கன்மலை கிறிஸ்துவ சபை
Date: 11.06.2017
" இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர் "
ஏசாயா 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், அக்காலத்திலே இவரே உனக்கு கர்த்தராய் இருந்தார். இவருக்காகத்தான் காத்திருந்தோம் இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்.
இந்த இரட்சிப்பு யாராலே வரும் என்று சொன்னால் ஒரே ஒரு தெய்வத்தால் மட்டுமே வரும் அவரை பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்.
லூக்கா 2:21
பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
லூக்கா 2:22
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
லூக்கா 2:23
முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
லூக்கா 2:24
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
லூக்கா 2:25
அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
லூக்கா 2:26
கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
லூக்கா 2:27
அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
லூக்கா 2:28
அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து:
லூக்கா 2:29
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
லூக்கா 2:30
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
லூக்கா 2:31
தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
லூக்கா 2:32
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
பல வருடங்களாய் ஒருவர் காத்து கொண்டு இருந்தார். அவர் மேல் பரிசுத்த ஆவியானவர் அசைவாடி கொண்டிருந்தார். அவருடைய பெயர் சிமியோன் என்று அழைக்கப்பட்டது. ஒரு நாள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு ஆலயத்திற்கு எருசேலம் வழியாய் சென்று கொண்டு இருந்தார். தற்செயலாய் பரிசுத்த ஆவியானவர் தேவகுமாரன் வருவதாக ஏவப்பட்டதின் நிமித்தமாய் அவர் அந்த இடத்திற்கு சென்ற பொழுது அப்பொழுது இரட்சகர் இயேசு கிறிஸ்துவை அவர் பெற்றோர் ஆலயத்திற்கு கூட்டி கொண்டு வருவதை கண்டார். அப்பொழுது சிமியோன் சொல்கிறார் இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்கிறார்.
லேவியராகமம் 12:4
பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.
லேவியராகமம் 12:5
பெண்பிள்ளையைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.
லேவியராகமம் 12:6
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
லேவியராகமம் 12:7
அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
நியாய பிராமண முறைமையின் படி இயேசு அங்கே வந்து கொண்டிருக்கிறார். நான் சொன்ன தீர்க்க தரிசன வார்த்தையின் படி நீ அவரை பார் என்று சிமியோன் பரிசுத்த ஆவியால் எனப்படுகிறார். சிமியோன் சொல்கிறார் இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்கிறார் இரட்சணியம் என்றால் இரட்சிப்பு இவர் தான் உலகத்தை இரட்சிக்க போகிறார் என்று அநேகருக்கு தெரிந்து இருந்தாலும் பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த சிமியோன் இயேசுவை காணாமல் நான் சாவதில்லை என்று வெகு காலமாக காத்திருந்தார். அன்றைக்கு சிமியோன் கண்டார்.
இவரை தான் காணவேண்டும் என்று சிமியோன் பல வருடங்களாக காத்திருந்தார். உலகத்தை இரட்சிக்க வந்த இயேசுவை கண்டு அவரை ஆசிர்வதித்து பிரதிஷ்டை செய்கிறார் சிமியோன். யோவான் இப்படியாய் சொல்லுகிறார்.
யோவான் 3:17
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் என்ன சொல்கிறார் என்றால் உங்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்காமல் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை இரட்சித்து பரலோகம் சேர்க்கவே இயேசு உலக இரட்சகராக வந்தார்.
மூன்று விதமான காரியங்களை உங்களுக்கு செய்யப்போகிறார். அவற்றை நாம் இப்பொழுது காணலாம்.
1. வியாதியில் இருந்து உன்னை இரட்சிப்பார்
2. பிசாசின் பிடியில் இருந்து உன்னை இரட்சிப்பார்
3.சத்ருவிடத்தில் இருந்து உன்னை இரட்சிப்பார்
1. வியாதியில் இருந்து உன்னை இரட்சிப்பார்
மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
உங்கள் வியாதிகள் அனைத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீக்கி போட்டு உங்களை இரட்சிப்பார். இவரே நம் இரட்சகர்.
லூக்கா 7:2
அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
லூக்கா 7:3
அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
லூக்கா 7:4
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
லூக்கா 7:5
அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
லூக்கா 7:6
அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
லூக்கா 7:7
நான் உம்மிடத்தில் வரவும் என்னைப்பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
லூக்கா 7:8
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
லூக்கா 7:9
இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 7:10
அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.
அவன் எப்படிப்பட்டவன் அவன் செல்வாக்கு மிகுந்த நூற்றுக்கு அதிபதி ராஜாவைப்போல இருக்கிறவன் ஆனால் அவனுக்கு தெரிந்தது இவர் நம்மை இரட்சிப்பார். இவர் ஒருவரால் மட்டுமே என் வேலைக்காரனை சொஸ்தப்படுத்த முடியும் என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. இன்று அவரை நம்பி வந்த உங்களுக்கு நான் இப்படியாய் சொல்லட்டும் உன் வியாதியை கர்த்தர் நீக்குவாராக என்று இயேசுவின் நாமத்தில் சொல்லுகிறேன்.
2. பிசாசின் பிடியில் இருந்து உன்னை இரட்சிப்பார்
மாற்கு 7:25
அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
மாற்கு 7:26
அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.
மாற்கு 7:27
இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
மாற்கு 7:28
அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
மாற்கு 7:29
அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
மாற்கு 7:30
அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய் விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
அவள் கிரேக்க ஸ்திரியாய் இருந்தும், என்னை சேர்த்து கொள்ள மாட்டார் என்று தெரிந்தும், இவரே என்னை இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார் என்று அந்த ஸ்திரி ஓடி வந்ததை இயேசு அவள் தூரத்தில் இருக்கும் பொழுதே கண்டுவிட்டார். இந்த ஸ்திரியானவள் கிரேக்க ஸ்திரியாய் இருந்தாலும் நீங்கள் இரட்சித்து தான் ஆகவேண்டும் என்று இயேசுவின் பாதத்தில் வந்து விழுகிறாள். நம் இயேசு பாரபட்சம் பாரா தேவன் இவரே நம்மை இரட்சிப்பார்.
3.சத்ருவிடத்தில் இருந்து உன்னை இரட்சிப்பார்
II சாமுவேல் 22:48
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
II சாமுவேல் 22:49
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.
II சாமுவேல் 22:50
இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
II சாமுவேல் 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
கர்த்தர் உங்கள் சத்ருக்களை பழிக்கு பழி வாங்குவேன் என்று சொல்லுகிறார். கர்த்தர் இரக்கம் உள்ளவர் தான் ஆனால் தன் பிள்ளைகளுக்கு விரோதமாய் யாராவது எழும்பினால் அவர்களை கர்த்தர் முறியடிப்பார். இந்த தேவன் எப்படி பட்டவராம் அவர் தம் ஜனங்களுக்காக பழிக்கு பழிவாங்கி, ஜனங்களை கீழ்ப்படுத்துகிற தேவனானவர். சாதாரண இரட்சிப்பு அல்ல மகத்தான இரட்சிப்பை தருபவர். இவரே நம்மை இரட்சிப்பவர். இவரே கர்த்தர்.
ஜெபம்: வாசிக்கப்பட்ட வேத வசனத்தின் படி இயேசுவே நீரே எங்களை இரட்சிப்பவர் நீரே கர்த்தர் இவரையல்லாமல் வேறு எவரும் இரட்சிக்க முடியாது வியாதியில் இருந்து உன்னை இரட்சித்து விட்டார், பிசாசின் பிடியில் இருந்து உன்னை இரட்சித்து விட்டார், சத்ருவின் மத்தியில் இருந்து உன்னை இரட்சித்து விட்டார். நீங்கள் இரட்சித்த கிருபைக்காய் நன்றி ஆண்டவரே நாங்கள் மகிழ்ந்து களி கூறுவோம் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: 9962 110 261
No comments:
Post a Comment