கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: தடைகளை நீக்குபவர் உனக்கு முன்பாக கடந்து போவார்
Date: 30:10:2016
Speaker: Brother Micheal
Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael
தடைகளை நீக்குபவர் உனக்கு முன்பாக கடந்து போவார்
மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
வசனம் சொல்கிறது தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார் கர்த்தர் மீகாவேல் தீர்க்கதரிசன புஸ்தகம் 2:13 ஆம் வசனத்தின் படி, உங்கள் தடைகளை நீக்கும்படி உங்களுக்கு முன்பாக கடந்து போவார்.
நீங்கள் கர்த்தருடைய பார்வைக்கு விசேஷித்தவர்கள் அதனால் தான் கர்த்தர் சொல்கிறார். உங்கள் வாழ்வு சிறக்க உங்களுக்கு முன்பாக போய் எல்லா தடைகளையும் நீக்க வல்லவராயிருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் சில தடைகள் இருக்கின்றன. தடைகள் இருப்பதால் தான் சில வாசல்களில் உட்பிரவேசியாமல் இருக்கிறோம். அந்த வாசல் வழியே போனால் தான் உனக்கு தேவையான பொக்கிஷங்களும், உனக்கு தேவையான ஆசிர்வாதங்களும், உனக்கு தேவையான புதைபொருள்களும் இருக்கிறது. அந்த வாசலுக்கு நேராக உனக்கு முன்பாக பிசாசானவன் ஒரு தடையை வைத்திருக்கிறான். அந்த தடையை இன்றைக்கு கன்மலையாகிய இயேசு கிறிஸ்து நீக்கி போடும்படி உனக்கு முன்பாக கடந்து சென்று அந்த தடையை நீக்கி போடுவார்.
கர்த்தர் சொல்கிறார் அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள், நீங்கள் கடந்து போவீர்கள் எத்தனை நாள் நீ வாசலுக்கு வெளியவே நின்று கொண்டுஇருக்கிறாய் ஏன் என்று சொன்னால் உனக்கு முன்பதாக தடைகள் சில தடைகள் இருந்தது. கர்த்தர் சொல்கிறதாவது நான் அந்த தடைகளை நீக்குவேன் என்கிறார்.
நீ நன்மையை பெற்று கொள்ளாதபடிக்கும் , உன்னுடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்ளாதபடிக்கும், நீ இன்னுமாய் அபிஷேகத்தில் நிறைந்து ஆவிக்குள்ளாகி கர்த்தரை துதிக்க கூடாத படிக்கும் ஏதோ ஒரு தடை இந்த தடைகளை எல்லாம் நீக்கும் படி உனக்கு முன்பாக போவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் அந்த வாசலுக்குள் பிரவேசிக்கும் படியான சிலாகியத்தை உங்களுக்கு தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்படியான ஒரே அப்பா நம் இயேசப்பா ஒருவர் மட்டும் தான்.
கன்மலை கிறிஸ்து சொல்கிறார், உன் வாழ்க்கையில் இருக்கிற தடைகள். அதாவது சிலருக்கு அவர்களுடைய எண்ணங்களே தடையாக இருக்கும் தன் சுயபுத்தியின் படியே நடப்பார்கள் இதனால் அவர்களுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையில் இருப்பார்கள். கர்த்தர் சொல்கிறார் நான் உன் வாழ்க்கையில் இருக்கிற எல்லா தடைகளையும் நீக்கும்படி நான் உனக்கு முன்பதாக கடந்து செல்வேன், நீ அந்த வாசலில் பிரெவேசித்து தான் ஆக வேண்டும்.
சூம்பின கையை உடைய பிச்சைக்காரன் ஆலயத்தின் வாசல் முன்பாக பல வருடங்களாக அதனுள் பிரவேசிக்க முடியாமல் இருந்தான். ஆனால் ஆலயத்திற்குள் அவன் பிரவேசிக்கும் படியான ஒரு நாள் வந்தது, அந்த நாள் இன்று உங்களுக்கும் வந்துள்ளது. நீ வாசலுக்குள் பிரவேசிக்கும் படி உன் தேவனாகிய கர்த்தர் தடையை நீக்கப்போகிறார்.
சூம்பின கையுடைய அவன் பேதுருவிடத்தில் தனக்கு உதவும் படி கேட்கிறான். அதற்கு பேதுரு அவனை நோக்கி என்னிடத்தில் பணம் இல்லை, பொன் இல்லை, வெள்ளி இல்லை, என்னிடம் எந்த சொத்தும் இல்லை ஆனால் என்னிடத்தில் உள்ளதை உனக்கு தருகிறேன் இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று பேதுரு சொன்னவுடன் பல வருடங்களாக அவனக்கு இருந்த தடை நீங்கி விடுதலையாகி மிகுந்த உற்சாகத்தோடு ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
இன்றைக்கு நீங்கள் வாசலுக்குள் பிரவேகிக்க முடியமால் சத்துரு வைத்திருந்த எல்லா தடைகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடந்து சென்று எல்லா தடைகளையும் நீக்கும் படி இன்றைக்கு உங்களுக்கு முன்னதாக கடந்து செல்கிறார். அதே வசனத்தில் கடைசியில் சொல்லப்பட்டிருக்கிறது அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பதாக செல்வார்.
அந்த ராஜா எப்படிப்பட்டவர் என்று சொன்னால் அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா, அவர் யுத்தத்தில் வல்லவர், அவர் சாத்தானை தன் காலில் கீழே நசுக்கியவர், உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலப்புறத்தில் பதினாயிரம் பேர் வந்தாலும் உன்னை சேத படுத்த முடியாது. உன் ராஜா உனக்கு முன்பதாக கடந்து செல்வார், அவர் மரணத்தை வென்றவர், பாதாளத்தில் போய் அதன் திறவு கோலை உடையவர், இந்த உலகத்தின் லோகாதிபதியை நசுக்கியவர் அவர் உங்களுக்கு முன்பதாக கடந்து செல்வார். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர், அவர் ஆல்பாவும் ஒமேகாவும் ஆனவர், ஆதியும் அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறார். தடைகளை நீக்குவது மாத்திரம் அல்ல, நீ வாசலில் பிரவேசிப்பது மாத்திரம் அல்ல, நீ செய்கிற எல்லா காரியங்களிலும் அவர் முன்னிலையில் இருந்து நம்மை நடத்துவார். தேர்வுக்குப்போனால் அவர் முன்னே நம்மை வழிநடத்துவார், நாம் வெளியே சென்றால் அவர் நம் முன்னே கடந்து போவார். கல்யாண காரியம் என்று சொன்னால் அவர் முன்னே இருந்து நடத்துவார், உன் வேலை ஸ்தலத்தில் உனக்கு முன்னாலிருந்து உன் தலையை உயர்த்துவார், எல்லா காரியத்திலும் கர்த்தர் முன்னிலையில் இருந்து உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்று கர்த்தர் சொல்கிறார்.
1. உன் சத்ருக்கள் காணும் வன்னம் உனக்கு உள்ள தடைகளை நீக்குவார்
கர்த்தர் சொல்கிறார் எந்த சத்ரு உனக்கு முன்பாக தடையை வைத்தானோ, எந்த சத்ரு உன்னுடைய ஆசீர்வாதங்களை பரித்துக்கொள்ள நினைத்தானோ, அந்த சத்ருவுக்கு முன்பதாக கன்மலையாகிய இயேசு கிறிஸ்து கடந்துபோய் அந்த தடையை நீக்கும்படி இன்றைக்கு உங்களுக்கு முன்பாக கடந்து செல்கிறார்.
யாத்திராகமம் 14:19
அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
யாத்திராகமம் 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
யாத்திராகமம் 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
யாத்திராகமம் 14:15
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.
