Wednesday, January 17, 2018

ஆவிக்குரிய புறா


கன்மலை கிறிஸ்துவ சபை

Message: Brother Micheal

Date: 14.01.2018

" ஆவிக்குரிய புறா "

ஆதியாகமம் 8:1
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டுமிருகங்களையும், சகல நாட்டுமிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

ஆதியாகமம் 8:2
ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்று போயிற்று.

ஆதியாகமம் 8:3
ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
ஆதியாகமம் 8:4
ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

ஆதியாகமம் 8:5
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

1.தேவனுடைய சித்தத்திற்கு காத்திருந்த புறா 

ஆதியாகமம் 8:6
நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

ஆதியாகமம் 8:7
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
நோவா முதலில் நிலம் வற்றி போய் இருக்கிறதா என்று பார்க்கும் படிக்கு ஜன்னலை திறந்து ஒரு காகத்தை வெளியே பறக்க விடுகிறார். ஆனால் இந்த காகம் நோவா அனுப்பின நோக்கத்தை செய்யாமல் போகிறதும், வருகிறதுமாய் இருந்தது. நோவா அந்த காகத்தை அனுப்பின நோக்கம் எனக்கு நீ நல்ல செய்தியை கொண்டு வர வேண்டும். ஆனால் அதுவோ போகிறதும், வருகிறதும் ஆக இருந்தது. நாம் எல்லாம் இந்த காக்கையை போல இருக்க கூடாது. இந்த ஜன்னல் எதை குறிக்கிறது அவரே வழி 

இந்த உலகத்திலே தேவன் தன் சித்தத்தை செய்ய நம்மை அனுப்புகிறார், இந்த  காக்கையை போல போகிறதும். வருகிறதுமாய் நம்முடைய வாழ்க்கை இராமல் நாம் தேவனுடைய சித்தத்தை செய்கிற வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். ஆண்டவர் நம்மை சபைக்கு அனுப்புகிறார் நாம் வருகிறோம், போகிறோம். நோவா காக்கையை அனுப்பின சித்தம் என்ன வென்றால் பூமி எப்படி இருக்கிறது நான் வாழ அங்கு போகலாமா அதை தெரிந்து கொண்டு வர காக்கையை அனுப்புகிறார். அது போலவே நம் ஆண்டவரும் சில இடங்களிலே நம்மை நம்பி அனுப்புகிறார், சில இடங்களிலே ஒரு நோக்கத்துக்காக நம்மை அங்கு வைக்கிறார். அந்த இடங்களில் நாம் தேவ சித்தத்தை செய்ய வேண்டும். அவர் சித்தத்தை நாம் சில நேரங்களில் செய்வதில்லை போகிறதும், வருகிறதுமாய் இருக்கிறோம். 
ஆதியாகமம் 8:8
பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

ஆதியாகமம் 8:9
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

சங்கீதம் 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

இன்றைக்கு உன்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் விரும்புவது இந்த புறாவை போல தேவனுடைய சித்தத்தை சரியாய் செய்ய வேண்டும். புறாவை போல கபடற்றவர்களாக நாம் இருக்க வேண்டும். காக்கையை போல அல்லாமல் தேவனுடைய சித்தத்தை செய்து கனி கொடுக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும். 

2. தேவனுடைய சித்தத்தை செய்ய அனுப்பிவிடப்பட்ட புறா 

ஆதியாகமம் 8:10
பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.
ஆதியாகமம் 8:11
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்

சரியாக ஏழு நாள் கழித்து அந்த பேழையில் இருந்து மீண்டுமாய் நோவா புறாவை வெளிய விடுகிறார். அந்த புறா சாயங்காலத்தில் நோவாவிடத்தில் வந்து சேருகிறது, அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ மரத்தின் இலை அதன் வாயில் இருந்தது. காகம் இதை செய்யவில்லை காகம் தனக்கு இறை தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தியது ஆனால் புறாவோ நோவாவிற்கு நற்செய்தியை கொண்டு வந்தது இதன் மூலமாக பூமியில் ஜலம் வற்றி இருக்கும் என்று நோவா அறிந்து கொண்டார். 
3. தேவனுடைய சித்தத்தை அறிந்து அதை செய்து முடித்த புறா 

ஆதியாகமம் 8:12
பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.

ஆதியாகமம் 8:13
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

பின்பு மூன்றாம் முறையாக ஏழு நாள் கழித்து நோவா புறாவை வெளியே விடுகிறார். ஆனால் இந்த முறையோ புறவானது திரும்பி நோவாவிடம் வரவில்லை. இதில் இருந்து நமக்கு தெரிவது என்ன என்றால் அந்த புறா வாழ்வதற்கு  தேவையான இளைப்பாறுதலான இடத்தை கண்டு பிடித்து விட்டது. பூமியெங்கும் தண்ணீர் முற்றிலும் வற்றி இருக்கும் என்று நோவா இதன் மூலம் அறிந்து கொண்டார். 

ஒரு சுவிஷேகனுடைய வேலை என்னவென்றால் அவன் இளைப்பாறாமல் தேவனுடைய சுவிசேஷத்தை எங்கும்  நாட்டுவதே அவனுடைய இலக்காய் இருக்கும். நம் எஜமானன் யார் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் உன்னையும், என்னையும் தான் அனுப்புகிறார் எதற்காக அனுப்புகிறார் உலகில் உள்ள ஜனங்களை ஆதாயம் செய்வதற்காக. நமக்கு சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் தேவனுக்காக நாம் வேலை செய்ய வேண்டும்.  ஆண்டவர் இந்த புறாவை போல நாம் நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். 

அவர் உங்களை அனுப்பி அவர் சித்தத்தை செய்ய விரும்புகிறார். அந்த புறாவை போல நாம் நம் எஜமானாகிய தேவனின் சித்தத்தை செய்ய நாம் ஆயத்தமாவோம், ஆயத்தப்படுத்துவோம். ஆமென். 

மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்




FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment