Saturday, July 30, 2016

24.7.2016 அன்று Eva. Sebastin அவர்கள் அளித்த தேவச்செய்தி

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Date: 24:07:2016
Speaker: Eva. Sebastin

Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி:  Eva. Sebastin

ஆண்டவரின் சமூகத்திலே சந்தோஷமாக நாம் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் இருப்போமானால் கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். நீங்கள் என்னவெல்லாம் கேட்கிறீர்களோ அதனை தர அவர் வல்லவராயிருக்கிறார்.

சங்கீதம் 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

நீங்கள் எவற்றை கேட்டாலும் ஆண்டவர் தருவார். சுகம் கேட்கிறீர்களா? பணம் கேட்கிறீர்களா? அவை அனைத்தையும் உங்களுக்கு தருவார். எனவே தான் ஆண்டவர் சொல்கிறார் என்னுடைய சமூகத்தில் மனமகிழ்ச்சியாய் இரு. அந்த மகிழ்ச்சியானது எப்போது வரும் என்று சொன்னால் தேவனைப் பற்றிய அறிவு நமக்கு இருத்தல் வேண்டும்..

எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தருடைய சமூகத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். இவ்வளவுப் பிரச்சினைகள் இருக்கும் போது எப்படி மனமகிழ்ச்சி என்பது சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம் ஆனால் உங்களுடைய நம்பிக்கையை கர்த்தர் பக்கம் திருப்பினால் இது சாத்தியப்படும். முழு நம்பிக்கையை கர்த்தர் மீது வைத்தால் நமது பாரங்களை அவர் சுமப்பார்.

நீதிமொழிகள் 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.

முதிர்ந்த ஆவியென்றால்  broken spirit  என்பதாகும். ஆனால் மகிழ்ச்சியின் ஆவியானாது எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும். கர்தருடையப் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகள், கஷ்டங்கள் வந்தாலும் அதை ஒரு மூளையில் வைத்து விட வேண்டும். ஆண்டவரிடம் அந்த சூழ்நிலையிருந்து விடுதலைப் பெறும் கிருபையை ஆண்டவரிடத்தில் இருந்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த கிருபை தான் பரிசுத்த ஆவி அந்த பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைவீர்கள்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பதே தேவபெலன் அத்தகையப் பெலனை பரிசுத்த ஆவியானவர் தருவார்.

ஏசாயா 11:2
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

ஏசாயா 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

கர்த்தருக்கு பயப்படுகிற அறிவே ஞானத்தை தரும், அந்த ஞானம் இருந்தால் குடும்பத்திலே சமாதானம் தங்கும். பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வந்தாலே ஒரு தெய்வீக சுகம் நிலைக்கும். அது சமாதானமான சுகம்.

கர்த்தருக்கு நாம் கீழ்படிந்து இருக்க வேண்டும். நம்முடைய வாய் நல்லா இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாய் நன்றாக இல்லையென்றால வாழ்க்கை சீரழியும். நம்முடைய வாயை தேவனுடைய வசனத்தின் மூலம் காத்துக் கொள்ள வேண்டும். கர்த்தரோடு பேசுவதற்கு நாம் நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெகேமியா 9:1
அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.

நெகேமியா 9:2
இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லொம் விட்டுப்பிரிந்து வந்து நின்று தங்கள் பாவங்களையும் தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.

நெகேமியா 9:3
அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

அவர்கள் கூடிவந்து தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டார்கள். ஒரு தீர்மானம் எடுத்தார்கள் இனிமேல் நாம் கர்த்தருக்கு கீழ்படிய வேண்டும் என்பதேயாகும். ஆண்டவருக்காக வாழ வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார்கள். அந்த முடிவை எடுத்தப் பிறகு என்ன ஆயிற்று என்றால்,

நெகேமியா 9:25
அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.

நெகேமியா 9:26
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.

அவர்கள் அரணானப் பட்டிணங்களை அமைத்தார்கள். நாமும் கரத்தருக்கு கீழ்படிவோமானால் யாராலும் தரமுடியாத பாதுகாப்பை கர்த்தர் உங்களுக்கு தருவார். அதுமட்டும் அல்லாமல் சகலவித செல்வங்கள் நிரம்பின வீட்டையும் தருவார். நீங்கள் உங்கள் வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்பு கொடுத்தால் உங்களுக்கு தேவையான அனைத்தையும் கர்த்தர் தர வல்லவராயிருக்கிறார்.

நெகேமியா 9:35
அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.

நெகேமியா 9:36
இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம், இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.

எங்கள் முற்பிதாக்கள் உமக்குப் பணி செய்யவில்லை. அவர்கள் தம் சொந்த இராஜ்யத்தில் இருந்தும் செய்யவில்லை. அவர்கள் தீமை செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் நீர் செய்த அனைத்து அற்புதங்களையும் அனுபவித்தனர். அவர்கள் வளமான நிலங்களை அனுபவித்தனர். அவர்கள் ஏராளமான இடத்தைப் பெற்றனர். ஆனால் அவர்கள் தம் தீச்செயல்களை நிறுத்தவில்லை.

இப்பொழுது நாங்கள் அடிமைகள். நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக இருக்கின்றோம். இது நீர் எமது முற்பிதாக்களுக்கு கொடுத்த நாடு. எனவே அவர்கள் இதன் பலனையும் நன்மையையும் அனுபவிக்க முடிந்தது.


நீதிமொழிகள் 8:17
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்

நீதிமொழிகள் 8:18
ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

ஆண்டவர் சொல்லுகிறார் நீங்கள் என்னை சிநேகித்தால் நானும் உங்களை சிநேகிப்பேன் என்கிறார். ஆண்டவரை சிநேகிக்கிறவர்களுக்கு தான் அதிகாலையில் கர்த்தரை தேட வேண்டும் என்ற உணர்வு வரும். அவரை நேசிப்பவர்கள் தான் அதிகாலையில் எழுந்து ஆண்டவரைத் தேடுவார்கள். சிநேகிக்காதவர்களோ அந்த நேரத்தில் தூங்கி கொண்டு இருப்பார்கள்.

ஆண்டவர் சொல்கிறார் என்னை நேசித்தீர்களேயானால் ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன. நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன்.

ஆண்டவர் நமக்கு கொடுக்க கொடுக்க அவர் மீது உள்ள பயம் அதிகமாகும்.

எரேமியா 33:9
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.

சங்கீதம் 66:19
மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

ஆண்டவர் சொல்கிறார் நீங்கள் அக்கிரம சிந்தை உள்ளவர்களாக இருப்பீர்களேயானால் உங்களின் ஜெபத்துக்கு ஆண்டவர் செவிக் கொடுக்க மாட்டார். நீங்கள் கர்த்தருக்கு உண்மையாக இருந்தால் ஆண்டவர் உங்கள் ஜெபத்துக்கு பதில் தருவார்.

நீங்கள் ஆண்டவரை விசுவாசிக்கிறவர்களாய் இருந்தால் நீங்ஙள் தேவனுடைய சீஷர்களாக இருப்பீர்கள். 

அப்போஸ்தலர் 11:26
அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

சீஷர்கள் என்ன செய்வார்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்.

எரேமியா 6:8
எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.

புத்தியைக் கேட்க வேண்டும் அந்த புத்திதான் ஆவியானவர்

கிறிஸ்தவர்கள் அனைவரும் ஊழியம் செய்ய வேண்டும்.

பிலிப்பியர் 4:1
ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.

பிலிப்பியர் 4:2
கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.

பிலிப்பியர் 4:3
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.

ஜீவபுஸ்தகத்தில் பெயர் இருந்தால் தான் நாம் பரலோகத்தில் நாம் பிரவேசிக்க முடியும். எனவே நாம் ஊழியத்தை உண்மையாக செய்ய வேண்டும். ஜெப ஊழியம் செய்யலாம் அழிந்துப் போகிறப் பட்டிணங்கள் ஆத்துமாக்களுக்காக பரிந்துப் பேசி கண்ணீர் விட்டு ஜெபிக்க வேண்டும். மிகவும் பாரத்தோடு உருக்கமாக மனதுருகி திறப்பின் வாசலிலே நின்று நம் தேசத்திற்காகவும், பட்டிணத்திற்காகவும், சபைக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது கர்த்தர் உங்கள் மேல் பிரியமாய் இருப்பார்.

ரோமர் 14:18
இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.

ரோமர் 14:19
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.

கர்த்தர் சொல்கிறார் ஊழியம் செய்பவர்கள் மேல் அவர் பிரியமாய் இருப்பார். அதுமட்டும் அல்லாமல் ஊழியம் செய்பவர்களோடு ஐக்கியமாக  இருக்க வேண்டும். ஊழியம் செய்பவர்களுக்காக முழங்கால் படியிட்டு அவர்களின் குடும்பத்துக்காக ஜெபிக்க வேண்டும்.

சங்கீதம் 35:27
என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.

ஊழியக்காரர்களுடைய சுகத்தை கர்த்தர் விரும்புகிறார், ஆகையால் ஊழியம் செய்தால் உங்களுக்கு சுபம் நிச்சயம்.

கர்த்தருக்கு தான் நமது ஊழியம் இருக்க வேண்டும். கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொழுது ஊழியக்காரர்களும் பயனடைவார்கள்.

யாத்திராகமம் 18:19
இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;

யாத்திராகமம் 18:20
கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.

யாத்திராகமம் 18:21
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.

ஊழியத்துக்கு வருகிறவர்கள் தேவனுக்கு பயபக்தியோடு இருக்க வேண்டும், உண்மையோடு இருக்க வேண்டும். பணத்திற்காக ஊழியம் செய்யக் கூடாது, கடைசியாக தான் திறமை இருக்க வேண்டும்.

ஆனால் இன்றோ திறமை மட்டுமே ஊழியத்திற்கு முன்னிருத்தப்படுகிறது இதனால் தேவ பயம் இல்லாமல் போய்விடுகிறது. மோசேவும் அவ்வாறே தான் செய்தார் திறமையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தார்.

யோசுவா 24:14
ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.

யோசுவா கர்த்தருக்கு பயந்தவர்களை தான் தேர்ந்தெடுத்தான். ஆதலால் தான் யோசுவாவுக்கு எல்லா காரியத்திலும் ஆண்டவர் அவனுக்கு வெற்றியை அளித்தார்.

ஆண்டவரிடம் நாம் அன்பு கலந்த பயத்தோடு இருக்க வேண்டும்.

சங்கீதம் 81:8
என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.

சங்கீதம் 81:13
ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!

“எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன். இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!

என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால், என் விருப்பப்படியே வாழ்ந்தால் நலமாயிருக்கும்.

ஆண்டவர் ஊழியக்காரர்களுக்கு இரகசியத்தை வெளிப்படுத்துவார்.

ஆமோஸ் 3:7
 கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.

கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார்.

தீமோத்தேயு பற்றி பவுல்

பிலிப்பியர் 2:19
அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.

பிலிப்பியர் 2:20
அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறோருவனும் என்னிடத்திலில்லை.

பிலிப்பியர் 2:21
மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்

பிலிப்பியர் 2:22
தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.

பிலிப்பியர் 2:23
ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.

தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்புகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். தீமோத்தேயுவைப் போன்று வேறு ஒருவரும் என்னிடம் இல்லை. உண்மையிலேயே அவன் உங்கள் மேல் அதிகக் கரிசனையுள்ளவன். மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை. 

தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு மகன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான். விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன். 24 உங்களிடம் நான் விரைவில் வர நமது கர்த்தர் உதவுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

I நாளாகமம் 29:3
இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 

ஆண்டவருக்கு காசு, பணம் என்பது ஒரு பொருட்டே கிடையாது, ஒரு வைராக்கியம் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பயப்பட வேண்டும் அந்த பயம் இருக்குமென்றால் ஆண்டவர் எல்லா வாசல்களையும் நமக்காக திறப்பார். கர்த்தருக்கு கீழ்படிந்து, பயந்து வாழ்ந்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கை செழுமையாய் இருக்கும்.

No comments:

Post a Comment