Friday, July 15, 2016

ஆசா கர்த்தரின் பார்வைக்கு நன்மையும், செம்மையுமானதைச் செய்தார்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: ஆசா கர்த்தரின் பார்வைக்கு நன்மையும், செம்மையுமானதைச் செய்தார்
Date: 10:07:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael
"ஆசா கர்த்தரின் பார்வைக்கு நன்மையும், செம்மையுமானதைச் செய்தார்"

ஆசா ராஜா செய்தது என்ன?

II நாளாகமம் 14:2
ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

ஆசா மன்னர் நியாயப்பிரமாணங்கள் மற்றும் கற்பனைகளை கடைப்பிடித்தார்.

II நாளாகமம் 14:3
அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

II நாளாகமம் 14:4
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,

யூத அரசனான ஆசா

ஆசா தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நல்லனவற்றையும், சரியானவற்றையும் செய்தான். ஆசா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும், மேடைகளையும் அகற்றினான். சிலைகளை உடைத்தான். விக்கிரகத் தோப்புகளை அழித்தான். யூத ஜனங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றும்படி கட்டளையிட்டான். அவரே நம் முற்பிதாக்களால் ஆராதிக்கப்பட்ட தேவன். அவரது கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ள வேண்டும் என்றான்.

யாத்திராகமம் 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

யாத்திராகமம் 20:4
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

தம்முடைய தாசனாகிய மோசே சீனாய் மலையில் இருந்த போது நம் தேவனாகிய கர்த்தர் கொடுத்த நியாயப்பிரமாணத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கற்பனையை செய்ய ஆசா ராஜா மிகவும் பக்தி வைராக்கியத்துடன் இருந்தான். ஆசா மன்னரின் ராஜ்ஜிய பாரத்தின் நாட்களிலே கர்த்தர் இளைப்பாருதலை கட்டளையிட்டார்.
II நாளாகமம் 14:5
யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

ஆசா யூதா நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் அமைக்கப்பட்ட மேடைகளையும், பலிபீடங்களையும் அகற்றினான். எனவே ஆசா அரசனாக இருந்த காலத்தில் அவனது அரசு சமாதானமாக இருந்தது.

II நாளாகமம் 14:6
கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

II நாளாகமம் 14:7
அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
இந்த சமாதானமான காலத்தில் ஆசா யூதா நாட்டில் பலமிக்க நகரங்களை உருவாக்கினான். இக்கால கட்டத்தில் ஆசா எந்தவிதமான போரிலும் ஈடுபடவில்லை. ஏனென்றால் கர்த்தர் அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.

ஆசா யூத ஜனங்களிடம், “இந்த நகரங்களை உருவாக்கி இவற்றைச் சுற்றி சுவர்களை எழுப்புவோம். கோபுரங்களையும், வாசல்களையும், வாசல்களுக்குத் தாழ்ப்பாள்களையும் அமைப்போம். இந்த நாட்டில் நாம் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற காலத்தில் இதைச் செய்வோம். இந்நாடு நமக்குரியது. ஏனென்றால் நாம் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறோம். அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்” என்றான். எனவே அவர்கள் அவ்வாறே கட்டினார்கள். தம் செயல்களில் வெற்றி பெற்றனர்.

அறனானப் பெரிய மதில்களை கட்டினார்கள், வாசல்களை உண்டுப் பன்னுகிறார்கள். அத்தோடு விட்டு விடமால் தாழ்ப்பாளைப் போட்டு பெலப்படுவோமாக என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதில் பெலப்படுவோமாக என்பது எதிர்காலத்தை குறிக்கிறது அப்படியென்றால் இந்த சமாதானத்தை இன்னுமாய் தக்க வைத்து கொள்வது என்பதே ஆகும்.

இங்கே நான்கு விதமான காரியங்களை நாம் காணலாம். 

1. அலங்கங்கள் அமைக்கிறார்கள். அலங்கம் என்று சொல்லும் பொழுது அது பெரிய மதில்களை உள்ளடக்கிய பட்டிணம் ஆகும். 

2. கோபுரங்கள் என்று சொல்லும் பொழுது ஒரு உச்சிதமான உயர்ந்த இடம் கோபுரமானது மேலே செல்ல செல்ல உயர்ந்து கொண்டே போகும் அது போல நம்முடைய வாழ்க்கையிலும் அடுத்தடுத்த உயர்ந்த நிலையை அடைய கர்த்தர் கிருபை செய்வார்.

3. மூன்றாவதாக வாசல்களை உண்டுப் பண்ணுகிறார்கள் வாசல் என்று சொல்லும் பொழுது கர்த்தரே அந்த வாசலாய் இருக்கிறார் ஏனென்றால் வேதத்திலும் கூட நாம் பார்ப்போமானால் நானே வாசலாய் இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்கிறார்.

4. கடைசியாக தாழ்ப்பாளை போட்டு பெலப்படுவோமாக என்று சொல்லும் பொழுது அச்சாரமான ஆவியானவரின் முத்திரையே குறிக்கிறது இவையாவற்றையும் ஆசா செய்ததினால் கர்த்தர் அங்கு இளைப்பாறுதலை கட்டளையிட்டார்.

வௌிப்படும் ஆவிக்குரிய காரியங்கள்

கலாத்தியர் 5:19−21 ல் நம்முடைய வாழ்க்கையில் எவற்றையெல்லாம் அகற்ற வேண்டும் என்று அப்போஸ்தலராகிய பவுல் இவ்வாறாக சொல்கிறார்.

கலாத்தியர் 5:19
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,

கலாத்தியர் 5:20
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,

கலாத்தியர் 5:21
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இதிலிருந்து ஆவிக்குரிய காரியங்களை பார்ப்போமானால் நம்முடைய வாழ்க்கையில் விக்கிரகங்களை மட்டும் அழித்தால் போதாது. சமாதானம் வேண்டும் என்று சொன்னால் துதியானது நம்மிடம் இருக்க வேண்டும் ஏனென்றால் எவ்வளவு தான் விக்கிரகங்களை அகற்றினாலும் அது மீண்டுமாய் நமது அண்டையில் வர வாய்புண்டு.

உதாரணமாக யாக்கோபின் வாழ்க்கையிலே அவர் அறியாத நேரத்தில் அவருக்கே தெரியாமல் அவருடைய மனைவி ராகேல் எல்லாரையும் ஏமாற்றி அந்நிய விக்கிரகங்களை வணங்கும் படி தன் புருஷருக்கே தெரியாமல் இந்த காரியத்தை செய்தாள்.

இதனை ஆதியாகமம் 31 ஆம் அதிகாரம் 29 முதல் 47 வரை உள்ள வசனத்தை வாசிப்பதில் இருந்து  அறியலாம்

யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்லுவேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று நீர் பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான்.

எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை.

ராகேல் அச்சிலைகளை  ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை.

ஆகவே இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவென்றால் நாம் நம்முடைய அந்தரங்க பாவங்களை விட்டுவிட வேண்டும். கர்த்தர் சொல்லுகிறார் ஒருவரின் அந்தரங்க பாவங்களை நான் வெளியரங்கம் ஆக்குவேன் என்கிறார்.

ராகேல் தான் விக்கிரகங்களை வணங்குவதை மறைத்தாள் அதுபோல நாம் நம்முடைய அந்தரங்க பாவங்களை மறைக்காமல் அதை தேவன் முன்பாக அறிக்கையிட்டு அதை விட்டு விட வேண்டும். நாம் யோசித்தால்  நமக்கு அது தெரியாது. ஆனால் நீங்கள் அவருடைய சமூகத்தில் உட்காரும் பொழுது எல்லா காரியத்தையும் அப்பா வெளிப்படுத்துவார்.

எபேசியர் 5:10
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.

எபேசியர் 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள் என்று அப்போஸ்தலராகிய பவுல் சொல்கிறார்.

மேலும் எபேசியர் 6:12 ல் நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல.  அரசர்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம் என்று பவுல் இவ்வாறாக சொல்கிறார்.

எனவே பவுல் கூறிய மாம்சத்தின் கிரியைகளை நம்மிடம் இருந்து அகற்றி ஆவியின் கனியைப் பெற்று கொள்ள வேண்டும். நாம் விட்டொழித்த காரியங்கள் மீண்டும் வராமல் தடுக்க தான் இந்த நான்கு விதமான காரியங்களை நாம் கைகொண்டு ஆவியிலே பெலப்பட வேண்டும், அப்பொழுது நம் தேவனாகிய கர்த்தர் ஆசா ராஜா பட்டிணத்துக்கு இளைப்பாறுதலை கட்டளையிட்டது போல நம்முடைய வாழ்க்கையிலும் சமாதானத்தை கட்டளையிடுவார்.

எனவே ஆசா ராஜா செய்ததுப் போலவே நாமும் கர்த்தருக்கு முன்பாக நன்மையும், செம்மையுமானதைச் செய்தால் நமக்கு இளைப்பாருதல் நிச்சயம், நம் காரியங்கள் யாவும் வாய்க்கும். ஆமென்.

No comments:

Post a Comment