Thursday, June 23, 2016

கர்த்தர் உங்கள் மேல் உதிப்பார்

ACA சபையின் கிளை சபை கன்மலை சபை
 Title: கர்த்தர் உங்கள் மேல் உதிப்பார்
Date: 19:06:2016
Speaker: Brother Michael

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael
" கர்த்தர் உங்கள் மேல் உதிப்பார் "

ஏசாயா 60:2
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

எவ்வளவு தான் பூமியில் காரிருள் இருந்தாலும், சோதேம் பட்டணத்தைப் போல எல்லோரும் பாவம் செய்து நெருக்கினாலும், பிசாசுகளின் சூழ்ச்சிகள் உங்களை சூழ்ந்து நின்றாலும்,  நம் தேவனாகிய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவர் மேலும் உதிப்பார். அவருடைய மகிமை உங்கள் மேல் காணப்படும். அவர் செய்த அற்புதங்களும், அடையாளங்களும் எப்படி, எவ்வாறு என்று அனைவரும் கண்டு வியப்பார்கள்.
கர்த்தர் உங்கள் மேல் உதிக்க ஆரம்பித்து விட்டால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையை அடைவீர்கள் கீழேப்போக மாட்டீர்கள். கர்த்தருடைய ஒளி உங்கள் மீது வந்து விட்டது என்று சொன்னால் நீங்கள் பிராகாசிப்பீர்கள்.

யூத ராஜ சிங்கமாகிய கர்த்தருடைய கோத்திரத்தில் வருகிறோம். நாம் அனைவரும் வேறு பிரிக்கப்பட்டவர்கள். கர்த்தர் உங்கள் மீது உதிக்கும் பொழுது மூன்று விதமான காரியங்களை காண்பீர்கள்.

1. மகிமையான வெற்றியை காண்பாய்
2. மகிமையான ஐசுவரியத்தை காண்பாய்
3. மகிமையான காவலை காண்பாய்

யோசுவா வெற்றி பெறும் படியாக கர்த்தர் சூரியனை நிறுத்தினார். அதுபோல உங்களுடைய சத்துருக்களை நீங்கள் வீழ்த்தும் வரை சூரியன் உதித்துக் கொண்டே இருக்கும்.
1. மகிமையான வெற்றியை காண்பாய்
யாத்திராகமம் 15:1
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

யாத்திராகமம் 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

யாத்திராகமம் 15:3
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

எதில்லெல்லாம் நமக்கு தோல்விகள் ஏற்படுகிறது. படிப்பு ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், மாம்ச ரீதியாகவும் சரி, எதிலே நாம் தோல்வி அடைந்தாலும் சரி மூன்றாவது வசனம் சொல்கிறது அவருடைய நாமம் விஷேஷித்தமான நாமம் கர்த்தரே யுத்தத்திற்கு வல்லவர். கர்த்தர் என்பது அவருடைய நாமம் கர்த்தர். அவர் உங்களை வெற்றி சிறக்கப் பண்ணுவார்.

உலகத்திற்கும், மனித சமுதாயத்திற்கும் அப்பாற்ப்பட்டது தான் மகிமை. தேவன் செய்த மகிமையான காரியத்தைப் பார்த்தால் இதுவரையில் வரலாற்றில் காணப்படாதவையான கடலைப் பிளந்து சத்துருக்களை அழித்து தம் ஜனங்களை காப்பாற்றினார், இதுவே மோசேயின் காலத்தில் கர்த்தர் செய்த மகிமையான காரியம் ஆகும்.

சத்துரு உங்களை எவ்வாறு துரத்துகிறான், வியாதி மூலமாகவா, பணப்போராட்டங்கள் மூலமாகவா அல்லது குடும்பத்தை பிரிக்க சத்துரு எழும்புகிறானா? எந்த ரீதியில் வந்தாலும் சரி அவன் அதே ரீதியில் மாண்டுப் போவான்.

ஆதியாகமம் 1:2
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

2. மகிமையான ஐசுவரியத்தை காண்பாய்
எபேசியர் 3:15
நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

எபேசியர் 3:16
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,

எபேசியர் 3:17
விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,

எபேசியர் 3:18
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;

எபேசியர் 3:19
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபேசியர் 3:20
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

எபேசியர் 3:21
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும்உ ங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார்.  கிறிஸ்து உங்கள் இதயத்தில் விசுவாசத்தின் மூலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை அன்பால் கட்டப்படவும், அன்பில் வல்லமையாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.  நீங்களும் தேவனின் பரிசுத்தமான மக்களும் உயர்ந்த கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும்.  அவரது அன்பு எவ்வளவு அகலமானது, எவ்வளவு நீளமானது, எவ்வளவு உயரமானது, எவ்வளவு ஆழமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர். தேவனின் வல்லமை நமக்குள் உள்ளது.  சபையிலே இயேசு கிறிஸ்துவின் மூலமாக எப்போதும் தலைமுறை தலை முறைக்கும் எல்லாக் காலங்களிலும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென். மகிமையின் தேவன் உங்களோடு இருப்பதினால் அவர் உங்களை ஆசிர்வதிப்பார்.
3. மகிமையான காவலை காண்பாய்
ஏசாயா 4:4
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.

ஏசாயா 4:5
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும் அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.

தன் ஜனங்களோடு இருப்பதை நிரூபிப்பார். அந்நாளின் பகலில், தேவன் புகை மேகத்தை தோன்றச் செய்வார். இரவில், தேவன் ஒளிரும் நெருப்புச்சுடரையும் தோன்றச் செய்வார். இச்சாட்சிகள் வானத்தில் ஒவ்வொரு கட்டிடத்தின் மேலும் சீயோன் மலையில் நடைபெறும் ஒவ்வொரு ஜனங்கள் கூட்டத்தின் மேலும் தோன்றும், ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவர்களைப் பாதுகாக்க ஒரு மூடி அமையும்.

நீங்கள் எல்லோரும் அவருடைய மகிமையின் பிள்ளைகள் நீங்கள் அவருடைய சபையாய் இருக்கிறீர்கள் ஆமென். 

No comments:

Post a Comment