Monday, August 6, 2018

அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை


கன்மலை கிறிஸ்துவ சபை
தேவசெய்தி : Brother Micheal
Date : 29.07.2018



வனாந்தரத்திலே கைவிடவில்லை


நெகேமியா 9:19
நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.

வனாந்திர பாதை தான் நமக்கு வாழ்க்கையில் நிறையவே கற்றுக்கொடுக்கும். வனாந்திரத்தின் பாதையில் நடக்கிறவர்களை கர்த்தர் என்றுமே கைவிடமாட்டார். கர்த்தர் தனக்கு ஆராதணை செய்ய தம் ஜனங்களை எகிப்தில் இருந்து கூட்டி வந்தார். 

யாத்திராகமம் 8:1
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

யாத்திராகமம் 9:1
பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.

சங்கீதம் 136:16
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது

1. வனாந்திரத்திலே உன் பிள்ளையின் சத்தத்தை கேட்பார் 

ஆதியாகமம் 21:14
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

ஆதியாகமம் 21:15
துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு

ஆதியாகமம் 21:16
பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.

ஆதியாகமம் 21:17
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை குறித்து கவலைப்படவேண்டாம், வனாந்திரத்தின் வழியே கடந்து செல்லும் உன் பிள்ளையின் சத்தத்தை கர்த்தர் கேட்டு ஆசீர்வதித்து பெரிய ஜாதியாக்குவார். எப்பொழுதெல்லாம் உங்கள் பிள்ளைகள் கர்த்தரை நோக்கி கூப்பிடுகிறார்களோ கர்த்தர் இறங்கி வந்து ஆசீர்வதிப்பார். 

2. வனாந்திரத்திலே வழியை உண்டாக்குவார் 

ஏசாயா 43:18
முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.

ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

ஏசாயா 43:20
நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.

ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

3. வனாந்திரத்திலே மேய்ச்சலை உண்டாக்குவார் 

யோவேல் 2:21
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

யோவேல் 2:22
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.

யோவேல் 2:23
சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

யோவேல் 2:24
களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.

யோவேல் 2:25
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

யோவேல் 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

யோவேல் 2:27
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

உங்கள் வாழ்க்கையில் வனாந்திரத்தை போல ஒன்று இல்லாமல் இருந்தாலும் கர்த்தர் சொல்லுகிறார் மேய்ச்சலை உண்டாக்குவேன் என்று, அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. 

4. வனாந்திரத்திலே உன்னை ஆதரிப்பார்  

அப்போஸ்தலர் 13:17
இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,

அப்போஸ்தலர் 13:18
நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,

அப்போஸ்தலர் 13:19
கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,

வனாந்திரத்திலே தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருஷ காலம் கர்த்தரே ஆதரித்தார். அதுபோல நம்மையும் தேவன் வனாந்திர வழியில் ஆதரிக்க வல்லவராய் இருக்கிறார்.

5. வனாந்திரத்திலே உனக்கு ஜெயத்தை தருவார் 

மத்தேயு 4:1
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

மத்தேயு 4:2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 

மத்தேயு 4:3
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:5
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:

மத்தேயு 4:6
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

மத்தேயு 4:7
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:8
மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

மத்தேயு 4:9
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.

மத்தேயு 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 4:11
அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

இயேசுவை போலவே நாமும் ஆவியானவராலே வனாந்திரத்திற்கு கொண்டு போகப்பட்டோம். அந்த கடின பாதையிலும் இரவும், பகலும் தேவன் நம்முடன் தான் இருக்கிறார். இந்த வனாந்திரத்தின் பாதையில் சோதனைக்காரன் அதிக தடவை வருவான். இயேசு வனாந்திரத்திலே பிசாசை ஜெயித்தது போல நமக்கும் தேவன் நிச்சயமாக எல்லா போராட்டங்களில் இருந்தும் ஒரு ஜெயத்தை கொடுப்பார். ஏனென்றால் அவர் தம்முடைய ஜனங்களை வனாந்திரத்தில் கைவிடாத தேவன். 


FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church 
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment