Tuesday, September 19, 2017

தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்


கன்மலை கிறிஸ்துவ சபை

17.9.2017

எஸ்றா 7:9
முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.

எருசலேம் என்று சொன்னாலே சபை என்பதாகும்.  தேவனுடைய தயவுள்ள கரம் நம் மேல் இருக்கிறதினாலே தான் நாம் வாரம் தோறும் சபைக்கு வருகிறோம். அதுதான் உண்மை. 

அவருடைய கரம் நமக்கு என்னவெல்லாம் செய்ய போகிறது என்று மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம்.


1. அவருடைய கரம் நன்மை செய்கிற கரம் 

நெகேமியா 2:18
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

நம்முடைய தேவன் சதா காலங்களிலும் நமக்கு நன்மை செய்கிறவராய் இருக்கிறார் என்பதை ஒருகாலமும் மறந்து போக கூடாது. நம் ஆண்டவரின் கரம் எப்பொழுதும் நமக்கு நன்மை செய்யும் கரமாய் இருக்கிறது.  

நெகேமியா 1 ஆம் அதிகாரம்  1 முதல் 11 வரை உள்ள வசனங்கள் 

நெகேமியா 1:6
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.

நெகேமியா ராஜாவுக்குப்  பானபாத்திரக்காரராய் இருந்தார். தம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் சிறைப்பட்ட செய்தியை அவன் கேட்ட பொழுது துக்கம் முகமாக காணப்பட்டார். அவர் தம்முடைய தேசத்திற்காக மன்றாடி திறப்பிலே நின்று ஜெபம் செய்கிறார். தம்முடைய மூதாதையர், மற்றும் தகப்பனார் செய்த பாவங்களை தேவனுக்கு முன்பதாக அறிக்கை செய்து மன்றாடி ஜெபித்தார். 

நெகேமியாவினிடத்தில் தேவனுடைய நன்மை செய்கிற அவரோடு கூட இருந்தது. இன்றைக்கும் கர்த்தர் ஒரு குறைவு இல்லாமல் நம்மை நடத்தி வருகிறார் என்று சொன்னால் தேவனுடைய கரம் அன்றி வேறு எதுவுமே இல்லை என்பதே உண்மை. அந்த எப்பொழுதும் நம்மை நன்மையாகவே நடத்துகிறது. தேவனுடைய நன்மை செய்கிற கரம் நம்மோடு கூட இருக்கிறது. 

2. அவருடைய கரம் நம்மை மேன்மைப்படுத்துகிற கரம் 

I நாளாகமம் 29:12
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

I நாளாகமம் 29:7
தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

I நாளாகமம் 29:8
யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.


I நாளாகமம் 29:9
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

I நாளாகமம் 29:10
ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

I நாளாகமம் 29:11
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.

எவரையும் மேன்மைப்படுத்த, பெலப்படுத்த கர்த்தரால் ஆகும் அவரால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை. வசனம் தெளிவாய் சொல்கிறது எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். யார் உன்னை தள்ளனும் நினைத்தாலும் சரி கர்த்தர் அவர்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்தி வைத்து விடுவார். உன்னை ஏளனமாய் பேசியவர்கள் முன்னால் உன்னை மேன்மைப்படுத்துவார். இன்றைக்கு பெலவீனமாய் இருந்தாலும் அவர் பெலப்படுத்துவார் அவராலே கூடும்.  அவர் கரத்தினால் படைத்த உன்னை அவர் கரத்தினால் மேன்மைப்படுத்த மாட்டாரோ நிச்சயமாய் மேன்மைப்படுத்துவார். 

3. அவருடைய கரம் நம்மை பாதுகாக்கிற கரம் 

ஏசாயா 51:16
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

அவர் கரத்தின் நிழலினால் நம்மை மறைக்கிறார். அவர் மறைக்கிறார் என்று சொன்னாலே அது ஒரு பாதுகாப்பு நமக்கு எதிராக வரும் எல்லாவிதமான காரியத்தில் இருந்தும் கர்த்தர் நம்மை மறைக்கிறார். சத்துருவிடம் இருந்து மறைப்பார், பொல்லாத ஆவிகளிடம் இருந்து உன்னை மறைப்பார். அவர் கரத்தின் நிழல் நம்மை பாதுகாக்கும். நம்முடைய காலம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. ஆண்டவர் சொல்லுகிறார் ஏசாயா51:16 படி அவர் தன்னுடைய கரத்தின் நிழலினால் உன்னை மறைப்பார். 

FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment