Thursday, August 4, 2016

ஒருமனப்பட்டால் கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும், ஜீவனையும் கட்டளையிடுகிறார்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: ஒருமனப்பட்டால் கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும், ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
Date: 31:07:2016
Speaker: Pastor Micheal

Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Pastor Michael
" ஒருமனப்பட்டால் கர்த்தர் என்றென்றைக்கும் ஆசிர்வாதத்தையும், ஜீவனையும் கட்டளையிடுகிறார் "

சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

சங்கீதம் 133:2
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,

சங்கீதம் 133:3
எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.

நாம் ஐக்கியமாக இருக்கும் பொழுது கர்த்தர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் ஆனால் அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆயுள் முழுவதும் ஆசிர்வாதத்தையும், ஜீவனையும் தருகிறார்.

இங்கு சொல்லப்பட்டுள்ள பிரகாரமாக இந்த உலகத்தில் நமக்கு தேவையான ஆசிர்வாதங்களை ஒருமனப்படும் பொழுது கர்த்தர் தருகிறார்.

அப்போ இந்த சாத்தானுக்கு என்ன வேலை என்று கேட்டீர்களானால் நமக்குள் ஐக்கியத்தை குலைப்பதே ஆகும். தேவனிடத்தில் நமக்கு உள்ள ஐக்கியத்தை குலைக்கவே அவன் சுற்றி திரிகிறான்.

நாம் ஒரு சபையாய் சேர்ந்து கர்த்தரை துதிக்கும் பொழுது கர்த்தர் ஆசிர்வாதத்தையும், ஜுவனையும் என்றும் கட்டளையிடுகிறார்.
ஒருமனப்பட்டால் அபிஷேகத்தைப் பெறலாம்

அப்போஸ்தலர் 2:1
 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:2
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

ஒருமனப்பட்டு நீங்கள் குடும்ப ஜெபம் செய்தாலும் சரி, ஒருமனப்பட்டு சபைக்கு வந்தாலும் சரி கர்த்தர் உங்களை அபிஷேகித்து ஆசிர்வதிக்க வல்லவராயிருக்கிறார்.

இங்கே பலத்த காற்று அந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று என்று இருக்கிறது. அக்காற்று எதற்கு ஒப்பாயிருக்கிறது என்றால் அபிஷேகத்திற்கு ஒப்பாயிருக்கிறது. ஒருமனப்பட்டு நாம் வருவோம் என்று சொன்னால் கர்த்தர் நமக்கு அபிஷேகத்தை தருகிறார்.

ஒருமனப்பட்டால் பரிசுத்த ஆவியானவர் நம்மேல் அமருவார்

அப்போஸ்தலர் 2:3
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

நாம் ஒருமனமாய் சபைக்கு வரும்பொழுது பரிசுத்த ஆவியானவர் நம் மேல் வந்து அமருவார். என்னென்ன தடைகள், போராட்டங்ஙள், மனக்லேசங்கள், பாரங்கள், ஆவியானவர் அசைவாடி இவை எல்லாவற்றையும் நீக்கிப் போடுவார்.

ஒருமனப்பட்டால் வரங்களைப் பெறலாம்

அப்போஸ்தலர் 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

மூன்றாவதாக வரங்களை தருகிறார். அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.


ஒருமனப்பட்டால் மகத்துவங்களைப் பெறலாம்

அப்போஸ்தலர் 2:5
வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் 2:6
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:7
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

அப்போஸ்தலர் 2:8
அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
அப்போஸ்தலர் 2:9
பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

அப்போஸ்தலர் 2:10
பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

அப்போஸ்தலர் 2:11
கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

உங்களை வைத்து கர்த்தர் மகத்துவமாய் இந்த உலகிற்கு காட்டுவார். நாம் அர்ப்பமாய் இப்பொழுது காணப்பட்டாலும் நீங்கள் ஒருமனமாய் கூடி ஜெபிக்கும் பொழுது பற்பல பாஷைகளில் அக்கினி மயமான நாவுகளால் நீங்கள் பேசும் பொழுது ஒரு மகத்துவத்தை உங்களிடையே கர்த்தர் காண்பிப்பார். அப்படியாய் ஒரு மனப்படும் பொழுது இப்படிப்பட்ட காரியங்களை அப்போஸ்தலர் காலத்தில் காண முடிந்தது.

விசுவாசிகளின் ஒருமனம்


அப்போஸ்தலர் 2:42
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள்.

உறுதியாய் இருக்க வேண்டும், எது தேவனுடைய சத்தம், எது பிசாசின் சத்தம் என்பதை அறியும் அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும். சாத்தான்களுக்கும் வேத வசனங்கள் தெரியும்.


அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

இயேசுவிடம் பிசாசு எப்படி பேசியிருப்பான்? அந்த கால சூழ்நிலையில், அந்த சோதனை காலத்தில், பாடுகளின் மத்தியில், வசனத்தை வைத்து தான் சாத்தான் இயேசுவை சோதிக்கிறான். நசுரேனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார். இப்படிப்பட்ட அபிஷேகம் உடையவர்களாய் நாம் இருக்க வேண்டும். இத்தகைய அபிஷேகம் உள்ளவர்கள் ஒருவன் இன்னாரென்று அறிவார்கள். ஆவிகளை பகுத்தறியும் திறனை நாம் வைத்திருப்பது அவசியம்.


அப்போஸ்தலர் 2:43
எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.

அப்போஸ்தலர் 2:44
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.


அப்போஸ்தலர் 2:45
காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.

அப்போஸ்தலர் 2:46
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

அப்போஸ்தலர் 2:47
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

இப்படிப்பட்ட வல்லமைகள் உங்களிடையே காணப்படும் பொழுது எல்லோரும் அஞ்சுவார்கள். விசுவாசிகள் ஒருமித்து இருக்கும் பொழுது அபிஷேகத்தை அனுபவிக்கலாம், பரிசுத்த ஆவியானவரிடம்  கூட இருக்கிற ஐக்கியத்தை அனுபவிக்கலாம், 

நாம் ஒருமித்து ஒருமனப்பட்டு வாழும் பொழுது தயவைப் பெற்றுக் கொள்வீர்கள். எல்லாவிதத்திலும் தேவனிடத்தில் இருந்து நமக்கு தயவு உண்டாகும், அதிகாரிகளின் கண்களில் நமக்கு தயவு உண்டாகும், நன்பர்களின் மத்தியில் தயவு உண்டாகும், இவையாவற்றையும் அறிந்து தான் இந்த தயவுகளை தடுக்க பிசாசு வகைதேடி நம் ஒருமனதை கலைக்கிறான். ஆனாலும் தேவன் விடமாட்டார். எங்கே ஒருவர் அல்லது இரண்டு பேர் கூடி ஜெபிக்கும் பொழுது அவர்கள் மத்தியில் வாசம் பண்ணுவேன் என்று தேவன் சொல்கிறார். அப்போ கர்த்தர் யாவரையும் கைவிடமாட்டார். ஒருமனப்பட்டால் தான் நம்மால் துதிக்க முடியும். இப்பொழுது அர்ப்பமாய் காணப்பட்டாலும் பின்னர் சம்பூர்ணமாய் இருக்க கர்த்தர் கிருபை செய்வார்.

விசுவாசிகளின் ஒருமித்த ஜெபம்

அப்போஸ்தலர் 4:22
அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.

அப்போஸ்தலர் 4:23
அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.

அப்போஸ்தலர் 4:24
அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.

அப்போஸ்தலர் 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

அப்போஸ்தலர் 4:26
கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.

அப்போஸ்தலர் 4:27
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

அப்போஸ்தலர் 4:28
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.

அப்போஸ்தலர் 4:29
இப்பொழுதும், கர்த்தாவே அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,

அப்போஸ்தலர் 4:30
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.

அப்போஸ்தலர் 4:31
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.

நாம் கூடி ஒருமனப்பட்டு ஜெபிக்கும் பொழுது பரிசுத்த ஆவியானவர் இறங்குவார் அப்பொழுது ஒரு அசைவு உண்டாகும். இப்படிப்பட்ட காரியங்கள் பிசாசுக்கு தெரியும். நாம் ஒருமனப்பட்டால் ஏற்படும் விளைவுகளை பிசாசு அறிந்திருக்கிறான். 

பரிசுத்த ஆவியானவர் இறங்கினால் தான் நம்மால் சத்தியத்தை போதிக்க முடியும். சத்திய ஆவியானவர் உங்களிடத்தில் வரும் பொழுது நீங்கள் பெலன் அடைவீர்கள். தைரியத்தின் ஆவியை அவர் தான் தருகிறார். இந்த காலகட்டத்தில் சுவிசேஷம் உரைப்பது என்பது ஒரு கடினமான காரியமாக இருந்து வருகிறது. ஆனாலும் இனி வருகிற காலங்களில் அவ்வாறு இராதபடிக்கு கர்த்தர் அதை மாற்றி நமக்கு தைரியத்தை அளிப்பார். நாம் ஆத்துமாக்களை தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேரக்க கர்த்தர் கிருபையை தருவார். விசுவாசிகள் ஒருமித்து வந்தால் தான் எல்லாவற்றின் பலன்களையும் நம்மால் அனுபவிக்க முடியும்.

விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு

அப்போஸ்தலர் 4:32
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.

விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர்.

ஒரே இருதயமுள்ள மனம் இருக்க வேண்டும். சபையிலே அப்படிப்பட்ட ஐக்கியம் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment