கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: அவர் நல்ல சமாரியன் (இயேசு)
Date: 17:07:2016
Speaker: Brother Micheal
Worship : Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael
" அவர் நல்ல சமாரியன் (இயேசு) "
லூக்கா 10:30
இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில்
கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு
அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
லூக்கா 10:31
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
லூக்கா 10:32
அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
லூக்கா 10:33
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
லூக்கா 10:34
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து,
காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக்
கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
லூக்கா 10:35
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில்
கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச்
செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில் கள்ளர் கையில் அகப்பட்டு உயிருக்காகப் போராடியவரை கண்டு மனதுருகினார். இங்கு சமாரியன் என்பவர் யார் என்று பார்க்கும் பொழுது இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பான மனுஷராய் நம்மால் பார்க்க முடியும்.
அந்த மனிதன் குத்துயிரும், கொலையுயிருமாக இருந்தான். அந்த ஊரை சேர்ந்த நபர்கள் வெறுமென பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால் அந்த வழியில் வந்த சமாரியன் மட்டுமே அவனை கண்டு மனதுருகுகிறார். அப்படியாய் குத்துயிராய் படுத்திருப்பது வேறு யாரும் அல்ல நம்ம தான்.
சற்றே யோசித்துப் பாருங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு இதே நிலையில் தான் நாம் இருந்தோம். நம்மை சார்ந்தவர்கள் இருந்தும் இல்லாமல் போய்விட்டார்கள், ஆனால் இயேசு ஒருவர் மட்டுமே நம்மீது மனது உருகி வருடத்தின் எல்லா நாட்களிலும் நம்மை போஷித்து நல்ல படியாக நம்மை பாராமரித்து வருகிறார்.
சற்றே யோசித்துப் பாருங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு இதே நிலையில் தான் நாம் இருந்தோம். நம்மை சார்ந்தவர்கள் இருந்தும் இல்லாமல் போய்விட்டார்கள், ஆனால் இயேசு ஒருவர் மட்டுமே நம்மீது மனது உருகி வருடத்தின் எல்லா நாட்களிலும் நம்மை போஷித்து நல்ல படியாக நம்மை பாராமரித்து வருகிறார்.
1. நம் மீது மனதுருக்கம் உடையவர்
லூக்கா 10:33
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
அந்த இடத்திலே அதே பக்கமாய் கடந்து சென்ற அந்த நாட்டிலேயே மதிக்க தக்கவனும், மரியாதைக்குரியவனும், அங்கீகரிக்கப் பட்டவனும், கர்த்ரால் அபிஷேகம் பன்னப்பட்டவனும் அந்த மனிதரை காப்பாற்றாத படிக்கு ஒரு பக்கமாய் விலகிப் போனார்கள். அந்த மனிதரை பார்த்து அவனுடைய காயங்களை கட்ட வேண்டிய லேவியனே உயிருக்குப் போராடும் அந்த நபரைப் பார்த்து விட்டு வேறொரு பக்கமாய் விலகிப்போனார்கள். ஆனால் இந்த சமாரியன் அவனுக்கு உதவினார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிதான். தாயின் கருவில் உருவாகும் முன்னரே நம்மை தெரிந்து கொண்டவர் தேவன் நீங்கள் எப்படி இருப்பீர்கள், எப்படி வளருவீர்கள், எந்த நிலையில் இருப்பீர்கள் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். மனதுருகுகிற தேவன் கரத்தராகிய இயேசு கிறிஸ்து அவர் தம்மை தாமே தாழ்த்தி மனிதராய் இந்த பூமிக்கு வந்து நம் மேல் வைத்த அன்பின் நிமித்தமாய் கல்வாரி சிலுவையிலே தன்னை ஒப்புக் கொடுத்தார், அந்த மனதுருக்கம் நம்முடைய இயேசு கிறிஸ்து ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் அவ்வளவு மிகுதியாய் நம் மீது அன்பு வைத்திருக்கிறார். அவருடைய சிநேகம் மாறாத சிநேகம்.
சங்கீதம் 112:4
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
கர்த்தர் உங்கள் மேல் வெளிச்சத்தை உதிக்க பண்ணுவார். பிசாசு எந்த வழியிலே நம்மை கூட்டி கொண்டு போனாலும் சரி நீங்கள் முழு இருதயத்தோடு அவரை அழைத்தால் மட்டுமே போதும் எந்த இருளில் நீங்கள் இருந்தாலும் உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். ஆண்டவர் செம்மையாய் நடக்கிறவர்களுக்கு எப்பொழுதும் மனதுருக்கம் உடையவராய் இருக்கிறார். நம்மை அவர் பிரகாசிக்க செய்வார்.
2. நமது காயங்களை கட்டுகிறவர்
லூக்கா 10:34
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி,
இங்கு காணப்படுகிறதான மூன்று விதமான காரியங்கள் எண்ணெய், திராட்சை ரசம், கட்டு இந்த காரியங்களை அந்த சாமாரியன் யாரென்றே அரியாத அந்த நபரின் மேல் மனதுருக்கம் வைத்து எண்ணெய் ஊற்றி, திராட்சை ரசத்தை கொடுத்து அவனுடைய காயங்களை கட்டுகிறார். இவற்றையெல்லாம் முதலில் பார்த்து விலகிப் போனவர்கள் செய்ய வேண்டியவை ஆனால் இந்த சமாரியன் செய்கிறார்.
ஏனென்றால் இங்கு அவர் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பானவராக கருதப் படுகிறார். உங்களை போதகர் மறக்கலாம், இந்த உலகத்தில் யாரை அதிகமாக நாம் நேசித்தோமோ அவர்களே நம்மை மறக்க நேரிடலாம். ஆனால் நம்மை என்றுமே மறவாத இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவர்தான் நமக்கு எல்லாம்.
கர்த்தர் மூன்று விதமான காரியங்களை அவருக்கு செய்தது போல் நமக்கு செய்கிறார். என்றைக்கோ அழிந்திருக்க வேண்டிய நமக்கு சுவிஷேஷத்தை அழகாய் ஊட்டி விட்டு தேவனாகிய கர்த்தர் யார் என்பதை புரிய வைத்து அபிஷேகம் என்னும் எண்ணெய்யை நாம் பெற்றுக் கொள்ளும்படி அவருடைய ரத்தத்தையும், சரீரத்தையும் பானம் பன்னும்படி உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அசுத்தமான காயங்களை சுத்தப்படுத்தி எல்லாப் பாவங்களையும் எடுத்து அழகாய் காயம் கட்டி நம்மை வைத்திருக்கிறார்.
எரேமியா 30:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.
எரேமியா 30:13
உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களும் இல்லை.
எரேமியா 30:14
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான
உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும்,
சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான்
உன்னைத் தண்டித்தேன்.
எரேமியா 30:15
உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்?
திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும்
இப்படி உனக்குச் செய்தேன்.
எரேமியா 30:16
ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன்
சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள்
சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு
ஒப்புக்கொடுப்பேன்.
எரேமியா 30:17
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள்
என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை
ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் கூறுகிறார்: ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை. எனவே நீங்கள் குணம் பெறமாட்டீர்கள். உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன்.
இந்த காயமெல்லாம் இரட்சிக்கப் படுவதற்கு முன்பாக யாரும் உங்களுடைய காயத்தை கட்ட முடியாது ஆண்டவர் தான் அதை கட்ட முடியும். நம்முடைய தேவைகள் இன்னதென்று நாம் கேட்பதற்கு முன்னமே கர்த்தர் அதை அறிந்திருக்கிறார். நீ நினையாத வேளையிலும் உங்களுக்கு உதவி செய்பவர்தான் நம் ஆண்டவராகிய இயேசு. நீங்கள் நினைப்பதற்கும், வேண்டுவதற்கும் அதிகமாக செய்வது தான் அவரின் மகிமை.
இங்கு நான்கு விதமான காரியங்கள் சொல்லப் படுகிறது. என்னவென்றால் நம்மை பட்சிகிறவர்களை கர்த்தர் பட்சிகிறார். நம்முடைய சத்துருக்களை எல்லாம் ஆண்டவர் தம்முடைய தூதர்களை வைத்து சிறையிலிட்டு அடைப்பார். நம்மை நரகத்தின் பாதைக்கு கொண்டுப் போக வகை தேடிய சாத்தானை ஆண்டவர் பாதாளத்துக்கு அனுப்புகிறார். நம்மை கொள்ளையிடுபவர்களை கர்த்தர் கொள்ளைக்கு ஒப்புக் கொடுப்பார்.
நம் செய்கை, பாவம், கசப்பு, வெறுப்பு, விரோதங்கள், கொலைவெறிகள் இவையாவும் உங்களிடம் காணப்பட்டால் கர்த்தரிடத்தில் சொல்லி ஒப்பரவு ஆக வேண்டும் அப்பொழுது இந்த நான்கு ஆசிர்வாதங்கள் வாழ்க்கையில் நடக்கும்
3. நம்மை சுமக்கின்ற தகப்பன்
லூக்கா 10:34
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி,
இங்கே சுய வாகனத்தின் மேலே ஏற்றி என்று பார்க்கிறோம் இந்த காலத்தில் விபத்துக்குள்ளானவர்களை தங்கள் வண்டியில் ஏற்றி செல்லவே மக்கள் யோசிக்கிறார்கள். ஆனால் அந்த சமாரியன் அப்படி அல்ல, அவருடைய கழுதையிலேயே அந்த மனிதரை கொண்டுப் போகிறார். நம் வாழ்க்கையிலே கூட இப்படி ஆபத்தான நிலையிலே இருந்த போது, தன்னுடைய வாகனத்தில் ஏற்றிச் சென்று காப்பாற்றும்படியாய் இருக்கிறார் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. உங்களுக்கு எதுவும் நேரிடாது ஏனென்றால் நம் கூடவே இருக்கிறவர் தேவனாகிய கர்த்தர்.
எண்ணாகமம் 11:12
இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை
முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே
அணைத்துக்கொண்டுபோ
இஸ்ரவேல் மக்கள் எகிப்தியர்களால் அடிமைப்பட்டு கடுமையாக உழைத்தே தண்டிக்கப்பட்டவர்கள். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் கூக்குரலிட்டு விண்ணப்பம் பண்ணி கர்த்தரை கூப்பிடும் பொழுது தான் கர்த்தர் இஸ்ரவேலை நினைவு கூர்ந்தார். ஆனால் உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரை தகப்பன் சுமப்பது போல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்நாள் வரையிலும் சுமந்து கொண்டு வருகிறார்.
4. நம்மை பாராமரிக்கிறவர்
லூக்கா 10:34
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
ஒரு குழந்தையை எந்தெந்த விதத்தில் பாராமரிக்க வேண்டும் என்பது ஒரு தாய்க்கு தான் தெரியும். நம் ஆண்டவர் தாயைப் போல நம்மை பராமரிக்கிறார்.
நம் ஆண்டவர் நம்முடைய காயங்களையெல்லாம் கட்டி, நம்மை சுமந்து சபையில் வாரம்தோறும் அவருடைய வார்த்தைகளை கொடுத்து, உங்கள் இருதயம் நொறுங்குண்ட சமயத்திலே நமக்கு ஆறுதலான வார்த்தைகளை தந்து தேற்றுகிறார். அப்படிப்பட்ட இந்த சபைதான் அருமையான சத்திரம்.
நம் தேவன் உங்களை எப்படியெல்லாம் பராமரிக்கிறார் என்றால் நமக்கு என்னென்ன எப்பொழுது தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். பராமரிப்பதிலே நம் தேவனைப் போல யாரும் இல்லை.
ஆதியாகமம் 50:21
ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும்
பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப்
பேசினான்.
அதற்கு தான் சபைக்கு வருகிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையிலே நாம் குடும்பமாய் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு இரகசிய வருகை ஒன்று இருக்கிறது என்ற நினைப்பு எப்போதுமே இருக்க வேண்டும். பாராமரிக்கிறதிலே இதுவும் ஒரு காரியம். கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பராமரிப்பார்.
5. நம்மை விசாரிக்கிறவர்
லூக்கா 10:35
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படியாய் அந்த நபரை சத்திரத்திலே கிடத்தி, சத்திரக்காரனிடத்திலே அவனை ஒப்புவித்து அதுமட்டுமல்லாமல் இரண்டு காசுகளை தந்து இதில் இன்னும் அதிகமாய் தேவைப்பட்டாலும் அவருக்கு கொடுங்கள் நான் திரும்ப வருவேன் என்று சொல்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக 2000 வருடங்களுக்கு முன்பு தன் ஜீவனை தந்ததுக்கு அடையாளமாக இருக்கிறது. நான் மீண்டும் வருவேன் என்று சொன்னது யோவான் சுவிஷேஷ புஸ்தகத்தில் சொன்னது போல கலங்காதிருங்கள் நான் போய்விட்டு உங்களுக்காக இடத்தை ஆயுத்தம் பன்னி திரும்வ வருவேன் என்று அருடைய வருகையை குறிக்கிறது. சத்திரம் என்று சொன்னால் சபை யாரிடம் ஒப்படைக்கிறார் என்றால் மேய்ப்பனிடத்தில் அதனால் நீங்கள் ஆவிக்குரிய ரீதியிலே என்ன கேட்டாலும் மேய்ப்பன் கொடுத்து தான் ஆக வேண்டும். அதற்கேற்ற கிருபையை கர்த்தர் தருவார்
.நம் ஆண்டவர் காண்கிற தேவனாய் இருக்கிற படியினாலே அவருக்கு தெரியும், உங்களுக்கு எங்க விசாரித்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லி எல்லாவற்றையும் இலகுவாய் விசாரித்து நமக்கு என்ன வேண்டுமோ அவரிடம் கேட்கும் பொழுது அவர் தருகிறார்.
யோபு 36:6
அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
நம்மெல்லாம் வெளியே செல்வந்தர்களாய் இல்லாவிட்டாலும் கிறிஸ்துவுக்குள் பணக்காரராய் இருக்கிறோம் எதிலே என்றால் அன்பிலே, நற்குணத்திலே, விசுவாசத்திலே, நம் தேவன் சிறுமைப்பட்டவர்களை விசாரிப்பதிலே வல்லவராயிருக்கிறார். தேவன் ஏழைகளை எப்போதும் நியாயமாக நடத்துகிறார்.
No comments:
Post a Comment