Tuesday, February 19, 2019

உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்

கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother KAMAL
Date : 17.02.2019



" உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் "


சங்கீதம் 18:35
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

கர்த்தருடைய கண்களில் நமக்கு கிடைக்கிறதான தயவு நம்மை நம்மை பெரியவர்களாக்குகிறது, நம்மை ஆசீர்வதிக்கிறது. நான் மனுஷருடைய தயவை பெற காரியங்கள் செய்யலாம். ஆனால் அதை விட நம் வாழ்க்கையில் முக்கியமாக தேவ தயவு என்பது வேண்டும். தேவனுடைய தயவை நாம் பெற்றுக்கொள்வதற்கு பிரயாசப்படவேண்டும். 


கர்த்தருடைய தயவை பெற்று கொண்ட சிலரை நாம் வேதத்தில் இருந்து பார்க்கப்போகிறோம். அவர்கள் ஏன் தேவ தயவை பெற்றார்கள் ? எதற்காக பெற்றார்கள் ? 

1. தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் கிடைத்த தயவு 


தானியேல் 1:9
தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.

எதற்காக ? என்றால் 

தானியேல் 1:8
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

தானியேல் பரிசுத்தமாய் இருக்க தீர்மானம் பன்னிகொண்டார். கர்த்தரோ அவருக்கு பிரதானியின் கண்களில் தயை கிடைக்கச்செய்தார். நம்முடைய வாழ்விலும் நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கும் பொழுது கர்த்தர் நமக்கு தயைபாராட்டுவார். நாம் வாழ்கிற உலகம் பாவம் நிறைந்த, அக்கிரமம் நிறைந்ததாய் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற அசுத்தங்களினால் நான் என்னை தீட்டுப்படுத்தமாட்டேன் என்று நாம் தீர்மானிக்கும் பொழுது பரிசுத்தமாய் வாழ்வதற்கு என்ன உதவி தேவையோ அதை செய்வதற்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார். 

2. ஆபிரகாமின் நிமித்தம் ஈசாக்கு பெற்ற தயவு 

ஆதியாகமம் 26:24
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.


இங்கே ஆண்டவர் கண்களில் ஈசாக்குக்கு தயை கிடைக்கிறது. இங்கே அவர் தேவனிடத்தில் இருந்து தயை பெற்றுக்கொள்ள காரணம் ? தன் தகப்பனாராகிய ஆபிரகாமின் நிமித்தம் ஈசாக்குக்கு தேவனுடைய கண்களில் தயவு கிடைக்கிறது. அது போல உங்கள் நிமித்தம் உங்கள் பிள்ளைகளுக்கு தேவ தயவு கிடைக்க வேண்டுமென்றால் ஆபிரகாமை போல வாழுங்கள். ஆபிரகாம் கர்த்தருக்கு பயந்து, அவருக்கு கீழ்ப்படிந்து நடந்தார். நீங்களும் அவ்வாறு வாழ்வீர்கள் என்று சொன்னால் உங்கள் நிமித்தம் உங்கள் சந்ததிக்கு ஆண்டவர் தயை கிடைக்கப்பண்ணுவார். 

3. தேவனுடைய தயவுள்ள கரம் நெகேமியா மேல் இருந்தது 

நெகேமியா 2:8
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

இங்கே நெகேமியாவுக்கு தேவனுடைய தயவு கிடைக்க என்ன காரணம் அவர் தேவனுக்காக வைராக்கியம் கொண்டு எருசலேமின் அலங்கம் இடிந்து கிடக்கிறது. அதை மறுபடியும் கட்ட வேண்டும் என்று அவர் தேவ சமூகத்தில் அழுது, உபவாசித்து ஜெபம் செய்து அவர் செயல்பட்ட படியினாலே அர்தசஷ்டா ராஜாவின் கண்களில் நெகேமியாவுக்கு தயை கிடைத்தது. அதனால் தான் தேவனுடைய தயவுள்ள கரம் நெகேமியாவின் மேல் இருந்தது. 


நாமும் தேவனுக்காக ஊழியம் செய்யும் படி, தேவனுடைய இராஜ்ஜியம் பூமியில் வரும்படி, செயலாற்ற வேண்டும். அப்பொழுது ஆண்டவர் உங்களை ஆசீர்வாதமாக நடத்துவார். கர்த்தருக்காக நீங்கள் வைராக்கியமாய் இருக்கும் பொழுது உங்களுக்கு வேண்டிய காரியங்களை கர்த்தர் வாய்க்கப்பண்ணுவார். உங்கள் தேவைகளை கர்த்தர் நேர்த்தியாய் சந்திப்பார். 

4. யோசேப்பை உயர்த்திய தேவ தயவு 

ஆதியாகமம் 39:3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:


ஆதியாகமம் 39:4
யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

ஆதியாகமம் 39:21
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

இங்கே யோசேப்புக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைத்தது காரணம் யோசேப்பு தேவனோடு கூட இருக்கிறவராக இருந்தார், நாம் தேவனோடு இருக்கிற அனுபவத்தை ஜெபத்தின் மூலமாக, அவர் சமூகத்தில் காத்திருப்பதன் மூலமாக பெற்று கொள்ளலாம். நாம் தேவனோடு கூட இருந்தால் தேவன் நம்மோடு கூட இருப்பார். யோசேப்போடு கர்த்தர் இருந்தபடியால் அவரை எகிப்திலே அதிபதியாக உயர்த்தினார். 

5. போவாஸ் கண்களில் ரூத்திற்கு கிடைத்த தயவு 

ரூத் 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.


ரூத் 2:11
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.

ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

ரூத் 2:13
அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.

இங்கே போவாஸ் இயேசுவுக்கு அடையாளமாக இருக்கிறார். போவாஸ் கண்களில் ரூத்திற்கு தயை கிடைக்க காரணம் ஒரு வார்த்தையில் சொன்னால் ரூத்தின் நற்குணம். ரூத்தின் நற்குணத்தின் நிமித்தம் போவாஸ் கண்களில் தயை கிடைத்தது அதுமட்டும் அல்லாமல் ரூத்தை இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறச்செய்தது. 






FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment