Sunday, October 30, 2016

ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title:  ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்
Date: 23:10:2016
Speaker: Brother Micheal

Worship : Pastor Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 
" ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள் "

சங்கீதம் 136:4
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

கர்த்தர் ஒருவரால் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் அதிசயங்களை செய்ய முடியும். நம் வாழ்வினில் கர்த்தர் அதிசயங்களை செய்ய வேண்டுமென்றால் அந்த ஒருவராய் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் கடந்து வர வேண்டும். துதியினால் பேய்கள் ஓடும், துதியினால்  கட்டுகள் உடையும், துதியினால் சுகம் உண்டாகும், இங்கு நாம் மூன்று விதமான அதிசயங்களையும் அதை ஏன் இயேசு செய்தார் என்பதை பற்றியும் காணலாம்.

1. உன் குறைவுகளை நிறைவாய் மாற்றி அதிசயம் செய்வார் 
2. உன் மரணப்படுக்கையை மாற்றி அதிசயம் செய்வார் 
3. உன் ஆபத்தில் விடுதலை தந்து அதிசயம் செய்வார் 

1. உன் குறைவுகளை நிறைவாய் மாற்றி அதிசயம் செய்வார் 


யோவான் 2 : 1-10

கானா ஊரிலே மூன்றாம் நாளிலே ஒரு கல்யாணம் நடந்தது. அந்த கலியாணத்தில் இயேசுவின் தாயும் உடன் இருந்தார்கள். இங்கே மூன்றாம் நாள் என்று சொல்லும் பொழுது மூன்றாம் நாளிலே தான் இயேசு கல்லறையில் இருந்து உயித்தெழுந்தார். இயேசு அந்த கலியாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்  என்பதை இரண்டாம் வசனத்தில் காணமுடியும். 

இயேசுவின் தாய் திராட்சை ரசம் குறைவுபட்டுள்ளது என்று இயேசுவிடம் சொன்னார். அதற்கு இயேசு ஸ்திரீயே எனக்கும் உனக்கும் என்ன என்னுடைய வேலை இன்னும் வரவில்லை என்றார். இயேசு கானா ஊரில் உள்ள அந்த கலியாண வீட்டில் தான் தன்னுடைய முதல் அதிசயத்தை செய்தார். இயேசு பற்றி முழுமையாக தெரிந்த படியால் அவர் தாய் அங்கு உள்ள வேலைக்காரரிடம் அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன் படியே செய்யுங்கள் என்று சொன்னார்.
திராட்சை ரசம் என்பது யூதர்களின் சுத்திகரிக்கும் முறையாக இருந்தது. இயேசு அந்த கற்சாடிகள் முழுமையாக தீரும் வரை காத்திருந்தார். அவைகள் முழுமையாக தீர்ந்ததும் இயேசு வேலைக்காரரை நோக்கி இப்பொழுது நீங்கள் அந்த கற்சாடிகள் முழுவதுமாக நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீர் நிரப்புங்கள் என்றார்.

பின்னர் நீங்கள் இதை மொண்டு பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு  போங்கள் என்றார். இயேசு தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றியது அங்கு உள்ள வேலைக்காரருக்கு மட்டுமே தெரியும். அவர்கள் மணவாளனை அழைத்து ருசி குறைந்த திராட்சை ரசத்தை முதலில் கொடுத்து ஜனங்கள் திருப்தி அடைந்த பிறகு நல்ல அருமையான ருசி நிறைந்த இந்த திராட்சை ரசத்தை வைத்திருந்தீரே என்று கேட்டார்கள்.

அந்த அதிசயம் அந்த கலியாண வீட்டாருக்கும் தெரியாது, இயேசுவிற்கும் அவருடைய தாயார் மற்றும் வேலைக்காரருக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் கர்த்தர் விரைந்து வந்து திராட்சை ரசம் குறைவு படும் பொழுது அந்த குறைவுகளை கர்த்தர் நிறைவாக்குகிறார் .
இவை எதற்கு அடையாளமாக இருக்கிறது என்று சொன்னால் ஜாடி என்பது  நம் வாழ்க்கையை குறிக்கிறது அதில் உள்ள திராட்சை ரசம் என்பது நம் பழைய கிரியைகளை குறிக்கிறது அவை முழுவதையும் நீங்கள் நீக்கி போடும் வரை நம் தேவனாகிய கர்த்தர் உங்கள் மீது கண் வைத்து இருப்பார். அந்த ஜாடியாகிய நம்முடைய வாழ்க்கையின் மீது அது எப்பொழுது நீங்கும்  என்று கர்த்தரின் கண்கள் எப்பொழுதும் நம்மை நோக்கியே இருக்கின்றன.

நமக்குள்ளே எவ்வளவு விதமான காரியங்கள், இச்சைகள், பெருமைகள், கெட்ட வார்த்தைகள், பொறாமைகள், மேட்டுமைகள் இவையாவும் நிறைந்துள்ளன. இவையெல்லாம் நீங்கினால் தான் கர்த்தர் அதிசயம் செய்யும் வேலை வரும் அப்பொழுதுதான் கர்த்தரின் கரம் நம் வாழ்க்கையில் வரும்.

நீங்களும் இன்றைக்கு அப்படிப்பட்ட ஜாடியாக இருந்தீர்கள் என்றால் எல்லாவற்றையும் வெளியே போட்டுவிடுங்கள். அப்பா வந்து ஜாடியாகிய உம வாழ்க்கையின் மீது கை வைத்து நல்ல ருசியான திராட்சை ரசமாக உங்களை மாற்றுவார். உங்களுக்கான நல்ல ரசத்தை கர்த்தர் வைத்திருக்கிறார். உங்களுக்கு உள்ளே உள்ள பழைய ரசத்தை எடுத்துப்போடுங்கள், பின் கர்த்தர் தரும் நல்ல திராட்சை ரசத்தை நீங்களும் உங்களுடைய சந்ததிகளும் புசிப்பார்கள்.

2. உன் மரணப்படுக்கையை மாற்றி அதிசயம் செய்வார் 

யோவான் 11 : 17 - 26  மற்றும்  யோவான் 11 : 33 - 42 ஆகிய வசனங்கள் 

இங்கு இயேசுவின் ஜெபம் எவ்வாறு இருக்கிறதென்றால் தன்னை சூழ்ந்துள்ளவர்கள் அனைவரும் விசுவாசிக்கும் படி நான் லாசருவை உயிரோடு எழுப்ப போகிறேன் என்று வேண்டி முன்கூட்டியே இயேசு பிதாவினிடத்தில் விசுவாச அறிக்கை செய்கிறார் . இயேசு ஊர்மக்கள் விசுவாசமில்லாமல் அறியாமையில் அழுது புலம்புவதை கண்டு தன் ஆவியில் கலங்கினார். யூதர்கள் இவர் அவனை இவ்வளவாய் நேசித்தாரே குருடர்களுக்கு பார்வை அளிக்கும் இவர் லாசருவை சகமலிருக்க செய்வாரோ என்பதை ஜனங்கள் பேசுவதை கேட்டு இயேசு கலங்கினார். இயேசு யூதர்களின் அந்த பழைய சடங்காசாரத்தை முறியடிக்கும் படி தான் மூன்று நாட்கள் அந்த பட்டணத்தில் தங்கி இருந்தார். இயேசு லாசரு மாறித்தான் என்று வெளிப்படையாய் தன் சீடர்களிடம் சொன்னார் ஆனால் அவர்களோ அவன் நித்திரையாய் இருப்பான் என்றனர். யூதர்கள் யாவரும் அறியும்படி இயேசு நான்காம் நாளிலே மரித்த லாசருவை உயிரோடு எழுப்புகிறார்.
மரித்த லாசருவின் உடலை யூத மரபு படி துணியால் சுற்றி கட்டி வைத்தார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் லாசருவை போல அநேக கட்டுகள் உண்டு அந்த கட்டுகள் யாவும் அறுபட வேண்டும் என்று சொன்னால் அந்த தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்று சொன்னால் ஒருவராய் பெரிய அதிசயங்களை செய்யும் கர்த்தர் நம் வாழ்க்கையில் கடந்து வர வேண்டும். முறைகள், சடங்குகள், நம்மை அறியாமலே செய்தோம் ஆனால் அவற்றை நாம் களைய வேண்டும். நாம் கர்த்தருக்காக வாழ வேண்டும், அந்த சடங்காசாரத்தினால் தான் லாசருவின் உடலை முழுவதுமாய் கட்டி, அந்த குகையிலே கல்லை வைத்து விட்டார்கள். ஆனால் இயேசு கடந்து வந்து லாசருவே வெளியே வா என்று சொல்லி அவனை உயிரோடு எழுப்பி தன் மகிமையை அனைவரும் அறியும்படி செய்தார். கர்த்தரை உங்களை பார்த்து சொல்கிறார் லாசருவே வெளியே வா என்று 
இயேசு உங்கள் வாழ்க்கையில் வருவார் என்று சொன்னால் அது எப்படிப்பட்ட தடைக்கல்லாக இருந்தாலும் சரி, அதை கர்த்தர் தலைக்கல்லாக மாற்றுவார். உங்களுக்குள் என்ன போராட்டம் இருக்கிறதோ அதுதான் உங்கள் தடை கல். நீங்கள் கர்த்தரிடம் ஒப்புரவாகி லாசருவின் கட்டுகளையும், கல்லையும் நீங்கி போட்டிர்களே அதுபோலவே எங்களின் வாழ்வில் உள்ள தடைகளை நீக்கி அதிசயம் செய்ய ஆண்டவரே நீர் வல்லவராயிருக்கிறீர் என்று நாம் நம் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபித்தால் அவர் விரைந்து வந்து நமக்கு நிச்சயமாக அதிசயம் செய்வார். 

3. உன் ஆபத்தில் விடுதலை தந்து அதிசயம் செய்வார் 

யோனா 1:17

யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

யோனா 1 : 7 - 15 மற்றும் யோனா 2 : 1 - 10 வரையான வசனங்கள் 

தேவன் அழைக்கிறார், யோனா ஓடுகிறான்

பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் சீட்டுக் குலுக்கிப்போட்டு இத்துன்பம் வரக் காரணம் என்னவென்று பார்ப்போம்” என்று பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் சீட்டுப் போட்டார்கள். யோனாவால் இந்தத் துன்பம் வந்தது என்பதை அது காட்டியது.  பிறகு அவர்கள் யோனவிடம், “உனது குற்றத்தால்தான் எங்களுக்கு இந்த பயங்கரமான துன்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீ என்ன செய்திருக்கிறாய் என்று எங்களிடம் சொல். உனது தொழில் என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உனது நாடு எது? உனது மக்கள் யார்?” என்று கேட்டார்கள்.
யோனா அவர்களிடம், “நான் ஒரு எபிரேயன். நான் பரலேகத்தின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கிறேன். அவரே கடலையும் நிலத்தையும் படைத்த தேவன்” என்றான். யோனா, தான் கர்த்தரிடமிருந்து ஓடி வந்ததாகச் சொன்னான். அவர்கள் அதனை அறிந்ததும் மிகவும் பயந்தார்கள். அவர்கள் யோனாவிடம் “உனது தேவனுக்கு எதிராக எந்த பயங்கரமான செயலைச் செய்தாய்?” என்று கேட்டார்கள்.

காற்றும், கடல் அலைகளும் மேலும் மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் யோனாவிடம், “நாங்கள் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும்? நாங்கள் கடலை அமைதிப்படுத்த உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். யோனா அவர்களிடம், “நான் குற்றம் செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். என்னால்தான் இந்தப் புயல் வந்துள்ளது என்று எனக்குத் தெரியும். எனவே என்னைக் கடலுக்குள் எறியுங்கள். கடல் அமைதி அடையும்” என்றான்.

