Saturday, May 28, 2016

கர்த்தராலே என் இரட்சிப்பு வரும்

 ACA சபையின் கிளை சபை கன்மலை சபை
 Title: கர்த்தராலே என் இரட்சிப்பு வரும்
Date: 22:05:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
 தேவச்செய்தி:  Brother Micheal
" கர்த்தராலே என் இரட்சிப்பு வரும் "
 சங்கீதம் 62:1
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.

மூன்று விதமான காரியங்களிலிருந்து நமக்கு இரட்சிப்பு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1. பாவத்திலிருந்து நமக்கு இரட்சிப்பு 
2. ஆபத்திலிருந்து நமக்கு இரட்சிப்பு 
3. சத்துருவிடமிருந்து நமக்கு இரட்சிப்பு

ஞாயிற்று கிழமை மாத்திரம் கிறிஸ்தவனாய் இருப்பது நல்லதல்ல. எல்லா நாளும் கர்த்தருக்கு உத்தமமாய் இருக்க வேண்டும் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

1. பாவத்திலிருந்து நமக்கு இரட்சிப்பு

சங்கீதம் 79:8
பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

 சங்கீதம் 79:9
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.

தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும். விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்! நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!

எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்! எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்! உமது நாமத்துக்கு அது மகிமையை தரும். உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.

நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

நீதிமொழிகள் 28:18
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

பாவங்களை செய்தவன் நித்திய ஜீவனிலே வாழ்வடைய மாட்டான். நம்முடைய பாவங்களை மனப்பூர்வமாக தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு அதை விட்டு விட வேண்டும். தேவனுக்கு முன்பாக நாம் உத்தமனாய் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் நடப்போம் ஆனால் எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்.

மத்தேயு13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

மத்தேயு13:14
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

மத்தேயு13:15
இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

மத்தேயு13:16
உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.

மத்தேயு13:17
அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவர்களின் இருதயம் கொழுத்திருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் பாவங்களை கைகொள்ளும் பொழுது எல்லா காரியத்திலும் கர்த்தர் ஆரோக்கியத்தை நிறுத்திவிடுவார். நீங்கள் மனந்திரும்பும் பொழுது உங்களை பாவங்களிலிருந்து இரட்சிக்க கர்த்தர் வல்லவராயிருக்கிறார்.
 
 2. ஆபத்திலிருந்து நமக்கு இரட்சிப்பு

சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

நம் தேவன் இரட்சிப்பை காண்பிப்பார், என்னவென்றால் அவ்வப்பொழுது உதவி செய்து கொண்டே இருப்பார்.  இரட்சிப்பை நமக்கு எப்பொழுதும் காண்பித்து கொண்டே இருப்பார். சத்துருவின் பலவிதமான சூழ்ச்சிகள் நமக்கு எதிராக எழும்பினாலும் ஆபத்து நேரத்திலே அவரை நோக்கி கூப்பிடும் பொழுது அவைகள் அனைத்திலிருந்தும் கர்த்தர் நம்மை பாதுகாப்பார்.  நாம் ஆபத்திலே சிக்கி கொள்ளும் பொழுது கர்த்தர் இரட்சிப்பை காண்பித்து கொண்டே இருப்பார். அதனால் நாம் பயப்பட வேண்டியதில்லை.

தானியேல் 3:23
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.

தானியேல் 3:24
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.

தானியேல் 3:25
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

தானியேல் 3:26
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அவர்கள் தேவனுக்கு வைராக்கியமாய் இருந்ததால், ஆபத்தில் ஆண்டவர் அவர்களோடு இருந்தார். உங்களில் யார் யார்க்கு என்ன ஆபத்து வந்தாலும் சரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களோடு இருப்பார்.
 3. சத்துருவிடமிருந்து நமக்கு இரட்சிப்பு

சங்கீதம் 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 18:3
துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.

நீ போகும் இடமெல்லாம் நம் தேவனாகிய கர்த்தரை நினைத்து கொள்ளுங்கள் அப்பொழுது அவர் நம் பாதையை செவ்வைப் படுத்துவார்.

எனது பெலனாகிய கர்த்தாவே,  நான் உம்மை நேசிக்கிறேன்!” கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார். பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார். தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும். உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார். எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர். ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன்.

சங்கீதம் 3:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

சங்கீதம் 3:2
தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். 

சங்கீதம் 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர், பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர். பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர். ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்! 

உனக்கு விரோதமாய் எழும்பும் எந்த அம்பும் வாய்க்காமல் போகும். நம் ஆத்துமாவை காக்கும் படியாகத்தான் பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார். எந்த இடத்தில் சத்துருவின் சூழ்ச்சியால் நீங்கள் தாழ்த்தப்பட்டீர்களோ, கர்த்தர் நம் ஆத்துமாவை மீட்டு அந்த இடத்திலே நம் தலையை உயர்த்துவார்.

சங்கீதம் 56:2
என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.

சங்கீதம் 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

என் பகைவர்கள் தொடர்ந்து என்னைத் தாக்குகிறார்கள்.  என்னோடு போரிடுபவர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள். நான் அஞ்சும்போது, உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.

சங்கீதம் 52:5
தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். 

எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!  அவர் உன்னை உனது வீட்டிலிருந்து இழுத்து எறிவார். அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.

No comments:

Post a Comment