Thursday, January 11, 2018

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்


கன்மலை கிறிஸ்துவ சபை

Message: Brother Micheal

Date: 07.01.2018

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்

I சாமுவேல் 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

உலகத்தின் பார்வையில் நீங்கள் சிறியவராக கருதப்படலாம், ஆனால் நம் தேவாதி தேவனுக்கு நாம் அனைவரும் விசேஷித்தமானவர்கள். நம்மை தான் ஆண்டவர் உயர்த்த விரும்புகிறார். 

அவர் ஏன் எளியவனை புழுதியில் இருந்து உயர்த்தப்போகிறார் ?

1. அவர் பெலவானின் கைக்கு விலக்கி உன்னை இரட்சிப்பார் 

யோபு 5:15
ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.

நம் ஆண்டவர் பெலவானை காட்டிலும் பெரியவர். நம் வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாத படிக்கு ஒரு சில பெலவான்கள் கிரியை செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் எளியவர்களாகிய நம்மை தாழ்த்தி கொண்டே இருப்பார்கள். அவர்கள் கைக்கு விலக்கி கர்த்தர் உங்களை இரட்சிக்கப்போகிறார்.

மாற்கு 3:27
பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

பிசாசானவன் நம்மை திருட வகை தேடி கொண்டே இருப்பான் அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்து விட கூடாது அவன்  வந்து உன்னை கொள்ளையிடாதபடிக்கு நீ தான் முந்தி கட்ட வேண்டும். உன்னை எது தாக்கி பாதிக்கிறது அதுவே அவனுடைய உடைமைகள். அவனை நம் துதியினாலும், ஜெபத்தினாலும் கட்ட வேண்டும். அவன் செயல் படுவதற்கு முன்பாக அவனை நாம் முந்தி கட்ட வேண்டும். 

தேவன் பலவான் கைக்கு உன்னை தப்புவிக்க வேண்டும் என்றால் நீ அவனை உன்னுடைய துதி, ஜெபம் என்னும் பேராயுதத்தால் முந்தி கட்ட வேண்டும். 

சங்கீதம் 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

அவர் நம்மை தப்புவிப்பார் நமக்கே தெரியாமல் நம்மை கொள்ளையடிக்கிற உனக்கு தெரியாமல் உன் ஆயுளை, ஆரோக்கியத்தை, அறிவை, ஆசிர்வாதத்தை கொள்ளையடிக்கலாம். உனக்கு தெரியாமல் உன் பரிசுத்தத்தை கொள்ளையடிக்கலாம், அவன் என்ன வேண்டும் என்றாலும் செய்வான். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார் அத்தகைய பலவான் கைக்கு அவர் உன்னை விலக்கி இரட்சிப்பார். 

2. அவர் துன்மார்க்கரின் கைக்கு விலக்கி உன்னை தப்புவிப்பார் 

சங்கீதம் 82:4
பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

ஆதியாகமம் 18:20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

ஆதியாகமம் 18:21
நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.

ஆதியாகமம் 18:22
அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம்விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.

ஆதியாகமம் 18:23
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?

ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:



ஆதியாகமம் 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.



லோத்து ஆபிரகாமை விட்டு சோதேமுக்கு போய் பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் அந்த பட்டணத்தில் தேவனுக்கு பிடிக்காத பாவ காரியங்கள் பெருகவே அந்த பாவத்தின் கூக்குரல் தேவனுடைய சமூகத்தில் எட்டியது எனவே அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்க தூதர் சோதேமுக்கு வருகிறார்கள். அப்பொழுது லோத்து மாத்திரம் தன் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவர்களை கண்டவுடன் லோத்து தரைமட்டும் குனிந்து அவர்களை பணிந்து கொண்டான். லோத்தை ஆண்டவர் துன்மார்க்கரின் பட்டணமாகிய சோதோம் கொமோரா இல் இருந்து மீது அவனை தப்புவித்தார்.



3. அவர் பொல்லாதவர்களின் கைக்கு விலக்கி உன்னை தப்புவிப்பார்



எரேமியா 20:13
கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.



ஆதியாகமம் 13:13
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.



ஆதியாகமம் 14:11

அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.



ஆதியாகமம் 14:12

ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

ஆதியாகமம் 14:13
தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.



ஆதியாகமம் 14:14

தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,



ஆதியாகமம் 14:15

இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி,



ஆதியாகமம் 14:16

சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.



ஆதியாகமம் 14:17

அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

ஆதியாகமம் 14:18
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

ஆதியாகமம் 14:19
அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

ஆதியாகமம் 14:20
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

நீ நினைத்தால், ஒரு யுத்த வீரன் நினைத்தால், ஒரு தேவ மனுஷன் நினைத்தால், தேவனுடைய அபிஷேகம் பெற்ற ஒரு மனுஷன் நினைத்தால், தேவனோடு ஜெபம் பண்ணுகிற ஒரு மனுஷன் நினைத்தால் நீ என்ன இழந்தீயோ எந்த இந்து விதமான பிசாசு உன்னுடையவைகளை கொள்ளையடித்து கொண்டு போனானோ அவை எல்லாவற்றையும் உன்னால் பெற்று கொண்டு வர முடியும் இது தான் மேல சொல்லப்பட்டுள்ள வசனத்தின் ஆவிக்குரிய அர்த்தம் நம் தேவன் எளியவனை பொல்லாதவர்களின் கைக்கு விலக்கி தப்புவிப்பார். நீங்கள் இழந்த எல்லாவற்றையும் ஆண்டவர் உன் சத்ருக்களிடம் இருந்து மீட்டு உனக்கு தருவார். ஆமென்.





FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment