கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய்
Date: 18:09:2016
Speaker: Brother Micheal
Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Pastor Michael
" நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய் "
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
சங்கீதம் 50:15 இல் கர்த்தர் சொல்கிறார் நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் அதாவது பல வருடங்களாக ஒருவன் பாவத்திலே இருக்கிறான் என்று சொன்னால் அதிலிருந்து மீள முடியாமல், பல வருடங்களாக ஒருவர் படுத்த படுக்கையாய் இருக்கிறார் அதிலிருந்து எழுந்திரிக்க முடியாமல், பல வருடங்களாகவே என் கணவர் குடித்துக்கொண்டு இருக்கிறார் அதனை விட முடியாமல் இருக்கிறார் அப்படி இருக்கிறவர்களை பார்த்து கர்த்தர் சொல்கிறார் நான் உன்னை விடுவிப்பேன். நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள் ஆமென்.
நம் தேவனாகிய கர்த்தரிடத்தில் உள்ள சிறப்பு என்னவென்றால் அவர் ஒருவரை தொடவேண்டும், பரிசுத்தப்படுத்த வேண்டும், சுகப்படுத்த வேண்டும் அல்லது விடுதலை அளிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் போதும் அதை யாராலும் தடுக்க முடியாது, அதனை மாற்ற முடியாது .
கர்த்தர் சொல்கிறார் நான் உன்னை விடுவித்து நல்ல பாத்திரமாக மாற்றி இந்த உலகத்திற்கு உன்னை மகிமையாய் வைப்பேன் நீ என் நாமத்தை மகிமைப்படுத்துவாய் என சொல்கிறார்.
பல போதகர்கள், சுவிசேஷர்கள் வாழ்க்கையை உதாரணமாக எடுத்து கொண்டால் அவர்கள் எல்லோரும் இப்பொழுது உலகம் முழுவதும் பல ஊழியங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் கடந்த காலத்தை எடுத்து கொண்டால் தீயபழக்கத்திற்கு அடிமையாய் இருந்திருப்பார்கள் அல்லது கர்த்தருக்கு விரோதமான காரியங்களை செய்து வந்திருப்பார்கள் ஆனாலும் சர்வ வல்லமையுள்ள நம் தேவனாகிய கர்த்தர் அவர்களை விடுவித்து தன்னுடைய சுவிசேஷத்தை இந்த உலகத்திற்கு அறிவிக்க கர்த்தர் மகிமையை அவர்களை பயன்படுத்தி வருகிறார். அவர்களுடைய மகிமையான சாட்சிகளின் மூலமாக அநேகர் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபை செய்திருக்கிறார்.
சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்
ஏசாயா 51:14
சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
கர்த்தர் சொல்கிறார் சிறைப்பட்டு போனவனை தீவிரமாக விடுதலை ஆக்குவேன் என்று அது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு மாற்றம், ஒரு இமை பொழுதில் உங்களது சிறையிருப்பை மாற்ற கர்த்தர் வல்லவராயிருக்கிறார், நம் தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் அவர் உங்கள் சிறையிருப்பை நீக்கிப்போடுவார்.
ஏசாயா 51 ஆம் அதிகாரம் 9 முதல் 23 வரையிலான வசனங்களில் நீங்கள் வாசித்தீர்களே ஆனால் கர்த்தர் இவாறாய் நமக்கு உரைக்கிறார்.
தேவனுடைய வல்லமை அவரது ஜனங்களைக் காப்பாற்றும்
எழும்பு, எழும்பு, பலமாகு! உனது பலத்தைப் பயன்படுத்து, நீண்ட காலத்துக்கு முன்பு நீ செய்தது போன்றும் பழங்காலத்தில் நீ செய்ததுபோன்றும் நீரே ராகாப்பைத் தோற்கடிக்க வல்லமையாக இருந்தீர். நீர் அந்த பயங்கர பிராணியைத் தோற்கடித்தீர். கடலின் தண்ணீர் வறண்டுபோவதற்குக் காரணமாக இருந்தீர்! நீர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீரை வற்றச்செய்தீர்! கடலின் ஆழமான இடங்களில் சாலைகளை அமைத்தீர். சாலையைக் கடந்த உமது ஜனங்கள் காப்பாற்றப்பட்டனர்.
கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார். அவர்கள் சீயோனுக்கு மகிழ்ச்சியோடு திரும்புவார்கள். அவர்கள மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களது மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் என்றென்றும் இருக்கிற கிரீடம்போல் இருக்கும்.
அவர்கள் மகிழ்ச்சியோடு பாடுவார்கள். அனைத்து துக்கங்களும் வெளியே போகும். கர்த்தர் கூறுகிறார், “உனக்கு ஆறுதல் தருகிற ஒருவர் நான் மட்டுமே. எனவே, நீங்கள் ஜனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும். அவர்கள் வாழவும் மரிக்கவும் கூடிய ஜனங்கள் தான்.அவர்கள் மானிடர்கள் மட்டுமே. புழுக்களைப்போலவே மரிக்கிறார்கள்.
கர்த்தர் உன்னைப் படைத்தார்! அவர் தமது வல்லமையால் பூமியைப் படைத்தார்! அவர் தமது வல்லமையால் பூமிக்கும் மேல் வானத்தை விரித்து வைத்தார். ஆனால், நீ அவரையும் அவரது வல்லமையையும் மறந்துவிட்டாய். எனவே, நீ எப்பொழுதும் கோபங்கொண்ட உன்னைப் பாதிக்கும் ஜனங்களுக்குப் பயப்படுகிறாய். அவர்கள் உன்னை அழிக்கத் திட்டமிடுகிறார்கள்.ஆனால் இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். சிறையிலுள்ள ஜனங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். அந்த ஜனங்கள் சிறைக்குள் மரித்து அழுகமாட்டார்கள். அந்த ஜனங்கள் போதிய உணவைப் பெறுவார்கள்.
“நானே உனது தேவனாகிய கர்த்தர். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம் “எனது தாசனே! நீ சொல்லுவதற்குரிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன். நான் எனது கைகளால் உன்னை மூடி பாதுகாப்பேன். நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைக்க உன்னைப் பயன்படுத்துவேன். நான் உன்னைப் பயன்படுத்தி இஸ்ரவேலரிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்று சொல்லுவேன்”.
எழும்பு! எழும்பு! எருசலேமே எழும்பு கர்த்தர் உன் மீது மிகவும் கோபமாய் இருந்தார். எனவே, நீங்கள் தண்டிக்கப்பட்டீர்கள். உங்களுக்கான இந்தத் தண்டனையானது ஒரு கிண்ணம் விஷத்தை குடிக்க வேண்டியதுபோல இருந்தது. நீங்கள் அதைக் குடித்தீர்கள்.
எருசலேமில் பல ஜனங்கள் இருந்தனர். ஆனால், எவரும் அவளுக்காகத் தலைவர்கள் ஆகவில்லை. அவள் வளர்த்த அந்தப் பிள்ளைகளும் அவளை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டிகளாக வரமாட்டார்கள். துன்பங்கள் எருசலேமிற்கு இரு குழுக்களாக, அதாவது, திருடுதலும் உடைத்தலும் மற்றும் பெரும் பசியும் சண்டையும் என்று வந்தது.
நீ துன்பப்படும்போது எவரும் உதவி செய்யவில்லை. எவரும் உன்மீது இரக்கம்கொள்ளவில்லை. உனது ஜனங்கள் பலவீனர் ஆனார்கள். அவர்கள் தரையில் விழுந்து அங்கேயே கிடந்தார்கள். அந்த ஜனங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் மிருகங்களைப்போன்று வலைக்குட்பட்டிருந்தனர். அவர்கள் கர்த்தருடைய கோபத்திலிருந்து, மேலும் தண்டனையைப் பெற முடியாத அளவிற்கு தண்டிக்கப்பட்டனர். தேவன் மேலும் தண்டனை கொடுக்கப்போவதாய் சொன்னபோது, அவர்கள் மிகவும் பலவீனம் உடையவர்களாய் இருந்தனர்.
எருசலேமே, எனக்குச் செவிகொடு! குடிகாரனைப்போன்று நீ பலவீனமாய் இருக்கிறாய். ஆனால், நீ திராட்சைரசத்தை குடிக்கவில்லை. நீ, “விஷக் கோப்பையால்” பலவீனமாக இருக்கிறாய்.
உனது தேவனும், கர்த்தருமாகிய ஆண்டவர் அவரது ஜனங்களுக்காகப்போரிடுவார். அவர் உன்னிடம், “பார், விஷக்கிண்ணத்தை உன்னிடமிருந்து எடுத்துவிடுகிறேன். உன்னிடமிருந்து எனது கோபத்தை நீக்கிக்கொள்கிறேன். இனிமேல் எனது கோபத்தால் நீ தண்டிக்கப்படமாட்டாய்.
உன்னைப் பாதித்தவர்களைத் தண்டிக்க எனது கோபத்தைப் பயன்படுத்துவேன். அந்த ஜனங்கள் உன்னைக் கொல்ல முயன்றார்கள். அவர்கள், ‘எங்கள் முன்பு பணியுங்கள். நாங்கள் உன்னை மிதித்துச் செல்வோம்’ என்றனர். அவர்கள் முன்பு பணியுமாறு வற்புறுத்தினார்கள். பிறகு, உனது முதுகின்மேல் புழுதியைப்போன்று மிதித்துச் சென்றனர்! நீங்கள் நடந்து செல்வதற்கான சாலையைப்போன்று இருந்தீர்கள்.”
சிறைப்பட்டு போனவர்கள் யாராக இருந்தாலும் சரி கர்த்தர் தீவிரமாய் வந்து அவர்களை விசாரித்து விடுதலை பண்ணுவார். யாராக இருந்தாலும் சரி, வியாதியில் இருந்தாலும் சரி, தரித்தரித்தில் இருந்தாலும் சரி, வறுமையில் இருந்தாலும் சரி, கடனில் இருந்தாலும் சரி, மதுவுக்கு அடிமையாய் இருந்தாலும் சரி, புகைப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தாலும் சரி, கர்த்தர் தீவிரமாய் விரைந்து வந்து அவர் விடுதலை பண்ணபோகிறார் நீங்கள் அவருடைய நாமத்தை உலகமெங்கும் பறைசாற்ற போகிறீர்கள்.
ஏசாயா 52:1
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
ஏசாயா 52:2
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.
ஏசாயா 52:3
விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 52:4
பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 52:5
இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
விருத்த சேதனம் இல்லாதவன் யாரென்று கேட்பீர்களேயானால் அவன் தான் பிசாசு. உலகத்தின் மக்கள், உன் வீட்டை சூறையாடி பல விதமான சூழ்ச்சிகளை செய்து கொண்டு இருந்தாலும் கர்த்தர் சொல்லுகிறதாவது தீர்க்க தரிசன புத்தகத்தில் இனி அவன் உங்களிடத்தில் வருவதில்லை, உங்களிடத்தில் உள்ள தூசியை உதறி போடுங்கள். உங்களுக்கு என்று அலங்கார வஸ்திரம் ஒன்று உள்ளது அதனை தரித்து கொள்ளுங்கள்.
ஏசாயா 51:10
மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?
ஏசாயா 51:11
அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
ஏசாயா 51:12
நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?
பாவத்தை மன்னிப்பதற்கு கர்த்தரை தவிர வேறு யாரும் இல்லை. இயேசுவின் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட திருடன் சொல்கிறான். ஆண்டவரே என்னை நினைத்தருளுங்கள் என்று, அவன் இயேசுவின் இருதயத்தை கொள்ளை கொண்டு அவரை பூரிப்படைய செய்தான். உடனே இயேசு அவன் முன்பு செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து அந்த கள்வனை பரிசுத்தமாக்கி தன்னுடைய ராஜ்ஜியத்திலே சேர்த்து கொண்டார்.
ஏசாயா 54:2
உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.
ஏசாயா 54:3
நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
ஏசாயா 54:4
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
ஏசாயா 54:5
உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.
ஏசாயா 54:6
கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
ஏசாயா 54:7
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
ஏசாயா 54:8
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
நம் தேவன் ஒரு இமை பொழுது கை விட்டாலும் அவர் உங்கள் மீது எப்பொழுதும் நினைவாய் இருக்கிறார் அவருடைய அன்பு மாறாத அன்பு, உன் மீட்பர் உன்னை சேர்த்து கொள்வார். நித்திய கிருபையோடு உங்களுக்கு இறங்குவார். நீங்கள் எல்லோரும் அவரால் மீட்கப்பட்ட ஜனம்.
ஏசாயா 54:11
சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
ஏசாயா 54:12
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
ஏசாயா 54:13
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
ஏசாயா 54:14
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
பகைவர்கள் புயலைப்போன்று உனக்கு எதிரே வந்தார்கள். எவரும் உனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஆனால், நான் உன்னை மீண்டும் கட்டுவேன். நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன். நான் நீல ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அஸ்திபாரம் அமைப்பேன்.
சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன். நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன். உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.
உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார். உனது பிள்ளைகள் உண்மையான சமாதானத்தை அடைவார்கள். நீ நன்மையால் கட்டப்படுவாய். எனவே நீ கொடுமை மற்றும் அச்சத்திலிருந்து காப்பாற்றப்படுவாய். உனக்குப் பயப்படுவதற்கு எதுவுமில்லை. உன்னை எதுவும் பாதிக்காது. என்று தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்.
சிறுமை பட்டவர்களிடத்தில் திகிலும், பயமும் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. நம் தேவனாகிய கர்த்தர் உங்களிடத்தில் மிக தீவிரமாக வந்து உங்கள் சிறையிருப்பை நீக்கி போடுவார் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். நீங்கள் சர்வ வல்ல தேவனை மகிமைப்படுத்துவீர்கள். ஆமென். அல்லேலுயா.
No comments:
Post a Comment