Tuesday, March 6, 2018

அப்பொழுது கர்த்தர்: இவன் தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்

கன்மலை கிறிஸ்துவ சபை

தேவசெய்தி : Brother Micheal

Date: 04.03.2018

I சாமுவேல் 16:12
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகியகண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன் தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.

II கொரிந்தியர் 1:21
நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.


நம்மை அபிஷேகம் பண்ணினவர் ஒரு மனிதன் அல்ல அவர் தேவனே, அவர் சர்வ வல்லவர், அவர் நசரேத்தில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர், நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்று சொன்னவர், அவர் தான் அபிஷேகத்தை உங்கள் மேல் ஊற்றி இருக்கிறார். அவர் தேவனே இந்த அபிஷேகம் உன்னை விட்டு விலகாமல் உன்னோடு தங்கி தாபரிக்கும்.

இந்த அபிஷேகம் இருக்கிறவர்களுக்கு கர்த்தர் என்ன செய்கிறார்? 

1. கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு 

அரணான அடைக்கலமாய் இருக்கிறார்

சங்கீதம் 28:8
கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.

கர்த்தர் தாம் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு அரணான அடைக்கலமாய் இருக்கிறார். அவர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் அரணான அடைக்கலமாய் இருந்து பாதுகாப்பார்.  

எருசலேமை விட்டு துரத்தி அடிக்கப்பட்டார் தாவீது ஆனால் அவர் எங்கு சென்றாலும் கர்த்தர் பண்ணின அபிஷேகம் அவர் மேல் தான் இருந்தது, தன் சொந்த மகனே சத்துருவாய் எழும்பினாலும் கர்த்தர் அவருக்கு அரணான அடைக்கலமாய் இருந்து மீண்டும் உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வரச்செய்தார்.  அபிஷேகம் பண்ணினவர்களுக்கு விரோதமாய் யார் எழும்பினாலும் சரி கர்த்தர் அவர்களுக்கு அரணான அடைக்கலமாய் இருப்பார். 

2. கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை 

இரட்சிக்கிறார்

சங்கீதம் 20:6
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

நாம் இந்நாள் வரையிலும் உயிரோடு வாழ்வது கர்த்தருடைய அபிஷேகம், அந்த அபிஷேகம் எல்லா தீங்கிற்கும் விலக்கி உங்களை இரட்சிக்கும். கர்த்தர் உன்னையும், உன் பிள்ளைகளையும், உன் குடும்பத்தையும் இந்நாள் வரைக்கும் காப்பாற்றி வருகிற காரணம் அபிஷேகம் ஆகும். கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; 

3. கர்த்தர் தாம் அபிஷேகம் பண்ணினவரின்

கொம்பை உயரப்பண்ணுகிறார் 

I சாமுவேல் 2:10
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.

கர்த்தர் உங்கள் கொம்பை உயர்த்துவார், நீங்கள் எந்த இடத்தில வெட்கப்பட்டீர்களோ, எந்த இடத்தில நீங்கள் சஞ்சலப்பட்டு இருக்கிறீர்களோ, கர்த்தர் அதே தேசத்தில், அதே பட்டணத்தில் கர்த்தர் உங்கள் கொம்பை உயர்த்துவார். ஏன் என்று சொன்னால் கர்த்தர் உன்னை தேர்ந்தெடுத்து அபிஷேகம் பண்ணினதினாலே கர்த்தர் உன் கொம்பை உயர்த்துவார். கர்த்தர் எல்லா விதத்திலும் உன்னை ஆச்சரியமாய் நடத்துவார்.

4. கர்த்தர் தாம் அபிஷேகம் பண்ணினவருக்கு 

சதாகாலமும் கிருபை செய்கிறார்.

சங்கீதம் 18:50
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும் நம் தேவை இன்னதென்று அறிந்து நம்மை கிருபையாய் நடத்துகிறாரே அது அபிஷேகம். தாம் தெரிந்து அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு கர்த்தர் சதா காலமும் கிருபை செய்கிறவருமாய் இருக்கிறார். அபிஷேகம் உனக்குள்ளே இருப்பதால் தான் இந்த கிருபை வருகிறது. 

5. கர்த்தர் தாம் பண்ணின அபிஷேகம் 

சகலத்தையும் போதிக்கிறது 

I யோவான் 2:27
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.




FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment