அறிந்து இருக்கிறார். 

மத்தேயு 6:34
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

மத்தேயு 6:26-29

அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிற ஆண்டவர். ஆகாயத்து பறவைகளை பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தமானவர்கள். அவைகளை கர்த்தர் பிழைப்பூட்டுகிறார். அவை விதைக்கிறதும் இல்லை, அருக்கிறதும் இல்லை ஆனாலும் அவைகளை தேவன் போஷிக்கிறார். அவைகளை பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தமானவர்கள். கவலை பட்டு கொண்டே இருக்கும் பொழுது பயம் வந்து விடும். எனவேதான் ஆண்டவர் சொல்கிறார் நீ பயப்படாதே உன் எதிர்காலங்கள் என் கரத்தில் இருக்கிறது. நான் உன்னை அறிந்து இருக்கிறேன். உன் எதிர்காலத்திற்கு துணை நிற்கிற தேவனாய் இருக்கிறேன். 

2. அவர் சூழ்நிலையால் ஏற்படும் பயத்தை போக்கி துணை நிற்பார் 

மத்தேயு 14:27 
உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

இயேசு சீஷர்களை பார்த்து பயப்படாதிருங்கள் என்றார். ஒரு முறை சீஷர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடக்க வேண்டியதாய் இருந்தது இயேசு தான் அவர்களை படகில் செல்லும் படியாக கூறினார். இயேசு அந்த சமயத்திலே அந்த படகில் இல்லை. சீஷர்கள் பயணித்த பொழுது நடுக்கடலில் எதிர்காற்றை அவர்கள் சந்தித்தார்கள். அந்த காற்று அவர்கள் முன்னேறி செல்வதை தடுத்தது. எப்பொழுதெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு எதிர்ப்பு வருகிறதோ நம்முடைய முன்னேற்றத்தை தடுக்கும் பொழுது நமக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. 

நாம் அந்த கரைக்கு போய் சேர முடியுமா அல்லது நடுக்கடலில் சிக்கி கொள்வேனாஅந்த பலத்த காற்றை பார்த்து பயந்தார்கள் அப்பொழுது இயேசு அந்த இடத்திலே கடலின் மீது நடந்து வந்தார். 

மத்தேயு 14:26
அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

நாமும் நிறைய நேரங்களில் சூழ்நிலையை பார்த்து பயப்படுகிறோம். சில சமயங்களில் சூழ்நிலைகள் எல்லா பக்கத்தில் இருந்து நமக்கு பயத்தை கொண்டு வருகிறது. இயேசு ஒரு பிரயாணத்தை ஆரம்பிப்பார் என்றால் அந்த பயணம் முழுவதும் நம்மை காக்க வல்லவராய் இருக்கிறார். அந்த பயணத்தில் காற்று நமக்கு தடையாய் வரும் என்றால் இயேசு அந்த இடத்தில் இருப்பார். திடன் கொள்ளுங்கள் நான் தான் என்று சொல்லுவார். 

மத்தேயு 14:28
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான்.

மத்தேயு 14:29
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்.

மத்தேயு 14:30
காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.

மத்தேயு 14:31
உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

மத்தேயு 14:32
அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

இங்கு பேதுரு பயப்படுவதை பார்க்கிறோம். நம் இயேசு நம்முடைய எல்லா பயத்தையும் அறிந்து இருக்கிறார். உங்களின் பயத்தின் மத்தியில் நீங்கள் ஆண்டவரை தேட வேண்டும். பேதுரு அதை செய்தார். இயேசு உடனே கையை நீட்டினார் என்று சொல்ல பட்டு இருக்கிறது. பயத்தில் நாம் தவிக்கும் பொழுது முதலாவது அவர் நம் கையை பிடிப்பார். அவர் நல்ல தகப்பன். அவருடைய அணைக்கும் கரம் நம்மிடம் வேண்டும். சூழ்நிலையின் மத்தியில் நீங்கள் பயப்படவேண்டாம் என்று ஆண்டவர் சொல்கிறார். சூழ்நிலையை பார்க்காதே என்கிறார். அந்த சூழ்நிலைகளையே அவர் மாற்றினார். கொந்தளித்த காற்றை அமர வைத்தார். எனவே நீங்கள் பயப்படவேண்டாம் அது நான் தான்  சூழ்நிலைகளை மாற்ற கூடிய இயேசுவை நோக்கி பாருங்கள்.
 

3. அவர் சத்துருக்களை குறித்த பயத்தை போக்கி துணை நிற்பார் 

II நாளாகமம் 20:1
இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.

II நாளாகமம் 20:2
சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

II நாளாகமம் 20:3
அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்

யோசபாத் ராஜாவுக்கு எதிராக எல்லா பக்கத்தில் இருந்து சத்துருக்கள் எழும்பி வருவதை நாம் பார்க்கிறோம். அவர் ராஜாவாய் இருந்த பொழுதும் தனக்கு வலிமைகளை இருந்தபோதிலும் அவர் இருதயத்திலே பயம் ஆட்கொண்டது. எப்பொழுதெல்லாம் பயம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் முதலாவது நாம் செய்ய வேண்டிய காரியம் நாம் கர்த்தரை தேட வேண்டும். அவர்கள் ஆண்டவரிடம் உபவாசம் இருந்து சகாயம் தேட கூடினார்கள். 

II நாளாகமம் 20:12
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.

II நாளாகமம் 20:14
அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:

II நாளாகமம் 20:15
சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.

II நாளாகமம் 20:17
இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.

கர்த்தர் சத்துருவின் நிமித்தம் வருகிற பயத்தை அறிந்திருந்தார். உடனே தன்னுடைய வார்த்தையை அனுப்புகிறார். திரும்பவும் திரும்பவும் சொல்கிறார் பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள். இந்த யுத்தம் என்னுடையது என்கிறார். இந்த அதிகாரத்தில் ஆண்டவர் அவர்களுக்காக எப்படி யுத்தம் செய்தார் என்பதை படித்து பாருங்கள். 

 உங்கள் சத்துருக்களை பார்த்து பயப்படாதீர்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். எந்த ஒரு சந்துருவை பார்த்தும் பயப்படாதீர்கள். எல்லா சத்துருக்கள் மீதும் கர்த்தர் நமக்கு அதிகாரம் கொடுக்கிறார். இயேசு என்கிற நாமத்தில் அதிகாரம் உண்டு, இயேசுவின் இரத்தத்திலே அதிகாரம் உண்டு, இயேசுவின் வார்த்தையிலே அதிகாரம் உண்டு, இயேசுவின் பிரசனத்தில் அதிகாரம் உண்டு. அவர் நமக்கு துணை நிற்கிற ஆண்டவராய் இருக்கிறார். அவருடைய பலத்த கரம் நமக்கு ஒரு பாதுகாப்பாய் இருக்கும். அவர் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறார். நம்மை மறைத்து பாதுகாக்கிற ஆண்டவர் சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். ஒன்றும் உங்களை சேதப்படுத்துவதில்லை என்று வேதம் சொல்கிறது. ஆணடவர் உங்களுக்கு துணை நிற்பார். ஆமென். 



FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment