கன்மலை கிறிஸ்துவ சபை
24.9.2017
Message: Brother KAMAL
" எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார் "
யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
நிச்சயமாகவே வெகு சீக்கிரத்திலேயே உங்களுக்கு குறித்து வைத்திருக்கிறதை கர்த்தர் நிறைவேற்றுவார். யோபு இவ்வாராய் சொல்கிறார் எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்.
ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
ஆதியாகமம் 21:2
ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
கர்த்தர் குறித்த காலத்திலே சாராள் ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப்பெற்றாள் என்று பார்க்கிறோம். கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணினபடியே அவருக்கு ஒரு குமாரனை அவர் முன் குறித்திருந்த காலத்திலே அருளினார். நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவர் வாக்கு மாறாதவர், வானமும் பூமியும் அழிந்து போனாலும் அவர் வார்த்தை அழிவதில்லை. அவர் ஜீவனுள்ள தேவன். அவர் நிச்சயமாகவே உங்களுக்கு முன் குறித்திருக்கிற எல்லா காரியங்களையும் அதின் அதின் காலத்திலே நிறைவேற்றி முடிப்பார்.
அவர் என்ன நமக்கு முன் குறித்து இருக்கிறார் ?
1. சுகத்தை அவர் முன்குறித்து இருக்கிறார்
யோபு 3:26
எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.
யோபு 2:7
அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
யோபு 2:8
அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.
யோபு 16:12
நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
யோபுவின் சரீரம் முழுவதும் வியாதியில் பிடிபட்டு இருந்தது. ஆனாலும் அவர் தேவனை தூஷிக்க வில்லை. என் தேவன் எனக்கு நிச்சயம் சுகம் தருவார் என்ற விசுவாசம் யோபுவுக்கு இருந்தது.
ஏசாயா 58:8
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
யோபு 42:10
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
உங்கள் விண்ணப்பங்களை ஆண்டவர் கேட்டு கொண்டு இருக்கிறார். யோபுவுக்கு வியாதி என்னும் சிறையிருப்பை நீக்கி அவருக்கு தான் முன் குறித்திருந்த சுகத்தை அளித்த தேவன் உங்களுக்கு அவர் ஒரு பரிபூரண சுகத்தை முன் குறித்து வைத்து இருக்கிறார். நிச்சயம் அவர் குணமாக்குவார்..
2. செழிப்பை அவர் முன்குறித்து இருக்கிறார்
யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
யோபு 29:6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
இப்படி செல்வந்தராய் இருந்த யோபு தன்னுடைய வாழ்வில் ஒரு மிகப்பெரிய இழப்பை சந்திக்கிறார். அவர் எல்லா செல்வங்களையும், தன் பிள்ளைகள், ஆடு, மாடுகள் என எல்லாவற்றையும் இழந்தார்.
யோபு 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
அத்தனை செல்வ சீர் யோபுவின் முன்பிருந்த வாழக்கையில் காணப்பட்டது. ஆனால் சடுதியில் எல்லா செழிப்பும் யோபுவிடம் இருந்து பறிபோனது. ஆனாலும் யோபு நம்பிக்கையை இழக்கவில்லை, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் , கர்த்தரிடத்தில் நனமை பெற்ற நாம் தீமை பெற வேண்டாமோ என கூறினார்.
சங்கீதம் 66:12
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
நீதிமொழிகள் 28:25
கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
உங்களையும் ஆண்டவர் அவர் குறித்திருக்கிற செழிப்பான இடத்தில் கொண்டுபோய் விடுவார். உங்களுக்கு என்று முன் குறித்த செழிப்பை கர்த்தர் சீக்கிரத்தில் நிறைவேற்றி முடிப்பார்.
யோபு 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
யோபுவின் வாழ்க்கையில் தன் முன்குறிக்கப்பட்ட செழிப்பை அவர் பெற்றுக்கொண்டார். இரட்டிப்பான செழிப்பை கர்த்தர் யோபுவுக்கு கட்டளையிட்டார். அதுபோல உங்கள் வாழ்விலும் தேவன் அப்படியே செய்வாராக உங்களுக்கான செழிப்பை நீங்கள் ஏற்ற காலத்தில் உங்களுக்கு அருளுவார்.
3. சமாதானத்தை அவர் முன்குறித்து இருக்கிறார்
யோபு 5:17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
யோபு 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
கர்த்தர் நம்மை சிட்சிக்கும் பொழுது யோபுவை போல் நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். வசனம் தெளிவாய் சொல்கிறது சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் என்று அப்பொழுது நம்முடைய கூடாரம் சமாதானத்தால் நிரம்பி இருக்கும்.
நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
நீதிமொழிகள் 3:2
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
யோபு 42:16
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
யோபு 42:17
யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.
யோபுவுக்கு பல இன்னல்கள், பாடுகள், நோய்கள், இழப்புகள் மத்தியிலும் அவர் தேவன் மீது இருந்த விசுவாசத்தில் உறுதியாய் தரித்து இருந்தார் அதனை அறிந்திருந்த யோபு இப்படியாய் சொல்கிறார் என மீட்பர் உயிரோடு இருக்கிறார் ஆம் யோபுக்கு இரட்டிப்பான சமாதானத்தை அருளிய தேவன் நமக்கும் நிச்சயமாய் ஒரு சமாதானத்தை வைத்து இருக்கிறார்.
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment