கன்மலை கிறிஸ்துவ சபை 2018 ஆம் ஆண்டு வாக்குத்தத்தம்
Message: Brother Micheal
Date: 1.1.2018
" வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் "
சங்கீதம் 65:11
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
இந்த வருடம் கர்த்தர் உங்களை கர்த்தர் நன்மையினால் முடிசூட்டப்போகிறார். இந்த வருடம் முடிசூட்டுகிற வருடம். சாதாரணமான நன்மை அல்ல, அது அசாதாரணமான நன்மை. உங்கள் நினைவுக்கு எட்டாத நன்மை. இந்த ஆண்டு அப்படிப்பட்ட ஆண்டாக இருக்கும்.
கர்த்தர் நமக்கு எப்படிப்பட்ட நன்மையினால் முடிசூட்டப்போகிறார் ?
1. மகிமையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்
சங்கீதம் 8:5
நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
கர்த்தர் இந்த ஆண்டு உங்களை மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்போகிறார். நீங்கள் எந்த இடத்தில் எல்லாம் வெட்கப்பட்டீர்களோ அந்த இடத்தில் கர்த்தர் உங்களை உயர்த்தப்போகிறார். அது வேலை ஸ்தலமாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, கல்லூரியாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி கர்த்தர் சொல்லுகிறார் அந்த இடத்தில் உன்னை மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்போகிறார்.
ஏசாயா 49:3
அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.
கர்த்தர் உன்னில் மகிமைப்படுவார்.
ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
கர்த்தர் மகிமை உன்னில் உதிக்கும்.
ஏசாயா 60:2
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
கர்த்தர் மகிமை உங்கள் மேல் காணப்படும்.
2. கிருபையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்
சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
ஏசாயா 54:8 - நித்திய கிருபை
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
இந்த ஆண்டு முழுவதும் கர்த்தருடைய கரம் உங்கள் மேல் இருக்கும், அவர் நித்திய கிருபையுடன் உங்களுக்கு இறங்குவார். அவர் கிருபையினாலும், இறக்கங்களினாலும் முடிசூட்டுவார். அவருடைய கிருபையின் கிரீடத்தை தர விரும்புகிறார்.
ஏசாயா 55:3 - நிச்சயமான கிருபை
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
ஏசாயா 54:10 - உன்னை விட்டு விலகாத கிருபை
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
3. அறிவின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்
நீதிமொழிகள் 14:18
பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
யாத்திராகமம் 31:1
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
யாத்திராகமம் 31:2
நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
யாத்திராகமம் 31:3
விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,
யாத்திராகமம் 31:4
இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,
யாத்திராகமம் 31:5
மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.
இந்த சமுதாயத்தில் அறிவு நமக்கு மிக மிக தேவையான ஒன்று. இந்த ஆண்டு கர்த்தர் உங்களுக்கு விசேஷித்தமான அறிவை தரப்போகிறார். இந்த 2018 ஆம் ஆண்டில் கர்த்தர் உங்களை மகிமையின் கிரீடத்தினாலும், கிருபையின் கிரீடத்தினாலும், அறிவின் கிரீடத்தினாலும் முடிசூட்டப்போகிறார். ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment