Tuesday, February 12, 2019

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு


கன்மலை கிறிஸ்துவ சபை 
Word of God : Brother Micheal
Date : 10.02.2019


இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு


ஓசியா 12:6
இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.

1. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்

I தெசலோனிக்கேயர் 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

நம்முடைய ஜெப நேரத்தை திருடும் படியாகாதான் பிசாசானவன் வருவான். ஜெபம் இல்லையென்றால் வாழ்க்கையில் பல தோல்விகள், வேதனைகளுக்கு வழி வகுத்துவிடும். இதனால் ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். ஜெபம் செய்தால் நம் வாழ்க்கையில் எல்லாமே ஜெயமாய் முடியும். தேவனுடைய தயவை பெற்றுக்கொள்ளலாம். 


2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள் 

அப்போஸ்தலர் 26:7
இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். 

தானியேல் 6:16
அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.

தானியேல் 6:20
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.  

இடைவிடாமல் ஆராதனை ஆராதிப்பதால் தேவன் எல்லாவித மரணகன்னிகளில் இருந்து நம்மை தப்புவிப்பார். 

3. இடைவிடாமல் மற்றவர்களுக்காக விண்ணப்பம் பண்ணுங்கள் 

I தெசலோனிக்கேயர் 1:4
எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.  

யோபு தன் நன்பர்களுக்காக ஜெபித்தபொழுது தேவன் அவர் சிறையிருப்பை மாற்றினார். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் பொழுது நம்முடைய சிறையிருப்பையும் தேவன் மாற்ற வல்லவராய் இருக்கிறார். 

4. இடைவிடாமல் ஊழியம் செய்யுங்கள் 

அப்போஸ்தலர் 6:4
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.

5. இடைவிடாமல் ஸ்தோத்திரம் செலுத்துங்கள் 

I தெசலோனிக்கேயர் 2:13
ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.









FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment