Tuesday, May 10, 2016

கர்த்தரின் தயவுள்ள கரம்


ACA சபையின் கிளை சபை கன்மலை சபை
 Title: கர்த்தரின் தயவுள்ள கரம்
Date: 1:05:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

தேவச்செய்தி:  Brother Micheal

"கர்த்தரின் தயவுள்ள கரம்"

தேவனுடைய தயவுள்ள கரம் உங்கள் மேல் இருக்கும். இதுவரை நடத்தின ஆண்டவர் இனிமேலும் நடத்துவார். நீ நொறுக்கப்படுவதில்லை, நீ அசைப்படுவதில்லை.

எஸ்றா 7:9
முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.

எஸ்றா 7:6
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

தேவனுடைய கரம் அவர் மேல் இருந்தது. இன்றைக்கு உங்கள் மீதும் தேவனுடைய கரம் இந்த மாதத்தில் இருப்பதாக

தேவனுடைய கரம் உன் மேல் வரும் ௭ன்று சொன்னால் அது நித்தியமானது. நம் தேவனாகிய கர்த்தர் இந்த கன்மலை சபைக்கு கொடுக்கிற வாக்குதத்தம் ௭ன்ன ௭ன்று சொன்னால்

தேவனுடைய கரம் ௭வ்வாறு நமக்கு இருக்கும்

1. கர்த்தர் நம்மை மேன்மையாய் வைப்பார்.

I நாளாகமம் 29:12
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

I நாளாகமம் 29:13
இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

I நாளாகமம் 29:14
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

ஐசுவரியமும் கனமும் நம் தேவனாலே வருகிறது. தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார். ௭ல்லாவற்றையும் ஆளுகிறவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே, உமது கரத்திலே சத்துவமும், வல்லமையும் உண்டு.

மேன்மை என்று சொல்லும் பொழுது கிறிஸ்துவத்திலே அதிகமாய் காணப்பட வேண்டும். ௭ல்லோரைப் பார்க்கிலும் கர்த்தர் உங்களை மேன்மையாய் வைப்பார் உன் கண்கள் அதை காணும். ௭ந்த சமுதாயத்தில் நீங்கள் வெட்கப்பட்டு இருந்தீர்களோ அதே சமுதாயத்தில் கர்த்தர் உங்களை சாட்சியாய் வைப்பார்.

2. கர்த்தரின் கரம் நன்மையாய் இருக்கும்.

நெகேமியா 2:18
என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

நெகேமியா 2:19
ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.

நெகேமியா 2:20
அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.

நெகேமியா 2:16
நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை.

இன்றைக்கு நன்மை செய்யும் தேவனுடைய கரம் உங்கள் மேல் இருக்கும். உங்களிடத்தில் நன்மை செய்யும்படி கர்த்தருடைய கரம் இரங்கி வரும்.

3. கர்த்தரின் கரம் நமக்கு பாதுகாப்பை தரும்

ஏசாயா 51:16
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

ஏசாயா 51:17
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.

ஏசாயா 51:18
அவள் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.

ஏசாயா 51:19
இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல்செய்வேன்?

ஏசாயா 51:20
உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

ஏசாயா 51:21
ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

ஏசாயா 51:22
கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.

ஏசாயா 51:23
உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

உங்களுக்கு விரோதமாய் செய்யப்பட்ட எல்லா காரியத்தையும் கர்த்தர் திருப்பிப் போடுவார். நன்மை செய்கிற தேவனாகிய கரம் உன்னோடு இருக்கும். சபையில் உள்ள அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கும். விஷேஷித்த பாதுகாப்பு 
ஆமென்.

இந்த தேவ செய்தியை வாசிக்கிற உங்களுக்கும் கர்த்தரின் தயவுள்ள கரம் இருக்கும்.

No comments:

Post a Comment