ஆனால் அவர்கள் யோனாவைக் கடலுக்குள் எறிய விரும்பவில்லை. அவர்கள் கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. காற்றும், கடல் அலைகளும் மேலும் மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் கர்த்தரிடம், “கர்த்தாவே, நாங்கள் இவனை அவன் செய்த தவறுக்காக கடலில் தூக்கி எறிகிறோம். எனவே, ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றோம் என்று எங்களைக் குற்றப்படுத்தாதிரும். நாங்கள் அவனைக் கொன்றதற்காக எங்களை மரிக்கச் செய்யாதிரும். நீர்தான் கர்த்தர், நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வீர் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் தயவு செய்து எங்களிடம் இரக்கமாய் இரும்” என்று அழுதார்கள். அவர்கள் யோனாவைக் கடலுக்குள் வீசினார்கள். புயல் நின்று கடல் அமைதியானது.

யோனா மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது, அவன் தனது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்தான். யோனா, நான் மிக மோசமான துன்பத்தில் இருந்தேன். நான் உதவிக்காகக் கர்த்தரை வேண்டினேன்.
அவர் எனக்குப் பதில் கொடுத்தார். நான் பாதாளத்தின் ஆழத்தில் இருந்தேன். கர்த்தாவே, நான் உம்மிடம் கதறினேன். நீர் எனது குரலைக் கேட்டீர்.

நீர் என்னைக் கடலுக்குள் எறிந்தீர். உமது வல்லமையுடைய அலைகள் என்மேல் வீசின.
நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றேன். என்னைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது.பிறகு நான் நினைத்தேன், ‘இப்போது நான் உம் பார்வையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளேன்.’ ஆனால், நான் தொடர்ந்து உதவிக்காக உமது பரிசுத்த ஆலயத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கடல் தண்ணீர் என்னை மூடியது. தண்ணீரானது எனது வாயை நிறைத்தது. என்னால் சுவாசிக்க முடியவில்லை. நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழமாகச் சென்றேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. நான் மலைகள் துவங்குகிற கடலின் ஆழத்திற்குச் சென்றேன்.  நான் இந்தச் சிறைக்குள் என்றென்றும் இருப்பேனோ என்று நினைத்தேன். ஆனால் எனது கல்லறையிலிருந்து என்னை என் தேவனாகிய கர்த்தர் மீட்டார். தேவனே, நீர் எனக்கு மீண்டும் உயிர்கொடுத்தீர்.எனது ஆத்துமா எல்லா நம்பிக்கையையும் இழந்தது. ஆனால், பிறகு நான் கர்த்தரை நினைத்தேன்.
கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபம் செய்தேன், நீர் உமது பரிசுத்தமான ஆலயத்திலிருந்து எனது ஜெபத்தைக் கேட்டீர்.பிறகு கர்த்தர் மீனோடு பேசினார். மீன் யோனாவை தன் வயிற்றிலிருந்து உலர்ந்த நிலத்தில் கக்கிவிட்டது.


யோனா 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

யோனா 4:9

அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.

யோனா 4:10
அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

குடும்பத்தில் யாராவது தவறு செய்தால் உன் குடும்பம் தான் தத்தளிக்கும் உன் நிமித்தமாய் உன் குடும்பத்திற்கு இவ்வாறு நிகழும் கொந்தளிப்பு இன்னும் அதிகமாகும். கர்த்தருக்கு எப்பொழுதும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ன துன்பங்கள் வந்து உங்களை நொறுக்கினாலும் கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகுவதால் நம் வாழ்க்கையில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. யோனாவுக்கு கர்த்தர் மீனை கட்டளையிட்டார் நமக்கு என்னவோ 


நாம் திருந்தி நல்ல முறையில் வாழ வேண்டி நமக்கு ஏற்ற எதாவது ஒரு சிட்சையை கொடுத்து நம்மை மாற்றிவிடுவார். கர்த்தர் யோனாவுக்கு நல்ல பாடத்தை கற்பித்து யோனாவை மாற்றுகிறார். யோனாவை போல நம்முடைய வாழ்க்கை கீழ்ப்படியாமை என்று சொன்னால் யோனாவை அதிசயமாய் மூன்றாம் நாளில் கரை சேர்த்த கர்த்தர். நம்மையும் பரலோகத்திற்கு இயேசுவின் மூலமாக நம்மை கொண்டுபோய் கரைசேர்ப்பார் அதற்காகத்தான் கர்த்தர் பிரயாசப்படுகிறார் ஆமென்.

No comments:

Post a Comment