கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
Date: 28:08:2016
Speaker: Pastor Micheal
Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Pastor Michael
" என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் "
யாத்திராகமம் 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
என்னையன்றி என்றால் கர்த்தர் ஒருவரே நம் தேவன். கர்த்தர் சொல்கிறார். என்னையன்றி உங்களுக்கு வேறு தேவர்களை உருவாக்க வேண்டாம். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்கிறார். எவற்றையெல்லாம் நாம் உண்டாக்க கூடாது என்பதை நாம் பார்க்கலாம்.
1. யாதொரு விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம்
யாத்திராகமம் 20:4
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும்
உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது, ஏனென்றால் கர்த்தர் ஒருவரே இந்த வானத்தையம், பூமியையும் உண்டாக்கினவர்.
ஆதியாகமம் 1:4
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
ஆதியாகமம் 1:5
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று
பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:6
பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் 1:7
தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும்
ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது
அப்படியே ஆயிற்று.
ஆதியாகமம் 1:8
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
ஆதியாகமம் 1:9
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஆதியாகமம் 1:10
தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதியாகமம் 1:16
தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார். பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார். தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது.
தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும். பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார்.
விக்கிரகத்தினால் சாலமோன் மன்னனின் அழிவு
உலகிலேயே அதிக ஞானமுடையவர் என வேதம் சாலமோன் மன்னனைக் குறிப்பிடுகிறது. கடவுள் ஒரு முறை அவருக்குக் கனவில் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும்” என கேட்டபோது “மக்களை வழிநடத்த ஞானம் கொடுங்கள்” என கேட்டார் மன்னன். கடவுள் மகிழ்ந்தார். செல்வமோ, புகழோ கேட்காததால் அவருக்கு ஞானத்தையும், கூடவே செல்வத்தையும், புகழையும் கொடுத்து கடவுள் அவரை மிகப்பெரிய நபராய் மாற்றினார்.
ஆனால் பிற்காலவாழ்வில் ஞான வாழ்வில் அவரது ஈடுபாடு குறைந்தது. தன்னுடையபிறநாட்டு மனைவியரின் தூண்டுதலால் பல தெய்வங்களுக்குப் பீடம்எழுப்பி பலி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இறைவனுக்கு வெகு அருகில், இறைவனை விட்டு வெகு தொலைவில் என இரண்டு விதமான எல்லைகளையும் கண்ட வாழ்க்கையாக சாலமோன் மன்னனின் வாழ்க்கை அமைந்து விட்டது. இறைவனின் மீதான பிணைப்பிலிருந்து விலகினால் எத்தனை உயரத்தில் இருப்பவருக்கும், துயரத்தின் வாழ்க்கை அமையும் என்பதையே அவருடைய வாழ்க்கை சொல்கிறது
இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் விக்கிரகம் என்று சொல்லும் பொழுது இயேசுவை கிறிஸ்துவை காட்டிலும் எவையெல்லாம் பெரிதாக கருதப்படுகிறதோ அவைகளே இந்த புதிய ஏற்பாட்டு காலத்தின் விக்கிரகங்கள் ஆகும்.
2. விக்கிரகங்களை நமஸ்கரிக்க வேண்டாம்
யாத்திராகமம் 20:5
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற
நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப்
பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம்
தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன்.
கர்த்தருக்கு கீழ்படிந்து அவருக்கு உத்தமமாய் நடப்பவர்களை 1000 தலைமுறைகள் வரை விசாரிக்கறவராய் திகழ்கிறார். ஆண்டவர் மோசேயிடம் கண்டிப்பாக இவற்றையெல்லாம் நீங்கள் செய்ய கூடாது என்று சொல்கிறார்.
யாத்திராகமம் 20:23
நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.
யாத்திராகமம் 20:24
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன்
மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான்
என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து,
உன்னை ஆசீர்வதிப்பேன்.
பொன் கன்றுக்குட்டி
மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே வழி நடத்தி வந்தான். இப்போது அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்பாகச் சென்று வழி நடத்துவதற்குச் சில தேவர்களை உருவாக்கும்” என்றனர்.
ஆரோன் ஜனங்களிடமிருந்து அவற்றை வாங்கி, அதைப் பயன்படுத்தி ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை வார்த்தான். பின்பு ஒரு உளியைப் பயன்படுத்தி, அந்த சிலையைச் செதுக்கினான். பின் அதை பொன் தகட்டால் மூடினான். அப்போது ஜனங்கள், “இஸ்ரவேலரே, இந்த தெய்வங்களே உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தன!” என்றனர்.
அவர்கள் மிருகங்களைக் கொன்று தகன பலிகளையும், சமாதானபலிகளையும் படைத்தனர். ஜனங்கள் தின்று, குடித்துக் களிக்க உட்கார்ந்தனர். பின்பு எழுந்து மிகுதியான அநாகரீகத்தில் ஈடுபட்டனர்.
மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். அவன் கற்பல கைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின.
மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். மற்ற அனைவரும் மடிந்துப் போயினர்.
யாத்திராகமம் 20:25
எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின
கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை
அசுசிப்படுத்துவாய்.
யாத்திராகமம் 20:26
என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.
யாத்திராகமம் 21:1
மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டிய பிரமாணங்களாவன:
யாத்திராகமம் 21:2
எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன்.
யாத்திராகமம் 21:3
ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்;
விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப்
போகக்கடவள்.
யாத்திராகமம் 21:4
வன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்தும், அவள் அவனுக்கு
ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும்
அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம்
ஒன்றியாய்ப் போகக்கடவன்.
கர்த்தர் நீங்களே ஆலயமாக இருக்கிறீர்கள் என்கிறார். அதனாலே நீங்கள் வானத்திலேயும், பூமியிலும், தண்ணீரிலும் எந்த ஒரு விக்கிரகத்தையும் உண்டாக்க வேண்டாம். நீங்கள் கிறிஸ்தவனாய் இருந்து கர்த்தருக்குள் வாழ்ந்து எல்லோரிடத்திலும், எல்லா காரியத்திலும் சமாதானமாக வாழ்ந்து வந்தால் ஆண்டவர் உங்களிடத்தில் வந்து ஆசிர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.
நீங்கள் எதை நமஸ்கரிக்கிறீர்களோ அதனுள் ஒரு வல்லமை புறப்பட்டுப் போகும். அது ஏனென்றால் நம் வாயின் வார்த்தையில் கர்த்தர் வல்லமையை வைத்திருக்கிறார். நீங்கள் ஒருவனைப் பார்த்து சபித்தால், அவன் சபிக்கப்படுவான். நீங்கள் ஒருவனை ஆசிர்வதித்தால் அவன் ஆசிர்வதிக்கப்படுவான்.
எனவே நாம் விக்கிரகங்களை விட்டு விலகி கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை அறிந்து கர்த்தருக்குப் பிரியமாக வாழ நம்மை அர்ப்பணிப்போம். தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment