Wednesday, July 6, 2016

போவாஸ் ரூத்தை நோக்கி, "என் அறுப்பெல்லாம் தீருமட்டும் நீ கூடவே இரு என்றார்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: போவாஸ் ரூத்தை நோக்கி, "என் அறுப்பெல்லாம் தீருமட்டும் நீ கூடவே இரு என்றார்
Date: 03:07:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael
போவாஸ் ரூத்தை நோக்கி, "என் அறுப்பெல்லாம் தீருமட்டும் நீ கூடவே இரு" என்றார்

ரூத் 2:21
பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.

அந்த நிலத்தின் உரிமையாளராகிய போவாஸ் ரூத்திடம்  என்னுடைய அறுப்பெல்லாம் அறுத்து தீருமட்டும் இங்கேயே இரு என்று சொல்கிறார். காலையிலிருந்து மாலை வரைக்கும் சிதறிப் போகிற கோதுமைகளை பொறுக்கும் படியாய், தன்னுடைய மாமியாரான நகோமியை காப்பாற்றுவதற்காக வயலுக்கு சென்று கதிர்களை பொறுக்கும் படி காலையில் தொடங்கி மாலை மட்டும் அங்கு கதிர்களை சேகரித்தாள், ரூத் தன்னுடைய மாமியாரிடத்தில் சொல்லுகிறதான சம்பவம் ரூத் 2:21 ல் நாம் பார்க்கிறோம்.

ரூத்துடைய வாழ்க்கையிலே எவ்வாறு ஆவிக்குறியவராக இருந்தாள் என்று கர்த்தர் காண்பிக்கும் பொழுது, ரூத்தினடத்தில் ஐந்து விதமான குணநலன்கள் இருந்தது என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்கிறது.

1. ரூத் சுறுசுறுப்பு உள்ளவளாக இருந்தாள்
2. ரூத் கருத்துள்ளவளாக இருந்தாள்
3. ரூத் தியாகம் உள்ளவளாய் இருந்தாள்
4. ரூத் தாழ்மை உடையவளாய் இருந்தாள்
5. ரூத் ஆவிக்குறியவளாய் இருந்தாள்

இதற்கு முன்பாக இந்த ருத்தின் வரலாற்றை முதல் அதிகாரத்தில் (ரூத் 1:1-17) இருந்து சற்று திரும்பி பார்த்துவிட்டு நாம் தேவ செய்திக்கு ஊடாய் கடந்து செல்வோம்.

யூதா நாட்டில் உள்ள பெத்லகேம் ஊரைச் சேர்ந்த எலிமெலேக்கு என்பவரும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களோடும் தன் சொந்த ஊரான பெத்லகேமை விட்டு மோவாப் தேசத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.

அங்கு அவர்கள் குறையில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். பிறகு இரண்டு மகன்களுக்கும் மோவாபிலே ஓர்பாள், ரூத் என்னும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்கள். சோதனைப் புயலானது அவர்கள் வாழ்க்கையைத் தாக்கியது. எலிமெலேக்கும், அவருடைய இரண்டு மகன்களும் அடுத்தடுத்து இறந்துப் போனார்கள்.
நகோமி தன்னுடைய மருமகள்களை அழைத்து நீங்கள் உங்கள் பிறந்த வீட்டிற்கு சென்று உங்கள் குலத்தோடு சேர்ந்து கொண்டு, மருமணம் செய்து கொண்டு இளமையை வீணாக்கமல் உங்கள் வாழ்க்கையை புதிதாய் தொடங்குகள் என்றும், எனக்கு வேறுப் பிள்ளைகள் இல்லை அப்படி இருந்திருந்தால் உங்களுக்கு மணமுடித்து வைத்திருப்பேன். இனி என்னாலும் குழந்தைப் பெற்றுக் கொள்ள இயலாது, உங்களுடைய இளமைதான் வீணாகும் போய்வாருங்கள் என்று நகோமி தன்னுடைய மருமகள்களுக்கு கூறினாள்.

ஓர்பாளுக்கு நகோமியின் முடிவில் விருப்பம் இல்லை என்றாலும் உங்கள் சொல்லை கேட்கிறேன் என்று கூறி தன் வீட்டுக்கு செல்கிறாள். ஆனால் ரூத்ப் போகவில்லை நகோமி எவ்வளவோ வற்புறுத்தியும் ரூத்ப் போக மறுத்துவிட்டாள். பின்னர் நகோமி ரூத்தை அழைத்துக் கொண்டு தன் பூர்வீக தேசமான பெத்லகேமுக்கு வந்தார்கள். அப்பொழுது யூத நாட்டில் நிலவியிருந்த பஞ்சம் நீங்கியிருந்தது.

ரூத் தன்னுடைய மாமியாரிடம் உறுதியாய் சொல்லிவிட்டாள். இனிமேல் உங்கள் குடும்பம் தான் என் குடும்பம், உங்கள் இனம் தான் என் இனம், உங்கள் தேவன் தான் என் தேவன். உங்களோடு தான் வாழ்வேன், உங்களோடு தான் மரிப்பேன் என்று கூறினாள்.
1. ரூத் சுறுசுறுப்பு உள்ளவளாக இருந்தாள்

ரூத் 2:2
மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.

ரூத் சிறிதளவும் காத்திருக்காமல், தன்னுடைய அன்பான மாமியாரை காப்பாற்றுவதற்காக யாரிடத்திலாவது தயை கிடைக்குமா என்றுப் பார்த்துவருகிறேன் என்று சொல்லி நகோமியிடம் அனுமதிப் பெற்றாள்.

இன்று நான் வயல்வெளிக்குப் போய் யாரிடத்திலாவது தயை கிடைக்குமா எனப்பார்த்து உதிறும் கோதுமைகளைப் பொறுக்கி வருகிறேன். தன்னை அனுமதிக்கும் படி நகோமியிடம் வேண்டினாள், பிறகு நகோமி அனுமதி அளித்து ரூத்தை அனுப்பி வைத்தாள்.

ரூத்தைப் போல சுறுசுறுப்பாக நாம் இருக்க வேண்டும், களைப்புகள் வரலாம், பலவிதமான எதிரப்புகள் வரலாம், உங்களுடைய ஜெப வாழ்க்கையில் சுறுசுறுப்பு இருக்க வேண்டும். அதில் நீங்கள் குறைப்பட்டிருந்தால் உங்களுக்கு கதிர் கிடைக்காது, தானியம் கிடைக்காது எல்லாமே நின்றுவிடும்.

ஆண்டவராகிய கர்த்தருக்கு ரூத்தைப்போல ரூத் தன் மாமியாருக்காக எப்படி சுறுசுறுப்பாக இருந்தாளோ அதுபோலவே நம் தேவனாகிய கர்த்தர் முன்பாக அவருடைய வேலையில் நாம் சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும். தன் மாமியாருக்கு எப்படியாவது உணவு கொடுக்க விரைந்தோடி சுறுசுறுப்பாக ரூத் கதிர்களை சேகரிக்கிறாள்.

2. ரூத் கருத்துள்ளவளாக இருந்தாள்

ரூத் 2:3
அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.

இந்த இடத்திலே நாம் பார்க்கும் பொழுது ரூத் கருத்துள்ளவளாய் இருந்தாள். எவ்வாறு என்று சொன்னால், யாரிடம் போனால் தனக்கு தயை கிடைக்கும், யாரிடம் போனால் தனக்கு தானியம் கிட்டும் என்று ரூத் கருத்தாய் அறிந்திருந்தாள். அந்த நிலமானது எலிமெலேக்கின் உறவினரான போவாஸ் உடையதாய் இருந்தது, இவ்வாறாக ரூத் கருத்துள்ளவளாய் காணப்பட்டாள்.

இங்கு ஆவிக்குரிய ரீதியிலே, போவாஸ் யாருக்கு அடையாளமாக விளங்குகிறார் என்று சொன்னால் நாம் வணங்குகிற  இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருப்பதை காணலாம்.
நாம் யாரிடத்திலே தயை கேட்க வேண்டும், நாம் யாரிடத்திலே சென்றால் நமக்கு உதவி கிடைக்கும் என்று ரூத்துக்கு தெரிந்திருந்தது. அதுபோல தான் தேவ ஜனமே உங்களுடைய வாழ்க்கையிலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, நம் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை கருத்தாய் அறிந்திருக்க வேண்டும். 

இந்த தேவனை நீங்கள் கருத்தாய் துதிப்பீர்களேயானால், இவரை மட்டுமே ஜெபித்து வந்தீர்கள் என்று சொன்னால்   போவாஸ் அங்கு ரூத்தை ஆசிர்வதித்ததுப் போல, உங்களையும் தேவன் ஆசீர்வதிக்க வல்லவராய் இருக்கிறார்.
3. ரூத் தியாகம் உள்ளவளாய் இருந்தாள்

ரூத் 2:5
பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.

ரூத் 2:6
அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.

ரூத் 2:7
அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக் கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்.

ரூத் 2:8
அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவே இரு.

ரூத் 2:9
அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.

போவாஸ் தன் நிலத்தைப் பார்வையிட வந்த போது ரூத் இருப்பதை கண்டு தன் வேலையாளிடம் அவளைப் பற்றி அறிந்து கொண்டான். அப்பொழுது தான் ரூத் நகோமியின் மருமகள் என்பது தெரிந்தது.

போவாஸ் ரூத்தின் மன உறுதியையும், நல்லென்னத்தையும் கண்டு வியந்து தன் வேலையாளிடம் இவளுக்கு நீங்கள் கதிர் அறுக்கும் போது நிறைய கதிர்களை கொடுங்கள் என்றார். பின்பு ரூத்திடம் போய் உன்னுடைய நல்ல மனதை கண்டு நான் மகிழ்கிறேன், இனி நீ வேறெங்கும் போய் கதிர் பொறுக்க வேண்டாம், என் வயலில் மட்டும் பொறுக்கு என் வேலையாட்கள் உன்னை தொந்தரவு செய்யமாட்டார்கள் என்றார்.

2:7 ஆம் வசனத்திலே ரூத் தியாகம் உள்ளவளாய் இருந்தாள். ஏனென்றால் காலையிலிருந்து இம்மட்டுமாய் இருந்தாளோ என்று கேட்டு இந்த ஸ்திரிக்கு இப்படிப்பட்ட குணாதிசியம் இருப்பதை போவாஸ் பார்க்கிறார். மாமியாருக்கு இப்படியாய் சேவை செய்வதை கண்டு போவாஸ் வியந்தார்.

இக்காலத்தில் நம் குடும்பங்களில் விட்டு கொடுக்கிற மனப்பாண்மை இல்லாமல் போகிறது. ஒரு தியாக மனதோடு நாம் குடும்பத்தை நடத்தினால் அதில் சமாதானம் நிலைத்திருக்கும். ரூத்தைப் போல நாம் தியாக மனப்பண்பு கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும்.

4. ரூத் தாழ்மை உடையவளாய் இருந்தாள்

ரூத் 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.

ரூத் போவாஸின் உடைய காலில் முகம்குப்புற விழுந்து அயல் தேசப் பெண்னான எனக்கும் தயை காட்டினீரே உங்களுக்கு மனமார்ந்த நன்றியை செலுத்துகிறேன் என்று ரூத் போவாஸை பணிந்து கொண்டாள்.

நாமும் தேவனை தாழ்மையோடு முகம்குப்புற விழுந்து தொழுது கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் தாழ்மையுள்ளவராய் இருப்போமானால், தேவனிடம் இருந்து நமக்கு தயை கிடைக்கும். ஏற்றக் காலத்தில் நமக்கு உதவுவார். இப்படியாய் ரூத்திடம் தாழ்மை இருந்ததாலே போவாஸின் தயை கிடைத்தது. நாமும் அவ்வாறே கர்த்தருடைய சமூகத்துக்கு முன்பாக நம்மை தாழ்த்தி வேண்டி கொள்ள வேண்டும். அவர் நமக்கு செய்த இரக்கத்திற்காக நன்றி தெரிவிக்க வேண்டும். தன்னை தாழ்த்துபவர்கள் எவரும் உயர்த்தப்படுவார்கள் என்று கூட நாம் வேதத்தில் பார்க்கிறோம்.

5. ரூத் ஆவிக்குறியவளாய் இருந்தாள்

ரூத் 2:11
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.

ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

போவாஸ் ரூத்திடம் நீ நகோமியிடம் கொண்ட அன்பினால் உன் தகப்பனையும், உன் தாயையும் , உன் சொந்த தேசத்தையும் விட்டுவிட்டு வந்தது எல்லாம் எனக்கு தெரிவிக்கப்பட்டது என்றார். பின்னர் போவாஸ் ரூத்தையே மணந்து கொண்டார்.

ரூத் 4:12
இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.

இந்த வாழ்த்தில் இருந்து அவர்கள் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டார்கள். இந்த சந்ததியில் இருந்து வந்தவர் தான் இயேசு. ரூத் ஆவிக்குரியவளாய் இருந்தாள். இயேசுவுக்கு சீஷராய் இருக்க வேண்டும் என்று சொன்னால், தன் சொந்த் பந்தங்கள் யாவரையும் துறந்து பின்பற்ற வேண்டும். அதுபோல ரூத்தும் தன் மாமியாருக்காக தன் தாய், தந்தை, சொந்த தேசத்தை துறந்து விட்டு,வந்தாள் என்ற ஆவிக்குரிய செயல்பாடு ரூத்திடம் இருந்ததை நாம் பார்க்கிறோம். அதுபோல நாமும் ஆவிக்குரிய ரீதியில் வளர வேண்டும். ஆமென்.

No comments:

Post a Comment