யாத்திராகமம் 14:16
நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
யாத்திராகமம் 14:17
எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
யாத்திராகமம் 14:18
இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
யாத்திராகமம் 14:19
அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
யாத்திராகமம் 14:20
அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
யாத்திராகமம் 14:21
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
யாத்திராகமம் 14:22
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
கர்த்தருடைய தூதன் ஜனங்களுக்குப் பின்னாகப் போனான். அந்த உயரமான மேகம் ஜனங்களுக்கு முன்னே செல்லாமல் அவர்களுக்கு பின்னே சென்றது. இவ்வாறு அம்மேகம் எகிப்தியருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே சென்று நின்றது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிச்சம் இருந்தது. ஆனால் எகிப்தியர்களையோ இருள் சூழ்ந்தது. எனவே அந்த இரவில் எகிப்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கிவர முடியவில்லை
எகிப்தியர்களுக்கு முன்பாக மோசே தன் கோலை நீட்டும் போது இஸ்ரவேலருக்கு தடையாய் இருந்த செங்கடல் இரண்டாக பிளந்து அவர்களின் வலது புறத்திலும், இடது புறத்திலும் மதிலாக நின்றது. அதின் வழியாக இஸ்ரவேலர்கள் கடந்து சென்றார்கள் . எகிப்தியர்களுக்கு முன்பாக அவர்கள் கண்கள் காணும் விதமாய் இஸ்ரவேலருக்கு தடையாய் இருந்த செங்கடலை ஆண்டவர் பிளந்து தன் ஜனங்கள் அந்த வழியாக பிரவேசிக்க செய்தார்.
இன்று உன்னுடைய தடையை நீக்கும் படி இதுவரையிலும் உனக்கு முன்பதாக சென்ற கர்த்தர் உன் சத்ருக்கள் காணும் வன்னம் அந்த தடையை நீக்கி நீ அந்த வழியில் கடந்து செல்ல கர்த்தர் உனக்கு உதவி செய்வார்.
2. உன் வாழ்வில் ஏற்பட்ட பெரிய தடையை நீக்குவார்
யோசுவா 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,
யோசுவா 5:13
பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையிலிருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
யோசுவா 5:14
அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
யோசுவா 5:15
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
யோசுவா 6:1
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
யோசுவா 6:2
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
யோசுவா 6:3
யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.
யோசுவா 6:4
ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டுபோகவேண்டும்; ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.
யோசுவா 6:5
அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.
யோசுவா 6:19
சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
யோசுவா 6:20
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,
யோசுவா 6:21
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்.
எரிகோவின் அந்த பெரிய மதில் சுவர் தான் இஸ்ரவேல் புத்திரருக்கு தடையாய் இருந்தது ஏன் என்றால் கானான் தேசத்தை அடைய எரிகோ பட்டணத்தை கடந்து சென்றே ஆகவேண்டும். உருவின பட்டயத்தோடே யோசுவாவுக்கு முன்பாக இருந்தவர் யார் என்று கேட்டால் அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வசனத்தில் அவர் தன்னை கர்த்தருடைய சேனைகளின் அதிபதி என்று யோசுவாவிடம் சொல்கிறார். இயேசு தான் சேனைகளுக்கெல்லாம் அதிபதி இங்கே நாம் அவர் உருவின பட்டயத்தோடே இருப்பதை காண்கிறோம், அப்படியென்றால் அவர் யுத்தத்திற்கு ஆயுதமாகிவிட்டார் என்பதையே குறிக்கிறது. அவ்வாரு யுத்தத்திற்கு ஆயுத்தம் ஆகிவிட்டால் நீங்கள் பயப்படவே தேவை இல்லை. உங்களுக்காக அவர் யுத்தம் பண்ணுவார்.
உங்கள் வாழ்க்கையிலும் அலங்கமாக திகழ்கிற பெரிய மதில்களாகிய தடைகளை சேனைகளின் கர்த்தர் நீக்கிப்போடுவார். நீங்கள் ஏறி அதனை மேற்கொள்ளும்படி செய்வார். நம் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக உங்களுடைய சத்ருக்களுக்கு முன்பாக கடந்து வந்து யுத்தம் செய்வார். உங்கள் தடைகள் எதுவாக இருந்தாலும் சரி அன்று இஸ்ரவேல் புத்திரருக்கு தடையாய் இருந்த எரிகோவின் மதில்களை தகர்த்தெறிந்த கர்த்தர் இன்று உன் வாழ்வில் உள்ள பெரிய தடைகளை நீக்க அவர் வல்லவராய் இருக்கிறார். நீங்கள் கையிட்டு செய்யும் எல்லா காரியத்தையும் அவர் வாய்க்கப்பண்ணி உங்களுக்கு நன்மை உண்டாகும் படி கிருபையை அளிப்பார். ஆமென்
No comments:
Post a Comment