Thursday, June 30, 2016

கர்த்தரை நாம் நேசித்து அன்பிலே பெருக வேண்டும்

கன்மலை கிறிஸ்தவ சபை
Title: கர்த்தரை நாம் நேசித்து அன்பிலே பெருக வேண்டும்
Date: 26:06:2016
Speaker: Evangelist Sebastin

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Eva. Sebastin
" கர்த்தரை நாம் நேசித்து அன்பிலே பெருக வேண்டும் "

ஆண்டவர் போல ஒரு தேவன் இந்த பூமியில் வேறு எங்கும் கிடையாது. அவரே உண்மையான பரிகாரி, நமக்கு செய்ய வேண்டிய எல்லா காரியத்தையும் அவர் கல்வாரி சிலுவையில் செய்து முடித்தார்.

தேவனுடைய சமூகத்திலே ஒரு வைராக்கியம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆண்டவருடைய மகிமையை முழுமையாய் அனுபவிக்க முடியும். அந்த மகிமைக்கு நாம் பாத்திரராய் இருக்க வேண்டும்.

ஏசாயா 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

என் வாழ்க்கை முழுவதும் கர்த்தர் இரட்சிக்க வந்தவர். அதனால் தான் யோபு சொன்னார் என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.

யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

யோபு அவ்வளவு பெரிய செல்வந்தர் என்று ஆண்டவரே சாட்சி சொல்கிறார். யோபு அவ்வளவு பெரியவராய் இருக்க காரணம் என்ன?

யோபு 1:1
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

நாம் ஆண்டவரை நேசிக்க வேண்டும்
நீதிமொழிகள் 8:17
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

ஆண்டவரை நாம் நேசித்தால் தான் அதிகாலையில் அவரை தேட முடியும். கர்த்தரை நேசிக்கிறவர்களிடம் தான் நம்பிக்கை உறுதியாய் இருக்கும்.

உனது உள்ளத்தை துதியினால் நிரப்பும் பொழுது உன்னதத்தில் இருந்து வல்லமை வரும். அது ஆண்டவரை நேசித்தால் தான் வரும். மரியாள் ஆண்டவரை நேசித்து அதிகாலையில் அவரை தேடியதால் தான் கர்த்தர் மரியாளுக்கு வெளிப்பட்டார். அவ்வாறு வெளிப்படும் பொழுது நமக்கு என்னென்ன கிடைக்கும்?

நீதிமொழிகள் 8:18
ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

நீதிமொழிகள் 8:19
பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

நீதிமொழிகள் 8:20
என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,

கர்த்தர் சொல்கிறார் இவைகளை தேடித் தானே ஓடிக் கொண்டிருக்கிறாய் அதை நான் தருகிறேன் என்கிறார்.

உங்கள் களஞ்சியம் நிரம்பும், உங்கள் வீட்டில் ஒரு குறைவும் இருக்காது. இவற்றையெல்லாம் நாம் பெற தகுதியுடையவர்களாய் இருக்க வேண்டும் என்று ஆண்டவர் சொல்கிறார், அது நாம் அவரை நேசிக்க வேண்டும் என்பதே ஆகும். ஆண்டவரை நேசிக்கிறதற்கு அவரைப் பற்றிய அறிவு நமக்கு தேவை.

எரேமியா 23:18
கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?

எரேமியா 23:19
இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும்.

எரேமியா 23:20
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.

கடைசி நாட்களில் இருக்கிற நமக்கு ஆண்டவர் சொல்கிறார். நீங்கள் என்னுடைய கோபத்தை உணருவீர்கள். அவரோட கோபத்தை காணாமல் இருக்க வேண்டும் என்றால், என்னை நேசிக்க வேண்டும் அந்த அன்பை உணர வேண்டும், அவருடைய ஆலோசனையில் கூட நின்று கர்த்தரின் வார்த்தையில் கவனமாய் இருக்க வேண்டும்.

ஏசாயா 9:13
ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

அடிக்கிற ஆண்டவனிடத்தில் திரும்பி அவரை தேடனும். கடைசியாய் நீங்கள் என்னிடத்தில் தான் வர வேண்டும் என்று ஆண்டவர் சொல்கிறார். அவர் தான் உங்களை சமாதானமாக நடத்துகிறவர். வாழ்க்கையில் என்னென்ன அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அவையாவும் தடைபடும். இதற்கு காரணம் ஆண்டவரல்ல நாம் தான்அதனால் தான் ஆண்டவரோட நாம் நெருங்க வேண்டும். நாம் அவரிடம் நெருங்க, நெருங்க உதவிகள் யாவும் நம்மை தேடி வரும். 

யோபு 1:20
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:

யோபு 1:21
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.

யோபு 1:22
இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.

யோபு ஆண்டவர் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்.  என்ன நடந்தாலும் அவர் தான் என் தேவன்  அதனால் தான் சொல்கிறார் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் அவர் என்னை விடுவிப்பார். தேவன் மேலே யோபு கொண்ட அந்த அன்பு தான் அவருடைய விசுவாசத்தை பெருக வைத்தது. தேவன் மீது நமக்கு உள்ள விசுவாசம் பெருக வேண்டும்.

II தெசலோனிக்கேயர் 1:3
சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.

ஆண்டவர் மேல் நாம் வைத்திருக்கிற அன்பு பெருகனும். அப்பொழுதுதான் நம் ஜெப நேரமும், வேத வாசிப்பு நேரமும் பெருகும்.

உபாகமம் 17:20
அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.

அப்போ உங்க ஜெப நேரம் பெருகனும், விசுவாசம் பெருகனும், ஆண்டவர் மேல் வைத்துள்ள அன்பில் பெருகனும் அப்பொழுது ஆண்டவர் சொல்கிறார் உங்க ஆயுளும் பெருகும்.

நீதிமொழிகள்  9:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

நீதிமொழிகள்  9:11
என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

கர்த்தரை அறிகிற அறிவுதான் உண்மையான அறிவு அவராலே நம்முடைய வாழ்நாட்கள் பெருகும்.

சங்கீதம் 139:14
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

ஒரு பொருளை உருவாக்குவோம் என்றால், அதை கொண்டு நாம் என்னென்ன பயன்களை பெற முடியும் என்பதை கருத்தில் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்குவோம். கர்த்தரும் அவ்வாறு தான் நம்மைப் படைத்திருக்கிறார். ஆண்டவர் நம்மை படைத்ததே நம் மூலமாய் ஆச்சிரியமான காரியங்களை பார்க்கத்தான். நடக்கவே முடியாததைப் பற்றி பேசனும், கேட்கிறவர்களுக்கு அது ஏளனமாய் இருக்கலாம் ஆனால் அதை விசுவாசிக்கிற நமக்கோ பெலனாய் இருக்கும். ஏனென்றால் நம்மோடு உள்ள ஆண்டவர், முடியாததையும் முடியும் என்று ஆக்க வல்லவராயிருக்கிறார்.

அவரோடப் பிள்ளைகளாய் நாம் இருக்கிறதாலே, அவரோட இரத்தத்தால் கழுவப்பட்டதாலே, அந்த இரத்தம் நம்மிடம் ஓட வேண்டும். எது முடியாதோ அதைப் பற்றிப் பேசனும், நம்மைப் பரியாசம் பன்னுகிறவரிடத்தில் நாம் சொல்ல வேண்டும் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார். அதனாலே உனக்கு ஏளனமாய் தோன்றும், ஆனால் என் தேவனுக்கு அதுவே மகிமையாய் இருக்கும். என் தேவனை அறிந்திருக்கிறதினாலே அவருடைய சமூகத்தில் நான் அமர்ந்திருப்பேன். அதை காணும் வரைக்கும் நான் காத்திருப்பேன்.
அடுத்ததாக தேவனிடம் அன்பு வைக்கும் பொழுது நமக்கு சமாதானமும், கிருபையும் பெருக வேண்டும்.

II பேதுரு 1:2
தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.

பரிசுத்த ஆவியானவர் தான் கிருபை, அக்கிரம சிந்தை எப்பொழுது சவுலுக்கு வந்ததோ அப்பொழுதே அவரிடம் இருந்து கிருபை விலகியது. நம்மை விட்டு கிருபை விலகுவது எதனால் என்றால் தேவனுக்கு பிடிக்காதவற்றை நாம் செய்வதினாலே ஆகும். உடனே கிருபை விலகிடும் ஏனென்றால் தேவனை குறித்த அறிவு இல்லை. நமக்கு தேவனை அறிகிற அறிவு இருந்தால் சமாதானமும் பெருகும், கிருபையும் பெருகும். ஆண்டவர் மேலே நாம் மிகவும் அன்பாக இருந்தால் அவர் நம்மை பெருகப் பண்ணுவார். ஆண்டவருடைய ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு நாம் தகுதியாய் இருக்க வேண்டும்.

நாம் கர்த்தருக்கு கொடுப்பதிலேப் பெருக வேண்டும். ஆண்டவரை நேசித்தால் தான் இதை நம்மால் செய்ய முடியும்.

I பேதுரு 1:5
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

I பேதுரு 1:6
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

I பேதுரு 1:7
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்

ஆண்டவர் சொல்கிறார் நமக்கு துன்பம் அவசியம் என்கிறார். பொன்னை உருக்குவதுப்போல ஆண்டவர் நம்மை உருக்குவார். பலவிதமான சோதனைகள் வரும் அந்த தருணத்தில் தான் மீண்டு எழுந்திருக்க வேண்டும். ஆண்டவரிடத்தில் கேட்கனும் இப்படியாய் பிசாசு வந்திருக்கிறானே, என்னை புடமிடுகிறீர்களே நான் என்ன தப்பு செய்தேன் என்று தெரியவில்லை ஆண்டவரே அதை எனக்கு உணர்த்துங்கள் என்று நாம் ஆண்டவரிடத்தில் கேட்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் நமக்கு தெளிவாய் விளக்குவார். நீங்கள் மனம் திரும்பி ஒப்பு பொறுத்தனை செய்து விட்டால் மறுபடியும் நம்மை தூக்கிவிடுவார்.

தங்கம் வந்து அழியப் போகப் போகிற ஒன்று நன்றாய் தெரிந்து கொள்ளுங்கள் பரிசுத்த ஆவியானவர் இந்த பூமியிலிருந்து எடுக்கப்படும் பொழுது இந்த தங்கம் எல்லாம் இரும்பாக மாறிடும். வேதம் அப்படித்தான் சொல்கிறது. எப்பொழுது என்றால் தேவனுடைய கிருபை இருக்கும் வரைக்கும் தான். ஆண்டவருடைய வசனத்தை தான் நாம் பொன்னாக கருத வேண்டும்.
நீதிமொழிகள் 5:11
முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

நீதிமொழிகள் 5:12
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

நீதிமொழிகள் 5:13
என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!

நீதிமொழிகள் 5:14
சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.

போதகர் கடிந்து கொண்டதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். கடிந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஆண்டவர் நம்மை உருக்கி விடுவார். கடைசி நாட்களிலே இவையெல்லாம் காண்பாய் என்று ஆண்டவர் சொல்கிறார். ஏனென்றால் ஆண்டவரின் வசனத்துக்கு நாம் செவி சாய்ப்பதில்லை.

நாம் அவரை நேசிப்போம் ஆனால், உங்களை திருப்தி ஆக்குவார், சம்பூர்ணமாய் மாற்றுவார். அவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார், நீங்கள் வீட்டில் ஜெபிக்கும் பொழுது அற்புதங்கள் நடக்கும்.

நம் ஜெபத்திற்கு பதில் வரும, நீடிய ஆயுள், சரீரத்தில் சுகம் இருந்தால் தான் நீடிய ஆயுள் அப்பொழுது நீங்கள் சுகத்துக்கு உறவினர் ஆகி விடுவீர்கள். இவ்வாறாய் நீங்கள் ஒப்பு கொடுக்கும் பொழுது ஆண்டவர் சொல்கிறார் யோபுக்கு கிடைத்தவாறே உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர்ப் பெருகப் பண்ணுவார். யோபுவைப் பெருகப் பண்ணின தேவன் இன்றைக்கும் உயிரோடு உள்ளார். இந்த நம்பிக்கை அசைக்க முடியாத உறுதியாய் எப்பொழுது இருக்கும் என்று சொன்னால் நாம் கர்த்தரை நேசிக்கும் பொழுது தான். ஆண்டவரை நேசிக்க வேண்டும் என்றால், அவரைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும், தினமும் தேட வேண்டும் அவ்வாறு நீங்கள் செய்தீர்களேயானால் அவர் உங்களுக்கு தேவனாய் இருப்பார்.

நாம் பெருகுவது நிச்சயம், நாம் அவர் பிள்ளையையாய் இருப்பது நிச்சயம், நம்மை சாட்சியாய் இருப்பது நிச்சயம், வாக்குதத்தஙகளை சுதந்தரிப்பது நிச்சயம், நம் கண்கள் மகிமையை காண்பது நிச்சயம், இப்படிப்பட்ட அருமையான வாழ்க்கையை நமக்கு தருவதற்கு கர்த்தர் ஆயுத்தமாயிருக்கிறார்.

No comments:

Post a Comment