Wednesday, June 8, 2016

இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்

ACA சபையின் கிளை சபை கன்மலை சபை
 Title: இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்
Date: 05:06:2016
Speaker: Brother Michael

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael
இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்  "

வெளி 21:5
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

நம் ஆண்டவர் சகலத்தையும் புதிதாக்குகிறார். உங்களுக்குள் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று தெரியாது ஆனால் உங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் அவருக்கு எல்லாம் தெரியும். எதினாலே உங்களுடைய ஆசீர்வாதம் தடைபடுகிறது என்பதும் அவருக்கு தான் தெரியும்.

இந்த தேவன் என்ன சொல்கிறார் என்றால், இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். இனிவரும் நாட்களில் நீங்கள் எந்த சிறையிருப்பில் இருந்தாலும் ஆண்டவர் அதை அனைத்தையும் உடைத்தெரிந்து உங்களுக்கு புதிதாக்கப் போகிறார். நீங்கள் விசுவாசியுங்கள்.
இந்த வசனம் வெளிப்படுத்தின விஷேஷத்தில் ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் போது சொல்லப்பட்டவை. இந்த வசனங்கள் எல்லாம் யோவான் பூமியிலே இருக்கும் பொழுது அவர் ஆவிக்குள்ளாகி பார்த்ததான காரியங்கள். இவையெல்லாம் பூமியிலும், பரலோகத்திலும் நடக்கும் என்று சொல்லி ஒரு தூதரானவர் அவரை கூட்டி கொண்டு போய் சகலத்தையும் நடக்கப் போவதைப் பற்றி எல்லாம் விவரித்து அவருக்கு காட்டுகிறார்.

ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தான் நம்முடைய தேவைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் பரலோகத்தில் கொண்டு போய் தெரியப்படுத்தி நமக்கு பதில் அளிக்கிறார். அருமையான தேவன்.

ஆண்டவர் என்ன உங்களுக்குள்ளே புதிதாக்க விரும்புகிறார் என்று கேட்டால் நமக்குள் மூன்று விதமான காரியங்களை புதிதாக்க விரும்புகிறார்.

1. இருதயத்தை புதிதாக்குவார்
2. உன் கிரியைகளை புதிதாக்குவார்
3. உன் மகிமையைப் புதிதாக்குவார்

1. இருதயத்தை புதிதாக்குவார்

முதலில் இருதயத்தை தான் ஆண்டவர் புதிதாக்க விரும்புகிறார். நம் இருதயமானது கேடும் கிருக்கும் நிறைந்துள்ளதாய் இருக்கிறது.

சங்கீதம் 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

இங்கு சொல்லப்பட்டதான காரியம் என்னவென்றால் தாவீது சொல்கிறார். சுத்தமான இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் என்கிறார். நாமும் கர்த்தரிடத்தில் புதிய இருதயத்தை கேட்டு மன்றாட வேண்டும். நிலைவரமான ஆவிதான் மனுஷருக்கு முக்கியம். அவ்வப்பொழுது தற்காலிகமாக இருக்கும் ஆவி வேண்டாம். ஆத்துல ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்று இருக்க கூடாது அது நிலையானதாக இருக்க வேண்டும். நாம் குறுகிய வாழ்க்கை வாழ கூடாது, நம்மை நிமிர்ந்து நடக்கத்தான் ஆண்டவர் நம்மை அழைத்தார். இவ்வாறு நாம் சிறுமைப் படுவதற்கு நம்முடைய இருதயம் தான் காரணம்.

சங்கீதம் 51:11
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

உங்களுடைய சமூகத்தை விட்டு தல்லாமலும், பரிசுத்த ஆவியை எடுத்துக் கொள்ளாமலும் இரும். பாவம் செய்வதால் தான் இவை நடக்கும். நாம் அனைவரும் ஆண்டவருடைய ஆயிரம் வருட அரசாட்சியில் இடம் பெற வேண்டும். உங்கள் செயல்களுக்கு ஆண்டவர் ஒரு கிரீடம் வைத்து இருக்கிறார்.
அதை இழந்து விடாதீர்கள்.  இருதயம் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். பரிசுத்தஆவி இல்லையென்றால் நாம் கிருபை, ஆசிர்வாதம், உயர்வு இவை அனைத்தையும் இழந்து விடுவீர்கள்.  இந்த பரிசுத்த ஆவி இருக்க வேண்டும் என்று சொன்னால் இருதயம் புதுப்பிக்கபட வேண்டும். இந்த இருதயத்தை புதுபிக்கும் படி நாம் ஆண்டவரிடத்தில் ஜெபம் செய்ய வேண்டும் உங்களுடைய ஆத்துமாவை புதுப்பித்தால் தான் பரிசுத்த ஆவியானவர் ஆட்கொண்டு உங்களை அடுத்த நிலையை அடைய கிருபை பாராட்டுவார்.

சங்கீதம் 51:12
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.

பாவம் செய்தால் இரட்சணயமும், சந்தோஷமும் நமக்கு இராது. ஞானஸ்நானம் எடுக்கும் பொழுது இருக்கும் இரட்சிப்பின் சந்தோஷத்தை காலம் செல்ல செல்ல நாம் இழந்து விடுகிறோம். ஏனென்றால் நம் இருதயம்  கேடும், கிருக்கும் நிறைந்துள்ளதாய் இருக்கிறது. இருதயத்தை புதுபிக்கும்படி நாம் வேண்டினால் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்து நாம் இழந்த சந்தோஷத்தை மீட்டுதர கிருபை பாராட்டுவார்.

சங்கீதம் 51:13
அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.


நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன், அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.

சங்கீதம் 57:6
என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள்.

சங்கீதம் 57:7
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்.

சங்கீதம் 57:8
என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

சங்கீதம் 57:9
ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர். நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள். ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள். ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார். அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார். நான் அவரைத் துதித்துப் பாடுவேன். என் ஆத்துமாவே, எழுந்திரு. வீணையே, சுரமண்டலமே இசைக்கத்தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக! என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன். ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.

போதகர்களுக்கே சத்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று சொன்னால் ஒரு புதுப்பிப்பு தேவை. ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும் என்று சொன்னால் ஆலயமாகிய இருதயத்தை புதுப்பித்து கொண்டு இருக்க வேண்டும்.
2. உன் கிரியைகளை புதிதாக்குவார்

கிரியைகள் என்று சொன்னால் செயல்கள், நாம் சில செயல்திட்ட வரைவுகளை நமக்குள்ளே வைத்திருப்போம். இப்படியாய் நமது கிரியைகளை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புதிதாக்க விரும்புகிறார்.

கொலோசெயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

கொலோசெயர் 3:10
தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

கொலோசெயர் 3:11
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

கொலோசெயர் 3:12
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

கொலோசெயர் 3:13
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

கொலோசெயர் 3:14
இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

புரண அறிவுடையவராய் தரித்திருக்கிறீர்களா, இந்த அன்பு எங்கு இருக்கவேண்டுமென்றால் வீட்டிலே, அம்மா, அப்பா, பிள்ளை, மாமியார், மாமனார் ஆகியோரிடத்தில் இருந்தால் தான் நீ கிறிஸ்து உடையவனாய் இருப்பீர்கள்.

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும்விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர்.

தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது.

இந்த கிரியைகள் எல்லாம் இருக்க வேண்டும். அன்பு மட்டும் இருந்தால் உலகத்தில் எல்லாவற்றையும் சாதித்து விடலாம். ஆண்டவருடைய பத்து கட்டளைகளிலேயே பிராதன கட்டளை அன்பு தான். உன்னை நேசிக்கிறது போல பிரறையும் நேசி, இதெல்லாம் செய்ய வேண்டியன, செய்யக்கூடாத கிரியைகள் இருக்கிறது.

கொலோசெயர் 3:4
நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.

கொலோசெயர் 3:5
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

கொலோசெயர் 3:6
இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

கொலோசெயர் 3:7
நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.

கொலோசெயர் 3:8
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.

கொலோசெயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

கொலோசெயர் 3:10
தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

கிறிஸ்துவே உங்கள் வாழ்க்கை. அவர் மீண்டும் வரும்போது அவரது மகிமையில் பங்கு கொள்வீர்கள். தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற உங்கள் பாவங்களை வாழ்விலிருந்து விலக்குங்கள். போலியான கடவுளுக்குச் சேவை செய்வது என்பதே இவ்விருப்பங்களின் உண்மை அர்த்தம். இவை தேவனைக் கோபப்படுத்தும். இவற்றை நீங்களும் உங்கள் கடந்துபோன பாவ வாழ்க்கையில் செய்தீர்கள்.

ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். 

பூரண அன்புடையவர்களாய் இருந்தால், நீங்கள் மகிமையில் வெளிப்படுவீர்கள். இதைதான் ஆண்டவர் விரும்புகிறார். எதை செய்யனும், எதை செய்யக்கூடாது இது மாதிரியான ஆலோசனை தருகின்ற புத்தகம் எங்காகிலும் உண்டா? எல்லோரும் நித்திய ஜீவனை அடைய வேணடும் என்பதே ஆண்டவரின் சித்தமாயிருக்கிறது. கர்த்தர் உங்கள் கிரியைகளை மாற்றப் போகிறார்.
3. உன் மகிமையைப் புதிதாக்குவார்

ஆண்டவர் நம் மகிமையைப் புதுப்பிக்க போகிறார். நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி, நம்மை அடுத்த நிலைக்கு கர்த்தர் கொண்டுப் போக போகிறார். நம் தேவன் ஒருபடி மேலே நம்மை தூக்கப்போகிறார்.

II கொரிந்தியர் 4:15
தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.

II கொரிந்தியர் 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

II கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

II கொரிந்தியர் 4:18
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

இவை எல்லாம் உங்களுக்காகத்தான். ஆகையால் தேவனுடைய கிருபை, மென்மேலும் மிகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது, மேலும் தேவனுடைய மகிமைக்காக அதிக அளவில் நன்றிகளைக் குவிக்கும். அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 

தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.

No comments:

Post a Comment