Wednesday, May 25, 2016

கன்மலை சபையின் 9ஆம் ஆண்டு விழாவில் Eva. Sebastin அவர்களின் தேவச்செய்தி

கன்மலைகிறிஸ்தவ சபையின் 9ஆம் ஆண்டு விழா
Date: 24.4.2016
Speaker: Eva. Sebastin

கர்த்தரிடத்தில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும்

கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார். ௭ல்லா சூழ்நிலைக்கும் அவர் நமக்கு தேவனாய் இருக்கிறார். பாடுகள் வந்தாலும், கழ்டங்கள் வந்தாலும், நெருக்கங்கள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும்,  எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இஸ்ரவேலை காக்கிற தேவன் உறங்குவதும் இல்லை,
தூங்குவதும் இல்லை, ஆகையால் எவ்வளவுதான் சத்துரு அவனது சூழ்ச்சிகளை கர்த்தரின் பிள்ளைகளின் மேல் எழும்பினாலும், நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவன் இருக்கிறார். அந்த நம்பிக்கை நமக்கு ஒரு பெரிய சந்தோழத்தை கொடுக்கிறது. நமக்குள்ளே அது அஸ்திபாரமாக இருப்பதால் அவரை துதிக்கிறோம், ஆராதிக்கிறோம்.

அநேக நெருக்கத்தின் மத்தியில் இந்த சபை கட்டப்பட்டுள்ளது. நான் கட்டிடத்தை சொல்லவில்லை இங்கு வந்துள்ள ஆத்துமாக்கள் தான் சபை. நீங்க இருப்பதால்தான் இந்த கட்டிடத்திற்கு மகிமை. இந்த சபை அநேக பாடுகளின் மத்தியிலும், வேதணைக்கு மத்தியிலும் தேவனால் கட்டப்பட்ட சபை

ஆகாய் 1:4
இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?

ஆகாய் 1:5
இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

ஆகாய் 1:6
நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.

ஆண்டவர் சொல்கிறார், உங்க வழிகளை யோசிச்சுப் பாருங்கள். விசுவாசிகளுக்குள் விசுவாசம் இருக்க வேண்டும். நல்லா உழைக்கிறோம் சம்பாத்தியம் இல்லை,சாப்பிடுகிறோம் திருப்தி இல்லை, ஆண்டவர் வேதனையோடு இந்த வார்த்தைப் பேசுகிறார்.

சங்கீதம் 98:3
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.

ஆண்டவர் சொல்கிறார் நான் இஸ்ரவேல் குடும்பத்தை மறக்க மாட்டேன். ஒவ்வொரு இஸ்ரவேலருக்குள்ளும் ஒரு எகிப்தியன் இருக்கிறான். நாம் உலகத்தோடு ஒத்துப்போகிறோம் அதுதான் எகிப்திய வாழ்க்கை கர்த்தரோடப் பிள்ளைகளுக்கு ஆண்டவர் சொல்கிறார் உலகத்தோடு ஒத்துப் போக கூடாது. தேவ வசனத்தோடு ஒத்துப் போகனும் உலகத்தோடு ஒத்துப் போகும் போது நாம் தேவனுக்குப் பகையாய் இருக்கிறோம்.

யாக்கோபு 4:3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

யாக்கோபு 4:4
விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

ஆண்டவர் சொல்கிறார் நீங்க நன்றாக ஜெபம் பண்ணுகிறீர்கள் ஆனால் உங்கள் ஜெபத்துக்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுக்கு என்ன வேண்டும் நான் அறிந்திருக்கிறேன், ஆனால் நீஙகளோ என்னை இன்னும் அறியாமல் இருக்கிறீர்கள். உங்கள் பிரயாசங்கள் எனக்கு தெரியும் நீங்கள் உங்கள் இச்சியினிமித்தம் ஜெபம் பண்ணுகிறீர்கள் ஆண்டவர் சொல்கிறார் என் பிள்ளைகள் என்னை குறித்து உணர்வில்லாமல் இருக்கிறார்கள்.
II நாளாகமம் 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

II நாளாகமம் 15:3
இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

II நாளாகமம் 15:4
தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

II நாளாகமம் 15:5
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

II நாளாகமம் 15:6
ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.

II நாளாகமம் 15:7
நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.

நீங்க கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார். ஆண்டவர் சொல்கிறார் வெகு நாளாய் என் ஜனங்களுக்கு மத்தியில் நான் இல்லை. கர்த்தருக்குள் நாம் வைராக்கியமாய் இருக்கும் போது அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார். கர்த்தருக்கு நாம் பயப்படனும். வெறும் பிரச்சினை வரும்போது மட்டும் கர்த்தரிடம் வருகிறார்கள். உங்களுக்குள் சமாதனம் இல்லை ஆண்டவரே அவர்களை தலங்கப் பண்ணினார். எனக்காக நீங்கள் வைராக்கியமாய் இருந்தால் நான் உங்கள் மீது வைராக்கியமாய் இருப்பேன். அப்பேற்பட்ட மகத்தான தேவனை நாம் ஆராதிக்கிறோம்.

லூக்கா 12:34
உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

இவரை நாம் தேவனாய் கொண்டபடியால் நாம் பாக்கியவான்கள். இயேசு ஒரு பொக்கிஷம்.

எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

கர்த்தர் சொல்கிறார் நீ என்னை நோக்கி கூப்பிட்டால் உன் புத்திக்கு எட்டாத காரியத்தை உனக்கு செய்வேன்.

வெளி 3:8
 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

நீ செய்கிறதையெல்லாம் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். உனக்கு கொஞ்சம் பெலனும், விசுவாசமும் இருக்கிறதை நான் பார்க்கிறேன். என் வசனத்தை நீ  கைகொள்கிறபடியால் திறந்த வாசலை உனக்காக வைத்திருக்கிறேன்.

எரேமியா 4:1
இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.

ஆண்டவர் சொல்கிறார் என்னிடம் திரும்புவதுக்கு மனதாய் இருந்தீர்களானால், நீங்கள் செய்கிற அருவெறுப்பையெல்லாம் அவர் மாற்றுவார். ஆண்டவர் கூறுகிறார் நீ அலைந்து திரிவதில்லை.

யோபு 9:22
ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.

உங்களுடைய சன்மார்க்க வாழ்க்கை உங்களை காப்பாற்றாது. நீங்கள் ஆண்டவர் மேல் வைத்திருக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை காப்பாற்றும். சன்மார்க்கன் அவன் சுயபுத்தியால் அழிகிறான். ஆனால் நீதிமானை நான் கைவிடுவதில்லை. நான் சிந்தின இரத்தம் உன்னை நீதிமானாய் ஆக்கியது ஆகையால் நான் கைவிடுவதில்லை.

ரோமர் 10:2
தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.

என் ஜனங்கள் வைராக்கியமாய் இருக்கிறார்கள். ஆனால் என்னுடைய அறிவின் படி அவர்கள் வைராக்கியமாய் இல்லை என ஆண்டவர் சொல்கிறார் அவரை அறியும் அறிவுதான் வேதபுஸ்தகம்.

ஏசாயா 42:21
கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

என் வசனம் உனக்குள் இருந்தால் நான் உன்னிடம் பிரியமாய் இருப்பேன். உன் பிரச்சினை நேரத்தில் எந்த வசனத்தை கூறினாயோ,அதை கர்த்தர் மகிமைப் படுத்துவார். என்னை இரவும், பகலும் தேடுகிற பிள்ளைகளுக்கு நான் ஞாயம் செய்வேன்.

சங்கீதம் 119:62
உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

கர்த்தர் எனக்கு ஞாயமும், நீதியும் செய்கிறதாலே நான் நடுராத்திரியில் எழுந்து துதிப்பேன் என்று தாவீது சொல்கிறார்.

சங்கீதம் 119:164
உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

கர்த்தர் எனக்கு ஞாயமும், நீதியும் செய்கிறதாலே நான் ஒரு நாளைக்கு ஏழுதரம் துதிப்பேன் என்று சொல்கிறார். ஆண்டவரை நாம் பாடி துதிக்கனும், ஆண்டவர் உங்களுக்கு நன்மையை தருவார்.ஆமென்.

No comments:

Post a Comment