கன்மலை கிறிஸ்தவ சபை
Title: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்
Date: 21:05:2017
Speaker: Brother Micheal
Worship : Brother Micheal & Brother Joshua
- நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
பிசாசானவன் திருடன் போல வந்து இருதயத்தை கேடும், கிறுக்கும் நிறைந்துள்ளதாய் மாற்றி கெடுத்து விடுகிறான். வசனம் சொல்கிறது திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்று, நித்திய ஜீவன் என்கிற வாழ்க்கை நமக்கு இருக்கிறது அந்த அழியாமையின் வாழ்க்கையை நாம் பெற்றுக்கொள்ளாத படி மாற்றுவது தான் அவனுடைய திட்டம்.
ஆனால் நம் இயேசு சொல்கிறார் உங்களை பரிபூரணமாக வாழவைக்கவே நான் வந்தேன் என்று சொல்லுகிறார். நீங்கள் எல்லாவற்றிலும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவர் சித்தம். இன்றைக்கு கர்த்தர் உங்களை பார்த்து சொல்லுகிறதாவது உங்களுக்கு எல்லாமே பரிபூரணமாக கிடைக்கும்.
1. கர்த்தர் பரிபூரண நன்மை உண்டாக்குவார்
உபாகமம் 28:11
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
உங்களுக்கு பரிபூரண நன்மை உண்டாக இந்த மாதத்தில் நம் தேவனாகிய கர்த்தர் கட்டளையிடுவார். பரிபூரண நன்மையை உங்களுக்காக கர்த்தர் ஆயுத்தம் பண்ணியிருக்கிறார். உங்களுக்கு பரிபூரண நன்மை உண்டாக பரலோக இராஜ்ஜியம் கட்டவிழ்க்கப்படும். நீ பெற்றுக்கொள்வாய்.
சங்கீதம் 65:11
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
எந்த ஒரு நன்மையும் கிடைக்காமல் இருக்கிறதே, வீட்டிலே அனுதினமும் பிரச்சினையாக இருக்கிறதே, என் வீட்டில் ஒரு செழிப்பே இல்லையே, என்று கலங்கி கொண்டு இருக்கிறீர்களா ? வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறவர் சொல்கிறார். அவர் நன்மையை உங்களுக்கு கட்டளையிடுவார். கர்த்தர் நிச்சயமாக செய்வார். தன் சொந்த குமாரனையே நமக்காக தந்தவர், நன்மையை உங்களுக்கு தராமல் இருப்பாரோ ? குறைவே இல்லாதபடிக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
2. கர்த்தர் பரிபூரண ஆசிர்வாதத்தை தருவார்
நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
என்ன உண்மையென்று சொன்னால் உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள். வசனம் சொல்கிறது உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். இன்றைக்கு நாம் அநேக காரியங்களில் உண்மையாய் இல்லாவிட்டாலும், கர்த்தர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருக்கிறார். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாய் நடவாமல் உண்மையாய் இருந்தால் கர்த்தர் உங்களை ஆசரிவதித்து கொண்டே இருப்பார். இதை சுரண்டவே பிசாசு வகைத்தேடி வருகிறான்.
யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
இப்படி வாழ்ந்த யோபு எல்லாவற்றையும் இழந்தார். சடுதியிலே அவருக்கு எல்லாமே மாறிவிட்டது வியாதி இருந்தது, வறுமை இருந்தது, தரித்திரம் இருந்தது, தனிமை படுத்தப்பட்டார். ஆனாலும் யோபு கர்த்தரை மறுதலிக்கவில்லை அந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டார். உங்கள் வாழ்க்கையில் ஒரு தீமை வருகிறது என்றால் அதைப்பொறுத்து கொள்ளுங்கள். அன்பானவர்களே எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு என்று வேதம் சொல்கிறது.
நீதிமொழிகள் 30:9
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
தாழ்மை நம்மிலே இருக்க வேண்டும். நாம் அன்றாட வாழ்க்கையை நடத்துவது கர்த்தருடைய பெரிதான கிருபையே அவருடைய கிருபை நமக்கு வேண்டும்.
மத்தேயு 13:8
சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
மத்தேயு 13:9
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
மத்தேயு 13:10
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
மத்தேயு 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
மத்தேயு 13:12
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்
ஆவியின் கனிகளை நீங்கள் பயன்படுத்தாமல் வைத்து இருந்தீர்கள் என்றால் உங்களிடத்தில் இருந்து அவை எடுத்துக்கொள்ளப்படும் அதை அறிந்து பயன்படுத்துங்கள்.
3. கர்த்தர் பரிபூரண கிருபை தருவார்
யோவான் 1:16
அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
வசனம் தெளிவாய் சொல்கிறது அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். இன்றைக்கு இருக்கிற கிருபை போல் அல்ல அது கிருபையின்மேல் கிருபை . உங்களுக்கு ஒரு பரிபூரண கிருபையை கர்த்தர் அளிப்பார். ஆமென்.
No comments:
Post a Comment