கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்
Date: 18:09:2016
Speaker: Pastor Micheal
Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Pastor Michael
" நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் "
ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
கர்த்தர் உங்களை பெலப்படுத்தி சகாயம் பண்ண போகிறார். நாம் சில காரியங்களில் பலவீனமாக உள்ளோம் என்று சொன்னால் கர்த்தர் சொல்கிறார். நான் உங்களை பெலப்படுத்துவேன். கவலையில் இருக்கிறீர்களா ? அந்த கவலையை போக்கி பெலப்படுத்துவார். சிற்றின்பத்தில் சிக்கி தவிக்கிறீர்களா? அதில் இருந்து போக்கி பெலப்படுத்துவார். இவைகளில் இருந்து உங்களை விடுவிக்க கர்த்தர் உதவி செய்ய போகிறார்.
வேதத்திலே கர்த்தர் அநேக தடவைகள் தன் பிள்ளைகளுக்கு உதவி செய்கிறார். சாகப்போகிற நிலையில் இருந்தாலும் உயிரை மீட்டிருக்கிறார். கடன் தொல்லைகளில் சிக்கி தவிக்கிறவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். மரண கன்னிகள் பல வந்தாலும் அதில் இருந்து விலக்கி நமக்கு சகாயம் செய்திருக்கிறார்.
இங்கு நாம் வேதத்தில் மூன்று கர்த்தர் எவ்வாறு சகாயம் செய்திருக்கிறார் என்பதை காண்போம். இந்த மூன்று பேருமே அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பெலவீனம் அடைகிறார்கள். இவர்கள் பெலம் உடைவார்களாய் காணப்பட்டவர்கள் தான்.
ஆஸ்தி, சம்பத்து, போஷாக்கோடு இருந்த இவர்கள் பெலவீனம் ஆனார்கள். பொருளாதார வீழச்சியிலே தங்களுடைய பெலனை இழந்து போனார்கள்.அவர்களை பற்றித்தான் நாம் இங்கு காணப்போகிறோம். அவர்களுக்கு எப்படி கர்த்தர் பெலப்படுத்தி உதவி செய்தார் என்பதை பார்க்க போகிறோம். கர்த்தர் உங்களுக்கும் அவ்வாறே செய்வாராக.
I இராஜாக்கள் 17:10
அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
I இராஜாக்கள் 17:11
கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
I இராஜாக்கள் 17:12
அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.
அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் மகனும் மரிக்கவேண்டும்” என்றாள்.
கர்த்தர் காரணம் இல்லாமல் எலியாவை அங்கு அனுப்பவில்லை. முதலில் அவள் விஷமுள்ள அடையை சமைத்து சாப்பிடுவதற்கு விறகுகளை சேகரிக்கிறாள். அந்த அளவிற்கு அங்கு பஞ்சமானது நிலவியது. பொருளாதார வீழ்ச்சியினால் சகா கிடந்த அவர்களை கர்த்தர் எலியாவின் மூலமாக காப்பாற்றுகிறார்.
அத்தகைய தருணங்கள் நம் வாழ்க்கையிலும் ஏற்படுவது உண்டு. யாரோ சிலர் சாக முயலும் போது நாம் சொன்ன அந்த ஆறுதலான கர்த்தரின் வசனங்கள் அவர்களை தேற்றி அவர்களை காப்பாற்றி இருக்கலாம். கர்த்தர் ஒரு ஆத்துமாவை காப்பாற்றி உதவி செய்ய எப்படி வேண்டும் ஆனாலும் கடந்து வருவார்.
1. சாகிறவனை கர்த்தர் வாழவைப்பார்
I இராஜாக்கள் 17:13
அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.
I இராஜாக்கள் 17:14
கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம்.
இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை விசாரிக்கறவர். எந்த சூழ்நிலையிலும் அவர் கடந்து வந்து உன்னை விசாரித்து உங்களுடைய குறைகள் எல்லாம் நிறைவாக்கி உங்களை வாழவைப்பார். கடினமான பஞ்சத்திலும் நீங்கள் சகமாடீர்கள்.ஏனென்றால் வசனம் சொல்கிறது சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளாய் நாம் இருப்பதினால் ஒரு நன்மையையும் நமக்கு குறைவு படாது.
2. கடனிலிருந்து கர்த்தர் விடுதலையை கொடுப்பார்
II இராஜாக்கள் 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
II இராஜாக்கள் 4:2
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.
II இராஜாக்கள் 4:3
அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
II இராஜாக்கள் 4:4
உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
II இராஜாக்கள் 4:5
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.
II இராஜாக்கள் 4:6
அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.
தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அந்த தீர்க்கதரிசி மரித்துப்போயிருந்தான். அவள் எலிசாவிடம் வந்து, “என் கணவன் உங்கள் ஊழியனாக இருந்தார். இப்போது மரித்துப்போனார். அவர் கர்த்தரை மதித்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருவனிடம் பணம் வாங்கியிருந்தார். அதற்காக இப்போது அந்த ஆள் என் இரண்டு பிள்ளைகளை அடிமையாக்கிக்கொள்ள வந்திருக்கிறான்!” என்று அழுதாள். அதற்கு எலிசா, “நான் எவ்வாறு உதவமுடியும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று சொல்” என்று கேட்டான். அப்பெண்ணும், “என் வீட்டில் எதுவுமில்லை. ஒரு ஜாடி எண்ணெய் மட்டும் உள்ளது” என்றாள்.
உடனே எலிசா அவளிடம், “நீ போய் உனது பக்கத்து வீட்டுக்காரர் அனைவர்களிடமும் கிண்ணங்களைக் கடனாக வாங்கி வா. அவை காலியாக இருக்கட்டும். நிறைய கிண்ணங்களை கடன் வாங்கு. உன் வீட்டிற்குள் போய் கதவுகளை மூடிக்கொள். வீட்டிற்குள் நீயும் உன் பிள்ளைகளும் மட்டும் தான் இருக்கவேண்டும். ஒலிவ எண்ணெயை எல்லாக் கிண்ணங்களிலும் ஊற்றி நிரப்ப அது நிறைந்ததும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அப்புறம் வை” என்றான்.
எனவே அந்தப் பெண் எலிசாவிடமிருந்து கிளம்பிப்போய் வீட்டுக்கதவுகளை அடைத்துக்கொண்டாள். அவளும் அவள் பிள்ளைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவளது மகன்கள் அவளிடம் கிண்ணங்களைக் கொண்டுவந்தனர். அவற்றில் அவள் எண்ணெயை ஊற்றினாள். அனைத்து கிண்ணங்களும் நிரம்பியபோது அவள் தன் மகனிடம், “இன்னொரு கிண்ணம் கொண்டு வா” என்றாள்.
ஆனால் அவன் அவளிடம், “கிண்ணங்கள் வேறு எதுவுமில்லை” என்றான். அப்போது ஜாடியில் இருந்த எண்ணெயும் பெருகுவது நின்று போயிற்று
3. மரண கன்னியில் இருந்து கர்த்தர் காப்பாற்றுவார்
I இராஜாக்கள் 19:1
எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
I இராஜாக்கள் 19:2
அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.
I இராஜாக்கள் 19:3
அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
I இராஜாக்கள் 19:4
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,
I இராஜாக்கள் 19:5
ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்.
I இராஜாக்கள் 19:6
அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்.
எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.
எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.
பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான். எலியா தன்னருகில் தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.
இங்கே மூன்றாம் வசனத்தில் ஒரு தீர்க்கதரிசி, கர்த்தருடைய ஊழியக்காரர், கர்த்தருக்காக வாழ்ந்தவர் என்னபண்ணுகிறார் என்றால் தன்னுடைய உயிரை காப்பாற்ற தப்பி ஓடுகிறார். சில நேரங்களில் பிசாசானவன் பயமான மரண கன்னியை நமக்கு வைத்து விடுவான். பிசாசானவன் நம் பிராணனை வாங்க வந்தாலும் கர்த்தர் தம் பிள்ளைகளை பெலப்படுத்தி சகாயம் செய்வார். உங்களை சம்பூர்ணமாய் திருப்தி ஆக செய்து எல்லா தீங்கிற்கும் நம்மை விலக்கி காத்து நம்மை வழிநடத்துவார் ஆமென்.
No comments:
Post a Comment