கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: இனி காலம் செல்லாது
Date: 04:09:2016
Speaker: Pastor Micheal
Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Pastor Michael
" இனி காலம் செல்லாது "
வெளி 10:6
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய
தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின்
நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று
இனி காலம் செல்லாது, கர்த்தருடைய வருகை மிக சமீபமாயிருக்கிறது
மாற்கு 1:15
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
கர்த்தருடைய வருகை சமீபித்திருக்கிறது என்று நாம் விசுவாசிக்க வேண்டும். வேதம் இவ்வாறு சொல்கிறது சுவிசேஷத்தை நம்புங்கள். காலம் நிறைவேறிற்று, எவ்வாறு காலம் நிறைவேறிற்று என்பதை நாம் காணப் போகிறோம்.
மத்தேயு 3:2
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.
உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று யோவான் ஸ்நானகன் போதனை செய்தான்.
கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்; அவரது பாதையை சீர்ப்படுத்துங்கள்’ என்று வனாந்தரத்தில் ஒருவன் சத்தமிடுகிறான் என தீர்க்கதரிசியாகிய ஏசாயா குறிப்பிட்டது இந்த யோவான் ஸ்நானகனைப் பற்றிதான்.
இயேசு கிறிஸ்து வரப்போகிறார் என்று யோவான்ஸ்நானகன் தீர்க்கதரிசனமாய் சொல்கிறார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார் என்று அப்போஸ்தலர 10:38 ல் சொல்லப்பட்டுள்ளது.யோவான் ஸ்நானகனைப் பற்றி ஏற்கெனவே பழைய ஏற்பாட்டில்சொல்லப்பட்டுள்ளது. இந்த தீர்க்கதரிசனத்தை கர்த்தர் மத்தேயுவில் கர்த்தர் நிறைவேற்றுகிறார்.
மத்தேயு 24:7
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும்
எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில்
உண்டாகும்.
நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். இராஜ்யங்கள் ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொள்ளும். மக்களுக்கு உண்ண உணவு கிடைக்காத காலம் வரும். வெவ்வேறு இடங்களில் பூகம்பங்கள் தோன்றும்.
இவையெல்லாம் இயெல்லாம் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு அடையாளமாக இருக்கின்றன.
இங்கே பல இடங்களில் பூமி அதிர்ச்சிகள் ஏற்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கு அடையாளமாக ஜப்பானில் 2011 ஆம் ஆண்டில் ஏற்ப்பட்ட நிலநடுக்கமும் இதன் விளைவாக உணடான ஆழிப்பேரலைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். கிட்டதட்ட ரிக்டர் அளவுகோலில் 9.0 என ஆறுநிமிடம் கடலில் 30 கிமீ ஆழத்தில் இந்த பயங்கர பூகம்பம் ஏற்ப்பட்டது.
இதன் விளைவாக ஜப்பான் கடற்கரைகளை சுனாமி அலைகள் தாக்கின, சுமார் 133 அடி அளவுக்கு ஆக்ரோஷமாக இந்த அலைகள் சீறிப்பாய்ந்தன. இந்தப் பேரழிவில் சுமார் 15,894 பேர் தங்கள் உயிரை இழந்தனர். 6,152 மக்கள் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காணமால் போயினர். இந்த அழிவால் 122 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மிகுந்த சேதம் ஏறப்பட்டது.
மாற்கு 13:8
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும்
எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும்
கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
லூக்கா 21:11
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும்
உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும்
உண்டாகும்.
பூமியிலே கர்த்தருடைய வருகைக்கு அடையாளமாக பல இடங்களில் பூமி அதிர்ச்சிகள் வசனங்களில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.
மாற்கு 13:18
நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
மாற்கு 13:19
ஏனெனில், தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும்
சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்
அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
ஜலத்தினாலும் பாதிப்புகள் அரங்கேறியுள்ளன. உலகின் பல இடங்களில் இயல்புக்கு மாறாகப் பொழியும் மழையினால் ஏற்ப்பட்டு வருகின்ற பாதிப்புகளை நீங்கள் அறிந்திருக்ககூடூம். இதுபோலதான் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உத்ரகாண்ட் இல் ஏற்ப்பட்ட அழிவு அனைவரும் அறிந்த ஒன்று.
இங்கே வானத்தின் மதில்கள் திறக்கப்பட்டு மிகப்பெரிய மழைப்பொழிவு உண்டாயிற்று. 2013 ஜீன் மாதம் 14 முதல் 17 வரை மழையானது கொட்டி தீர்த்தது. ஆகாய சுனாமி என்று சொல்லும் அளவிற்கு இதன் தாக்கம் இருந்தது ஏனெனில் சாதரணமாகப் பெய்யும் மழைப்பொழிவை காட்டிலும் 375 மடங்கு அதிகமாக மழையானது கொட்டி தீர்த்தது இதனால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர் வெள்ளப்பெருக்கால் அநேக வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
வெளி 8:1
அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
வெளி 8:2
பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
வெளி 8:3
வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப்
பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த
பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி
மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
வெளி 8:4
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின்
புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
வெளி 8:5
பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால்
நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும்,
மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.
வெளி 8:6
அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
அதேப் போல் நமது அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றி அறிவீர்கள். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த பூகம்பம் பதிவானது. இதனுடைய தாக்கம் நேபாளத்தின் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, வங்கதேசத்திலும் உணரப்பட்டது.
ஏறத்தாழ 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மிகுந்தப் பொருட்சேதம் ஏற்ப்பட்டது. இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து 459 தடவைகள் Aftershocks என சொல்லப்படும் நிலஅதிர்வுகள் ஏற்ப்பட்டன. இதில் 3.5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். 8,964 பேர் இறந்தனர், 21,952 பேர் காயமடைந்தனர்.
வெளி 8:7
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும்
அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில்
மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
அடிக்கடி நிகழும் காட்டுத்தீகளும் கர்த்தருடைய வருகைக்கு அடையாளமாக நடக்கின்றன. இந்த ஆண்டு மே மாதம் கனடாவில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயால் 5,89,552 ஹெக்டேர் பகுதிகள் எரிந்து நாசமாயின. 2,400 வீடுகள் தீயில் கருகின மிகுந்த பொருட்சேதம் ஏற்ப்பட்டது ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
லூக்கா 21:11
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
இதற்கு அடையாளமாக ரஷ்யாவில் 2013 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வானத்திலிருந்து விண்கல் தாக்கியது இதனால் பல கட்டிடங்கள், தொழிற்சாலைகளின் மேற்கூரைகள் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தது.
இதுபோலவே சமீபத்தில் இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வேலூர் மாவட்டத்தில் இதுப்போனறதொரு நிகழ்வு ஏற்ப்பட்டது. இதன் காரணமாக 2 அடி ஆழத்திற்கு பளளம் உண்டானது, இந்த சம்பவத்தில் அந்த கல்லூரியின் பேரூந்து ஓட்டுனர் உயிரிழந்தார்.
லூக்கா 21:6
அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
லூக்கா 21:35
பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
லூக்கா 21:36
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி,
மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு,
எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது.
எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
இனி சம்பவிக்க இருக்கிற சம்பவங்களில் இருந்து நீங்கள் தப்ப வேண்டுமானால் தேவனுடையப் பார்வைக்கு நீங்கள் உத்தமனாய் இருக்க வேண்டும், எனவே நாம் விழித்திருந்து ஜெபம் செய்ய வேண்டும் ஆகையால் அன்பான தேவ ஜனமே விழித்திருங்கள் இனி காலம் செல்லாது.
No comments:
Post a Comment