ACA சபையின் கிளை சபை கன்மலை சபை
Title: கர்த்தரிடத்தில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும்
Date: 29:05:2016
Speaker: Evangelist Sebastin
Worship : Brother Micheal & Brother Joshua
Title: கர்த்தரிடத்தில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும்
Date: 29:05:2016
Speaker: Evangelist Sebastin
Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Eva. Sebastin
" கர்த்தரிடத்தில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும் "
வேதம் சொல்லுகிறது சீயோனிலே வாசமாயிருக்கிற கர்த்தரை ஸ்தோதரித்து கெம்பீரமாக பாடும் பொழுது, அவர் நடுவிலே வந்து பெரிய காரியங்களை செய்வார். ஆமென்.
ஏசாயா 12:4
அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர்
நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே
அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.
ஏசாயா 12:5
கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
கர்த்தர் மகத்துவமான காரியங்களை செய்கிறதினாலேதான் கர்த்தரை நாம் துதிக்கிறோம். நமக்குள்ளே இந்த கெம்பீரமான துதி எதினாலே வருகிறது என்றால் நாம் ஆராதிக்கிற தேவன் மகத்துவங்களை செய்கிறார். நம்மில் சிலர் துதிக்க வேண்டுமே என்று துதிப்பார்கள், சிலர் நன்மையை எதிர் பார்த்து துதிப்பார்கள், ஆனால் தாவீது அப்படி அல்ல நான் தேவனை எக்காலத்திலும் துதிப்பேன் என்கிறார். அதினால் தான் தாவீதுக்கு ஜெயம் கிடைத்தது.
சங்கீதம் 139:14
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்;
உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
ஆண்டவர் மனுஷரை பிரமிக்க தக்க விதத்தில் உருவாக்கியுள்ளார். அதிசயமாய் மனுஷரை உண்டாக்கினார். ஆங்கிலப் பதத்திலே இவ்வாறு இருக்கும் I fearfully created Man ஆண்டவர் நம்மை உண்டாக்கும் பொழுது பயத்தோட உண்டாக்கினார். ஏனென்றால் அவன் மூலமாய் பிரம்மிக்கதக்க காரியங்களை நான் பார்க்க வேண்டும். அதற்காக தான் கர்த்தர் நம்மை உருவாக்கியிருக்கிறார். நாம் இந்த துதிப்பதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கு நம்பிக்கையாய் நாம் கர்த்தரை துதிக்கிறோம், அவர் நம்மை என்றுமே ஜெயமாய் நடத்துகிற தேவன்.
யாத்திராகமம் 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே
தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும்
அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
யாத்திராகமம் 15:21
மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
சங்கீதம் 138:7
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என்
சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம்
என்னை இரட்சிக்கும்.
சங்கீதம் 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
நெகிழவிடாதிருப்பீராக என்பதன் பொருள் என்ன என்று தெரியுமா? நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறாறோ அதை யாராலும் தடுக்க முடியாது. அந்த நம்பிக்கை தாவீதுக்கு இருந்ததால் தான் அவர் சொல்கிறார் எக்காலத்திலும் நான் தேவனை ஸ்தோதரிப்பேன். ஆராதனை என்பது அவ்வளவு முக்கியம், தேவனின் மகத்துவத்தை நாம் சபை நடுவிலே துதிக்க வேண்டும். அநேகர் அவ்வாறு துதிப்பது இல்லை, ஏதோ உணர்ச்சி வசப்பட்டு துதிக்கிறார்கள், ஏதோ சில காரணங்களுக்காய் துதிப்பது, பிரச்சினைகள் வரும் பொழுது மட்டும் துதிப்பது. நம் வாழ்க்கையே நம் தேவனாகிய கர்த்தரை துதிப்பதற்காகதான்.
இந்த பூமியில் நம்மை நேசிப்பதற்கு ஆண்டவர் தவிர யாரும் இல்லை.
எரேமியா 9:4
நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச்
சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச்
சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
எரேமியா 9:5
அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்;
பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய
உழைக்கிறார்கள்.
எரேமியா 9:5
கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மனுஷன் எப்படியாம், நன்பன் தான், சகோதரன் தான் ஆண்டவர் சொல்கிறார் அவர்களை நம்ப வேண்டாம் நான் தான் உனக்கு சொந்தம்.
I பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு
வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட
சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும்,
அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
நாம் அனைவரும் கர்த்தருக்கு சொந்தமான ஜனம், அந்த சொந்தத்தை ஏன் நீங்கள் உரிமை பாராட்ட மாட்டேன் என்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை எங்கே என்று ஆண்டவர் கேட்கிறார்.
எபிரெயர் 4:2
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும்
அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள்
கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரெயர் 4:3
விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய
கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும் இவர்கள் என்னுடைய
இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்
என்றார்
ஒரு மனிதனுக்கு இளைப்பாருதல் வரும் என்று சொன்னால் மனதிலே சமாதானம் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் வியாதியே வராது. ஆண்டவர் சொல்கிறார் இந்த இளைப்பாருதலில் என் பிள்ளைகள் வருவதில்லை. நாம் நமது வாழ்க்கையில் கர்த்தருக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும், அதை வைத்து தான் நமக்கு சமாதானம், அதை வைத்து தான் சந்தோஷம், அதை வைத்து தான் தேவனுடைய இளைப்பாருதல், அதை வைத்துதான் தேவனுடைய வாக்குத்தத்ததை வாழ்க்கையில் அனுபவிக்க முடியும்.
II தீமோத்தேயு 2:13
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
நாம் எல்லாம் ஆண்டவரிடம் இதை செய்கிறோம், அதை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு செய்யாமல் விட்டு விடுகிறோம். ஆண்டவர் சொல்கிறார் நீங்கள் உண்மை இல்லாதவராக இருந்தாலும் சரி ஆனால் நான் உண்மையாய் இருக்கிறேன்.
நீதிமொழிகள் 3:2
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
நீடித்த நாட்கள் என்றால் வியாதியில்லாத வாழ்க்கை. தீர்க்காயுசு யாருக்கு வரும் சந்தோஷமாக இருப்பவர்களுக்கு வரும். சமாதானம் எப்பொழுது வரும் ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் பொழுது இந்த மூன்றும் நமக்கு தேவை, கர்த்தருடைய போதகத்தை மறக்க கூடாது. நம்முடைய இருதயத்தை காத்துக் கொள்ள வேண்டும். யாரிடமும் கையேந்தி நிற்க கர்த்தர் உங்களை விடமாட்டார் எப்பொழுது என்றால் போதனையை மறவாமல் நாம் நடக்க வேண்டும்.
சங்கீதம் 119:158
உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
வசனத்தை காத்து கொள்ளாதவர்களை ஆண்டவர் துரோகிகள் என்று அழைக்கிறார். கர்த்தர் நம்மை கவனிக்கிறார்.
சங்கீதம் 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
கர்த்தருடைய ஆலயத்துக்கு போகும் பொழுது பயபக்தியுடன் போக வேண்டும்.
நீதிமொழிகள் 5:11
முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
நீதிமொழிகள் 5:12
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
தேவனோட சமூகத்துக்கு ஆயுத்தமாயும், பயத்தோடும் வர வேண்டும். ஒரு பரிசுத்தத்தோடு வர வேண்டும். நாம் நேரத்தோடு வருவது எதற்கு கர்த்தருடைய சமூகத்திலே காத்து இருக்க வேண்டும் அவ்வாறு நடவாமல் போனால் என்ன நடக்கும் என்றால், நம்முடைய மாமிசமும், சரீரமும் உருவழியும். போதகர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் போவது, எனக்காகத் தானே கடிந்து கொள்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.
ஏசாயா 9:13
ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
ஏசாயா 9:14
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
அடிக்கிற ஆண்டவனிடத்தில் திரும்பி அவரை தேடனும். கடைசியாய் நீங்கள் என்னிடத்தில் தான் வர வேண்டும் என்று ஆண்டவர் சொல்கிறார். அவர் தான் உங்களை சமாதானமாக நடத்துகிறவர். வாழ்க்கையில் என்னென்ன அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அவையாவும் தடைபடும். இதற்கு காரணம் ஆண்டவரல்ல நாம் தான்அதனால் தான் ஆண்டவரோட நாம் நெருங்க வேண்டும். நாம் அவரிடம் நெருங்க, நெருங்க உதவிகள் யாவும் நம்மை தேடி வரும். ஆகையாலே தேவனுடைய சமூகத்துக்கு வருகிற நீங்கள் ஆயுத்தமாய் வர வேண்டும்.
சங்கீதம் 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
சங்கீதம் 21:5
உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்.
நமது ஜெபத்துக்கு ஆண்டவர் பதில் தருகிறார். நாம் அவரிடத்தில் ஆயுளைக் கேட்டால், அவர் நமக்கு தீர்காயுசை தருகிறார். ஆண்டவரோடு ஒரு உணர்வடைய வேண்டும். பிரச்சினைகள் வரும், ஆனால் கலங்க வேண்டாம். ஆண்டவர் சொல்கிறார் நான் உலகத்தை ஜெயித்தேன், அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள்
விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும்
தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும்
உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
பிலிப்பியர் 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ,
நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ,
நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே
சிந்தித்துக்கொண்டிருங்கள்.
பிலிப்பியர் 4:9
நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும்
இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன்
உங்களோடிருப்பார்.
அப்பொழுதுதான் ஆண்டவர் உங்களோடு இருப்பார். நாம் ஆண்டவர் சொல்கிறபடி செய்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்துப் பார்க்க வேண்டும், அப்பொழுது தான் தேவன் உங்களோடு இருப்பார்.
நீதிமொழிகள் 5:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
நீதிமொழிகள் 5:6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீதிமொழிகள் 5:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
1. சுயபுத்தியையும், சுய இச்சையையும் விட்டு விட வேண்டும்
2. எல்லா காரியங்களையும் ஆண்டவரிடத்தில் தெரியப்படுத்த வேண்டும்
3. தேவனுடைய வசனம் வரும்பொழுது இடரலடையக் கூடாது
நீதிமொழிகள் 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
நீதிமொழிகள் 3:12
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
ஆண்டவர் சொல்கிறார் என்னோடு இரு, பதறாதே உங்களிடத்தில் அன்பு கூறுவதினால் தான் உங்களை வசனத்தின் மூலமாக சிட்சிக்கிறார்.
தீத்து 1:14
விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
கடிந்து கொள்வது நல்லது. வேதத்தில் இருந்து கர்த்தர் நம்மை கடிந்து கொள்வது நல்லது அதை நாம் ஏற்று கொள்ள வேண்டும். கர்த்தர் உங்களை சீர்ப்படுத்தி, பெலப்படுத்தி அப்புறம் ஆசீர்வதிக்க விரும்புகிறார்.
கடிந்து கொள்வது நல்லது. வேதத்தில் இருந்து கர்த்தர் நம்மை கடிந்து கொள்வது நல்லது அதை நாம் ஏற்று கொள்ள வேண்டும். கர்த்தர் உங்களை சீர்ப்படுத்தி, பெலப்படுத்தி அப்புறம் ஆசீர்வதிக்க விரும்புகிறார்.
No comments:
Post a Comment