கன்மலை கிறிஸ்துவ சபை
Word of God : Brother Micheal
Date : 28.05.2019
வெளி 3:20
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
1. கூடார வாசல் - வாக்குத்தத்தை நிறைவேற்றுவார்
ஆதியாகமம் 18:1
பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
ஆதியாகமம் 18:2
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து;
ஆதியாகமம் 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.
ஆதியாகமம் 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.
ஆதியாகமம் 18:8
ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.
ஆதியாகமம் 18:9
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
ஆதியாகமம் 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
இங்கு மூன்று புருஷர்களும் அதரிசனமாய் ஒரு பகலின் உஷ்ணவேலையில் கூடார வாசலில் ஆபிரகாமுக்கு முன்பு நிற்கிறார்கள். ஆபிரகாம் அந்த மூன்று புருஷர்கள் சத்தத்தை கேட்டு தன் வாசலை திறந்தான். ஆபிரகாம் சொன்ன எல்லா காரியங்களையும் கேட்டு நீ சொன்னபடியே செய் என்று சொல்லி அவர்கள் பிரவேசித்தார்கள். அவர்கள் போஜனமும் பண்ணுகிறார்கள், அதோடு மட்டும் அல்லாமல் ஆபிரகாமுக்கு தீர்க்கதரிசன வார்த்தைகளை கூறி கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்தார். கர்த்தர் கூடார வாசலில் வந்த நோக்கமாவது ரொம்ப காலமாக உனக்கு தாமதித்து வந்த ஆசீர்வாதங்களை அளிப்பதற்காக, உன்னை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்வதற்காக தான் கர்த்தர் கூடார வாசலில் கடந்து வருகிறார். தேவன் கூடார வாசல் வந்த நோக்கம் அவர் ஏற்கனவே உனக்கு அளித்த வாக்குத்தத்தை நினைவுப்படுத்தி அவர் சொன்னதை நிறைவேற்றதான்.
2. ஐசுவரியவானுடைய வாசல் - உங்களை தேற்றுவார்
லூக்கா 16:29
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
லூக்கா 16:20
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
லூக்கா 16:21
அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
லூக்கா 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
லூக்கா 16:23
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
லூக்கா 16:24
அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
லூக்கா 16:25
அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
இன்றைக்கு நாம் லாசருவை போல இருக்கலாம், ஏறத்தாழ லாசருவை போல நம்மை சுற்றிலும் அநேக பேர் நன்றாக வாழ்கிறார்கள், நன்றாக புசிக்கிறார்கள், அவர்கள் நினைத்தது எல்லாமே அவர்களுக்கு கிடைக்கிறது. ஒரு தூதன் ஐஸ்வரியவானுடைய வாசலண்டையிலே வந்தார். பின் லாசருவை ஆபிரகாம் மடியிலே கொண்டுபோய் விடப்பட்டார், நீ தரித்தரமாய் இருந்தாலும் உனக்காக ஒரு தூதன் உண்டு, நீ கஷ்டப்படுகிற இந்த வேளையிலும் உனக்காக ஒரு தூதன் உண்டு. ஏற்ற காலத்தில் ஆபிரகாம் மடியில் கொண்டுபோய் விடப்படுவோம். ஆபிரகாம் மடி என்று சொல்லும் பொழுது அது இளைப்பாறுதலை குறிக்கிறது. லாசருவை போல நீங்கள் நோயினாலும், வறுமையினாலும் இருந்தாலும் சரி உங்களை ஆபிரகாம் மடியில் சேர்க்கும் படியாய் ஒரு தூதன் வருவார். நமக்காக ஒரு ஆபிரகாம் மடி உண்டு அங்கே நாம் தேற்றப்படுவோம். ஐஸ்வரியவானுடைய வாசலில் தூதன் வந்ததன் நோக்கம் உங்களை தேற்றுவதற்காக.
3. சோதோமின் வாசல் - மீட்டு கொள்வார்
ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
ஆதியாகமம் 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
ஆதியாகமம் 19:3
அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
ஆதியாகமம் 19:4
அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
ஆதியாகமம் 19:5
லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.
ஆதியாகமம் 19:6
அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்
ஆதியாகமம் 19:7
சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
ஆதியாகமம் 19:8
இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
ஆதியாகமம் 19:9
அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
ஆதியாகமம் 19:10
அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி,
ஆதியாகமம் 19:11
தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
ஆதியாகமம் 19:16
அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
நாம் பல நேரங்களில் சோதோமின் வாசலிலே உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். நாம் சோதோமின் வாசலில் இருப்பது கர்த்தர் விரும்பவில்லை. ஆண்டவர் சோதோமின் வாசலில் வருவதற்கு காரணம் என்ன என்று சொன்னால் நீ சோதோமிலே அழிந்து போகாதபடிக்கு இரண்டு தூதர்களை கர்த்தர் நியமித்து உங்களை மீட்டு கொள்வார். சில பாவங்கள் சோதோமை போல உன்னிடையே காணப்பட்டாலும் நாம் மனம் வருந்தி மனம் திரும்பி கர்த்தர் அழைக்கும் பொழுது கர்த்தர் நமக்குள் பிரவேசிப்பார். அந்த பாவத்தில் இருந்து மீட்டுக்கொள்வார்.
4. அலங்கார வாசல் - பிரவேசிக்க செய்வார்
அப்போஸ்தலர் 3:1
ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
அப்போஸ்தலர் 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
அப்போஸ்தலர் 3:3
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.
அப்போஸ்தலர் 3:4
பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 3:5
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.
அப்போஸ்தலர் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
அப்போஸ்தலர் 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
அப்போஸ்தலர் 3:8
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
அந்த சத்தத்தை கேட்டு பேதுருவையும், யோவானையும் அவன் பிரவேசிக்க செய்தபடியால் அந்த வல்லமை அவனுக்குள் சென்றதாலே அவன் சுகம் பெற்றான். முதலில் நாம் இயேசுவை நமக்குள் பிரவேசிக்க செய்ய வேண்டும். அதற்கு நாம் அவருடைய சத்தத்தை கேட்க வேண்டும். அந்த சத்தம் கேட்க வேண்டும் என்று சொன்னால் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். கர்த்தருடைய சத்தத்தை கேட்கிறவர்களாய் நாம் இருக்க வேண்டும்.
FOR CONTACT
Brother Micheal
Kanmalai Christian Church
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment