Wednesday, August 17, 2016

கர்த்தரை எக்காலத்திலும் எப்போதும் துதிக்க வேண்டும்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title:கர்த்தரை எக்காலத்திலும் எப்போதும் துதிக்க வேண்டும் 
Date: 14:08:2016
Speaker: Pastor Micheal

Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Pastor Michael
" கர்த்தரை எக்காலத்திலும் எப்போதும் துதிக்க வேண்டும் "

சங்கீதம் 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

துதியினால் மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். கர்த்தருடைய துதி எப்பொழுதும் நம் வாயினில் இருக்குமென்றால் மூன்று விதமான காரியங்களில் துதியின் மகத்துவத்தை நாம் அறியலாம்.

1. துதியினால் பொல்லாத ஆவி நீங்கும்
2. துதியினால் சிங்கத்தின் வாய்க் கட்டப்படும்
3. துதியினால் கட்டுகள் கழன்றுப் போகும்

கர்த்தரை எக்காலத்திலும் துதிக்கிறவர்கள் இந்த மூன்று விதமான காரியங்களை செய்வார்கள்.

சங்கீதம் 18:49 
இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.

கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன்.  உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.

கர்த்தரை நீங்கள் பாடி துதிக்க வேண்டும் பரிசுத்தமாய், விசுவாசமாய் கர்த்தரை பாடி துதிக்க வேண்டும். நம்மை ஆண்டவர் படைத்ததின் நோக்கமே துதிதான்.

1. துதியினால் பொல்லாத ஆவி நீங்கும்
I சாமுவேல் 16:15
அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.

I சாமுவேல் 16:16
சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.

I சாமுவேல் 16:17
சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.

I சாமுவேல் 16:18
அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
I சாமுவேல் 16:19
அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.

I சாமுவேல் 16:20
அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.

I சாமுவேல் 16:21
அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.

I சாமுவேல் 16:22
சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான்.

I சாமுவேல் 16:23
அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

அந்த நாட்களில் தாவீது சுரமண்டலத்தை எடுத்துப் பாடிகொண்டே இருப்பார். எப்பொழுது நேரம் கிடைத்தாலும் சரி, ஒரு நாள் உடன்படிக்கைப் பெட்டி எருசேலமில் வந்த பொழுது தன் வஸ்திரம் கழன்று விழுவது கூட அறியாமல் அபிஷேகத்தில் நிரம்பி பாடிக் கொண்டிருந்த மனிதன் தான் தாவீது.

இந்த சம்பவம் நடந்த காலத்தில் தாவீது வாலிபனாய் இருந்தார். அப்பொழுது கீழ்படியாமையின் நிமித்தமாய் பொல்லாத ஆவியை ஆணடவர் சவுலுக்குள்ளே அனுப்புகிறார். இந்த சவுல் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட மனுஷன்.

அடுத்ததாக தேவனால் தெரிந்துக்கொண்ட மனுஷன் யாரென்று கேட்டால் அவர் தான் தாவீது.  சவுல் இஸ்ரவேலில் இருக்கிறார். தாவீதோ பெத்லகேமிலே இருக்கிறார். ஒரு ஊழியக்காரர் தாவீதைப் பற்றி சவுலிடம் சொல்கிறார். “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது மகனுக்கு நன்றாக சுரமண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான்.

உடனே சவுல் தாவீதை அழைத்துவர சொல்கிறார். தாவீது சுரமண்டலத்தை எடுத்துப்பாடி வாசித்த வேலையிலே சவுலை விட்டு அந்தப் பொல்லாத ஆவி நீங்கும் படியாய் செய்தார். கர்த்தருக்குப் பிடித்த இசைக்கருவி எதுவென்று கேட்டால் சுரமண்டலமும், வீணையும் தான். அதை வாசித்தவன் தான் லூசிபர். மிகாவேலும், லூசிபரும் இரண்டு பிரதானமான தூதர்கள் ஆவார்கள். லூசிபர் அதில் தலைமை வாய்ந்தவன். கர்த்தரைப் பிரியப்படுத்துவது மட்டுமே அவனுடையப் பணியாகும். ஒருகட்டத்தில் லூசிபர் மேட்டிமைப் பாராட்டினதினால் கர்த்தர் அவனை தள்ளிவிட்டு விடுகிறார்.

ஆனால் இங்கு தாவீது சுரமண்டலத்தை எடுத்து வாசித்த பொழுது சவுலிடம் இருந்த பொல்லாத ஆவி நீங்கும்படி கர்த்தர் கிருபைப் பாராட்டினார். நீங்கள் கர்த்தரை துதித்துப் பாடும் பொழுதும் பொல்லாத ஆவிகள் ஓட்டம் எடுக்கும்.

நீங்களும் கர்த்தரை துதித்துப் பாடி அவரை உயர்த்த உயர்த்த, கர்த்தரை மகிமைப் படுத்த படுத்த அசுத்த ஆவிகள் உங்களை விட்டு நீங்கிப் போகும்.

2. துதியினால் சிங்கத்தின் வாய்க் கட்டப்படும்
தானியேல் 6:16
அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.

அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். அரசன் தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான்.

தானியேல் கர்த்தரை இடைவிடாமல் துதிப்பவராகவும், பக்தி வைராக்கியம் உடையவராயும் இருந்தார்.

தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

தானியேல் 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். அரசே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான்.

அரசனான தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான்.

துதிக்கிறவர்களுக்கு ஒரு சேதமும் வராது. உங்களுக்கு தெரியாமல் பிசாசானவன் பல சிங்கங்களைப் போல பலவிதமான பிரச்சினைகளை உங்களுடைய வாழ்க்கையில் முன்பாக வைக்கிறான்.

நீங்கள் கர்த்தரை நோக்கிப் பார்த்து துதித்தாலேப் போதும் நம் தேவனாகிய கர்த்தர் நம் வாழ்க்கையை குலைக்க வருகிற  பிசாசின் சூழ்ச்சிகளை கட்டிவிடுவார்.

I பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

இங்கே சிங்கத்தைப் பற்றி தெளிவாய் சொல்லப்பட்டுள்ளது. உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். 

நம்முடைய துதியானது தானியேலைப் போல வல்லமையாகவும், வைராக்கியம் உள்ளதாயும் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் நம் சத்துருவின் வாய்க் கட்டப்படுவது நிச்சயம்.

3. துதியினால் கட்டுகள் கழன்றுப் போகும்
அப்போஸ்தலர் 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 16:26
சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

அப்போஸ்தலர் 16:27
சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.

நம்மை சிறைவைக்கும் படி பிசாசு எப்பொழுதுமே திட்டம் தீட்டி கொண்டே இருப்பான். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விதமான சிறையிருப்பு இருக்கிறது. இங்கு பவுலும், சீலாவும் கர்த்தரை துதித்துப் பாடிக்கொண்டிருக்கும் பொழுது ஆண்டவர் அந்த சிறைச்சாலையின் அஸ்திபாரத்தையே அசைத்தார். அதாவது பிசாசசுடைய அஸ்திபாரத்தை அசைக்கிறார். நீங்களும் உங்களுடைய சிறையிருப்பின் மத்தியில் கர்த்தரை நோக்கி துதிக்கும் பொழுது இதுவே நடக்கும்.

என்னதான் பிசாசு உன் குடும்பத்தை கட்டி முறியடித்து வைத்திருந்தாலும் சரி, உங்கள் எதிர்காலத்தை நாசப்படுத்தும் படியாய் இருந்தாலும் சரி, அவன் உங்களுக்கு விரோதாமாய் எதை செய்தாலும் சரி, நீங்கள் துதித்தால் பிசாசுடைய அஸ்திபாரத்தை அசைத்து கர்த்தர் உங்கள் சிறையிருப்பை நீக்கிப் போடுவார்.

நீங்கள் துதித்துப் பாடினால் உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா கட்டுகளும் கழன்றுப் போவதை உங்கள் கண் காணும்.

No comments:

Post a Comment