Tuesday, May 30, 2017

திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே


கன்மலை கிறிஸ்துவ சபை 
Date: 28.05.2017

திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே

சங்கீதம் 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே திக்கற்ற பிள்ளைகள் என்று சொன்னால் எல்லாம் இருந்தும் எதுவம் இல்லாத ஒரு நிலைமை. எல்லாம் கிடைப்பது போல் இருக்கும் ஆனால் எதுவுமே கிடைக்காது. ஆனால் கர்த்தர் சொல்கிறார் திக்கற்ற பிள்ளைகளுக்கு நான் சகாயம் செய்வேன். கர்த்தர் உதவி செய்வேன் என்று சொல்லுகிறார். அவர் எப்படி உதவி செய்வார் ?


எபிரெயர் 13:6
அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.

கர்த்தர் திக்கற்ற பிள்ளைகளுக்கு மூன்று விதமான காரியங்களை செய்கிறார்.

1. திக்கற்ற பிள்ளைகளுக்கு கர்த்தர் நீதியை செய்கிறார் 
2. திக்கற்ற பிள்ளைகளுக்கு கர்த்தர் நியாயத்தை செய்கிறார் 
3. திக்கற்ற பிள்ளைகளை கர்த்தர் பாதுகாக்கிறார் 

1. திக்கற்ற பிள்ளைகளுக்கு கர்த்தர் நீதியை செய்கிறார் 

உபாகமம் 10:17
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

உபாகமம் 10:18
அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

எபிரெயர் 13:6 இல் வசனம் சொல்கிறது மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்ன தான் உங்களை வேண்டாம் என்று தள்ளினாலும் கர்த்தர் உங்களை தான் பயன்படுத்த போகிறார். 

ஆதியாகமம் 16:4
அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்

ஆதியாகமம் 16:5
அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

ஆதியாகமம் 16:6
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

ஆதியாகமம் 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:

ஆதியாகமம் 16:8
சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

ஆதியாகமம் 16:9
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

ஆதியாகமம் 16:10
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.

ஆதியாகமம் 16:11
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

ஆதியாகமம் 16:12
அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

 கர்த்தர் ஆகாருக்கு செய்தது போலவே நமக்கும் நீதி செய்வார்.
 

2. திக்கற்ற பிள்ளைகளுக்கு கர்த்தர் நியாயத்தை செய்கிறார்

ஏசாயா 1:17
நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.

நமக்கு கர்த்தர் யாரையாவது நியமித்து வைத்து இருப்பார்.  நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களுக்கு துணி வாங்கி கொடுக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும். நீங்கள் சாப்பிடுவதில் இருந்து கொஞ்சம் அவர்களுக்கு தரலாம். அவர்கள் செலவுக்கு உங்களால் இயன்றதை கொடுக்கலாம். இவ்வாறு செய்யவில்லை என்றால் பரலோகத்தில் ஆண்டவர் சொல்லுவார் நான் உங்களிடத்தில் வந்தேன் நீங்கள் என்னை கவனிக்கவில்லை. நம்மால் இயன்றதை நாம் கொடுக்க வேண்டும். உங்கள் பக்கம் நீதி இருந்தால் கர்த்தர் நிச்சயமாக உங்களுக்கு நியாயம் செய்வார். 

யோசேப்புக்கு நடந்தது அப்படித்தான். தனக்கு நடப்பது அநியாயம் என்று யோசேப்பு எதுவுமே கேட்கவில்லை ஏன் என்றால் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். யோசேப்பை கர்த்தர் எகிப்திலே உயர்த்தினார். அவனுக்கு விரோதமாக அநியாயம் செய்த தேசத்திலே கர்த்தர் பஞ்சத்தை ஏற்படுத்தினார். உங்களுக்கும் அதுபோலவே கர்த்தர் நியாயம் செய்வார். யோசேப்பு எல்லா சூழ்நிலையிலும் அமைதி காத்தார். கர்த்தர் அவரை உயர்த்தினார். உங்களை தள்ளினால் கர்த்தர் உயர்த்த போகிறார் என்று அர்த்தம். உங்களிடத்தில் இருந்து பிடுங்கினால் கர்த்தர் கொடுக்க போகிறார் என்று அர்த்தம். உங்கள் விசுவாசம் அப்படி காணப்படவேண்டும். நீங்கள் தவறே செய்யமால் நீதி கேடானவைகள் உங்களுக்கு நடந்தால் கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாக நியாயம் செய்து உங்களுக்கு நீதியாய் கிடைக்க வேண்டியவைகளை பெற்றுக்கொள்ள உதவி செய்வார். 

3. திக்கற்ற பிள்ளைகளை கர்த்தர் பாதுகாக்கிறார் 

எரேமியா 49:16
திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.

உங்கள் பிள்ளைகளை கர்த்தர் காப்பாற்றுவார். உங்களுடைய குமாரர்களையும், குமாரத்திகளையும், பேரன்களையும் கர்த்தர் கை விடவே மாட்டார். அவர் மகிமைக்குள் நீங்கள் இருக்கிறீர்கள். எத்தனை மரண கன்னிகள் வந்தாலும் அவர்களை சேத படுத்தாது. கர்த்தர் நீக்கி போடுவார். 

ஜெபம்: திக்கற்ற பிள்ளைகளுக்கு நீரே ஆறுதலாய், இருந்து அடைக்கலமாய் இருந்து, அனுகூலமாய் இருந்து, மறைவிடமாய் இருந்து, பாதுகாத்து, உதவி செய்து, போஷித்து, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அளித்து, என் தேவனாகிய கர்த்தர் நீரே நடத்துவீராக ஆண்டவரே இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் 

Brother Micheal
Mobile: 9962 110 261

No comments:

Post a Comment