கன்மலை கிறிஸ்துவ சபை
16.07.2017
இன்று அவர்கள கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்
யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
யோசுவா 4 ஆம் அதிகாரம் 7 முதல் 14 வரை
யோசுவா 4:14
அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.
ஒரு சிறந்த தலைவர் என்று சொன்னால் அது வேதாகமத்தில் மோசேக்கு மட்டுமே தகும். பல இலட்ச கணக்கான இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தியவர். எகிப்தில் பார்வோனிடம் அடிமையாய் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு அவர்களை செம்மையாய் வழிநடத்தியவர். மோசே மரித்த பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் பயந்தனர். கானானுக்கு மோசேக்கு பிறகு யார் வழிநடத்துவது என இஸ்ரவேல் ஜனங்கள் முரட்டாட்டம் பண்ண நிலையில் கர்த்தர் யோசுவாவை எழுப்பினார்.
யோசுவா 3:4
உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்குமுன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
யோசுவா 3:5
யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.
யோசுவா 3:6
பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்.
யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
இன்று உன்னை பார்த்து கர்த்தர் சொல்லுகிறதாவது இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். உங்களை பரியாசம் செய்கிறவர்கள், உங்களை துட்சமாய் எண்ணினவர்கள் யாராய் இருந்தாலும் சரி, அவர்களுக்கு முன்பாக கர்த்தர் உங்களை மேன்மையாய் வைப்பார்.
யாரை கர்த்தர் மேன்மைப்படுத்துவார் ?
1. தன் சத்தத்திற்கு செவி கொடுப்பவர்களை கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
2. நன்மை செய்கிறவர்களை கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
3. பலியை தேவனுக்கு செலுத்துகிறவர்களை கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
1. தன் சத்தத்திற்கு செவி கொடுப்பவர்களை கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
உபாகமம் 28:1
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
வசனம் சொல்கிறது அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவி கொடுப்பாய் என்று சொன்னால் கர்த்தர் உன்னையும், உன் குடும்பத்தாரையும் மேன்மையாய் வைப்பார். இவ்வாறு நாம் உண்மையாய் செவி கொடுப்பதினால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் பின்னரும் வசனத்தில் காணலாம்.
உபாகமம் 28:2
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.
உபாகமம் 28:3
நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28:4
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
உபாகமம் 28:5
உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
உபாகமம் 28:6
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
உபாகமம் 28:7
உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் உன்மேல் தங்கும் பொழுது அவை உனக்கு விரோதமாக எப்பேர்ப்பட்ட சத்ரு வந்தாலும் அதனை முறியடிக்கும். உண்மையாய் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுப்பாய் என்று சொன்னால் உன் மேல் பலிக்கும் ஆசிர்வாதங்களுக்கு விரோதமாய் எழும்பும் சத்ருக்களை கர்த்தர் முறியடிப்பார்.
இங்கே சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாம் உன் குடும்பத்தின் மீது பலிப்பதாக. நீ அவர் சத்தத்திற்கு செவி கொடுத்தால் சகல ஜாதிகளிலும் கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்.
2. நன்மை செய்கிறவர்களை கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
ஆதியாகமம் 4:7
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்
நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு நன்மை செய்கிறது மிகவும் பிடிக்கும்.
அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
தேவன் உண்மையாகவே ஒரு மனுஷன் கூட இருந்தால் அவன் நன்மை செய்கிறவனாய் இருப்பான். இயேசுவுக்கும் பிதாவாகிய தேவன் கூட இருந்ததினாலே அவர் நன்மை செய்கிறவராய் சுற்றி திரிந்தார்.
அநேக தரம் நமக்கு எல்லா விதமான காரியங்கள் நம் கையில் இருக்கும்பொழுது நமக்கு முன்பதாக அநேக விதவைகள் உண்டு, எவ்வளவோ பசியினால் வாடுகிறவர்கள் உண்டு, அநேகர் உடை இல்லாமல் இருப்பவர்கள் உண்டு, அவர்களுக்கு உங்களால் இயன்ற நன்மையை செய்தால் நிச்சயமாகவே கர்த்தர் உங்களை மேன்மையாய் வைப்பார். வசனம் சொல்கிறது கொடுக்கிறவர்களுக்கு இன்னும் கூட கொடுக்கப்படும். ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் இது தான் உண்மை. அவ்வாறு செய்வதால் நீ நினைத்து கூட பார்க்க முடியாத உயரத்தில் உன்னை கர்த்தர் மேன்மைப்படுத்துவார்.
III யோவான் 1:11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
நன்மை செய்யும் படிக்கு உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
நீதிமொழிகள் 3:27
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
நீதிமொழிகள் 3:28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
நீதிமொழிகள் 3:29
அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
நீதிமொழிகள் 3:30
ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
நீதிமொழிகள் 11:23
நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.
I பேதுரு 3:17
தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
3. பலியை தேவனுக்கு செலுத்துகிறவர்களை கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
எபிரெயர் 11:4
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
கர்த்தரிடத்தில் ஆபேல் நீதிமானென்று சாட்சி பெற்றார்.
ஆதியாகமம் 4:2
பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
ஆதியாகமம் 4:3
சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
ஆதியாகமம் 4:4
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
ஆதியாகமம் 4:5
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
ஆதியாகமம் 4:6
அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
ஆதியாகமம் 4:7
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
ஆதியாகமம் 4:8
காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்ததால் காயினுக்கு கோபம் உண்டாகி அவனை கொன்று போட்டான். கர்த்தர் என் காணிக்கையை ஏற்றுக்கொள்வார் என்ற விசுவாசம் ஆபேலுக்கு இருந்தது. இந்த விசுவாசம் காயினுக்கு இல்லை. இது தான் எபிரேயர் புஸ்தகத்தில் தெளிவாய் சொல்லப்பட்டுள்ளது விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்.
பலி என்பது வெறும் காணிக்கை மாத்திரம் அல்ல துதியின் பலி இருக்கிறது. நீ கர்த்தரை துதித்தாலே போதும்.சிறந்த பலியே துதிதான். கர்த்தரை துதித்தாலே போதும் அவர் உன்னை மேன்மைப்படுத்துவார். ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: 9962 110 261
No comments:
Post a Comment