Wednesday, June 7, 2017

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்


கன்மலை கிறிஸ்துவ சபை 
Date: 04.06.2017

" கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார் "

சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

இந்த ஜூன் மாதத்திலே கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னை ஆதரிப்பேன். இந்த மாதம் முழுவதும் அவர் ஆதரவு உன்னோடு கூட இருப்பதை உன் சொந்த கண்கள் காணும். நீ நீதிமான் அவர் ஒருபோதும் உன்னை தள்ளாடவொட்டார்.


கர்த்தர் எப்படியெல்லாம் நம்மை ஆதரிக்கப்போகிறார் ?

1. ஆகாரம் கொடுத்து உன்னை ஆதரிப்பார் 

ஆதியாகமம் 47:12
யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்து வந்தான்.

கர்த்தர் உங்களை மட்டும் அல்லாது உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கர்த்தர் ஆதரிக்கப்போகிறார். இந்த ஜூன் மாதத்தில் கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னையும், உன் குடும்பத்தையும், உன் குடும்பத்தாரையும் ஆதரிப்பேன் என்கிறார். எப்படியென்றால் ஆகாரம் கொடுத்து ஆதரிப்பார். 

ஆதியாகமம் 48:15
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

நீங்கள் இப்பூமியில் பிறந்த நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் உங்களை ஆதரித்து வருபவர் நம் தேவனாகிய கர்த்தர் அவர் தான் உங்களை ஆதரிப்பவர். 

மத்தேயு 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

மத்தேயு 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

மத்தேயு 6:28
உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

மத்தேயு 6:29
என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:30
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

2. ஆறுதல் அளித்து உன்னை ஆதரிப்பார் 

ரூத் 4:15
அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; 

கர்த்தர் ஆறுதல் செய்து உன்னை ஆதரிப்பார். ரூத் தன் மாமியார் நகோமிக்காக கதிர் பறிக்க செல்கிறாள். ரூத்திற்கு ஆறுதல் அளிக்க கர்த்தர் போவாஸ் மூலமாக அவளுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை அமைய கர்த்தர் கிருபை செய்கிறார். போவாஸ் ரூத்திற்கு ஆறுதல் கொடுத்து சந்தோஷமாக பார்த்து கொள்கிறார். உங்களுக்கும் அவர் ஆறுதல் செய்ய வல்லவராயிருக்கிறார். எனவே பயப்படாதீர்கள். எப்படிப்பட்ட பட்சிக்கிற பிசாசு வந்தாலும் சரி, எப்படிப்பட்ட காரியம் மேற்கொள்ள வந்தாலும் சரி கர்த்தர் உங்களோடு கூட இருந்து ஆறுதல் செய்வார். 

ஏசாயா 57:18
அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.

இந்த மாதத்தில் கர்த்தர் உங்களை வழிநடத்தி,உங்கள் நோய்களை குணமாக்கி உங்களுக்கு ஆறுதல் செய்வார்.

3. அடைக்கலமாய் இருந்து உன்னை ஆதரிப்பார் 

I சாமுவேல் 22:20
அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,

I சாமுவேல் 22:21
சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.

I சாமுவேல் 22:22
அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.

I சாமுவேல் 22:23
என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.

இயேசு கிறிஸ்து உங்களை பார்த்து சொல்லுகிறதாவது நீ என்னிடத்தில் இரு பயப்படவேண்டாம் என்பதே எப்படி தாவீது அந்த ஆசாரியர்களை சவுல் கொன்று போட்ட செய்தியை அறிவிக்க வந்த அந்த சேவகனை சவுல் கொன்று போடாதபடிக்கு தாவீது தன் ஆதரவிலே வைத்து கொண்டார். இயேசுவும் அதை தான் சொல்லுகிறார் நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் என்னிடத்தில் இருங்கள் பயப்படவேண்டாம். நம் பிராணனை வாங்க தேடுகிற எல்லா சத்ருக்களையும் இயேசு பார்த்து கொள்வார். 

ஜெபம்: 
தேவனாகிய கர்த்தாவே நான் உன்னை ஆதரிப்பேன் என்ற வசனத்தை கொடுத்தீர் இன்றைக்கும் இயேசுவே உம்முடைய ஆதரவினால் தான் ஆண்டவரே நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நீர் எங்களை இந்த ஜூன் மாதத்தில் யாவரையும் நீங்கள் ஆகாரம் கொடுத்து ஆதரிக்க வேண்டுமாய் ஜெபிக்கிறோம் ஆண்டவரே. நீர் அடைக்கலம் கொடுத்து ஒவ்வொருவரையும் திருப்தியாக்கி ஆசிர்வதித்து எல்லா விதத்திலும் அடைக்கலம் தந்து ஆதரிக்க வேண்டுமாய் ஜெபிக்கிறோம். பிள்ளைகள் துவண்டு போகும் போதெல்லாம் நீர் ஆறுதல் தந்து அடுத்த நிலைக்கு போகத்தக்கதாய் ஆசிர்வதிக்க வேண்டுமாய் ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் பிதாவே ஆமென். 

Brother Micheal
Mobile: 9962 110 261

No comments:

Post a Comment