Sunday, November 20, 2016

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் 
Date: 06:11:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 
" நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் "

எரேமியா 31:25
நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.

மனுஷருடைய பார்வையில் தொய்வு வரும். கஷ்டங்கள் வரும், இடறல்கள் வரும், தடைகள் வரும், எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறாமல் போகும், இருதயத்திலே ஒரு வித தொய்வு, ஆனால் கர்த்தர் சொல்கிறார். ஏற்ற காலத்திலே அதின் அதின் நேரத்திலே நம்மை சம்பூரணமடையப்ப பண்ணுவேன் . விடாய்த்த ஆத்துமா என்று சொல்லும் பொழுது மிகவும் துயரமான ஒரு கஷ்டம், அதை யாரிடம் சொன்னாலும் தீராது ஆனால் கர்த்தர் அப்படிப்பட்ட விடாய்த்த ஆத்துமாவை தேற்றி சம்பூரணமடைய செய்ய இன்று நம்மிடையே வந்துள்ளார், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இன்றும் நாம் மூன்று விதமான காரியங்களில் கர்த்தர் எப்படி சம்பூரணமடையப்ப  பண்ணுகிறார் என்பதை பார்ப்போம்.

1. தமது ஊழியக்காரரை சம்பூரணம் அடையச்செய்வார் 



2. தம்மை நம்பி வந்தவர்களை சம்பூரணம் அடையச்செய்வார் 



3. தமது ஜனத்தை சம்பூரணம் அடையச்செய்வார் 

1. தமது ஊழியக்காரரை சம்பூரணம் அடையச்செய்வார் 

I இராஜாக்கள் ஆம் அதிகாரத்தை நாம் பார்ப்போம்


 இங்கே இரண்டு இடத்திலே ஆண்டவர் பேசுகிறார். எலியாவை கொள்ள அந்த ஊரிலே கட்டளை பிறப்பித்துவிட்டார்கள். எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். எலியா எப்படிப்பட்டவர் தெரியுமா ? தைரியமாய், வைராக்யமாய் தேவனுக்கு முன்பதாக நின்று சொல்லுகிறேன் என்று வானத்தில் இருந்து அக்கினியை வரவழைத்தவர் அப்படி ஒரு வல்லமையான தீர்க்கதரிசி தன் பிராணனை காப்பாற்றிக்கொள்ள வனாந்திரத்தில் ஓடுகிறார். பின்னர் ஒரு சூரைச்செடி அடியில் படுத்து உறங்குகிறார்.

மிகவும் களைத்து போன எலியா போதும் இந்த வாழ்க்கை, நினைத்து நினைத்து விடாய்த்தததான மன நிலைக்கு உள்ளாகி இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டி சூரைச்செடியின் கீழே படுத்து கொண்டார்.  விடாய்த்த அந்த ஆத்துமாவை தேற்றும்படி, ஒரு தேவதூதன் வந்து அவனை தட்டி எழுப்பி எழுந்திரு, சாப்பிடு என்றான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான். அது விசேஷித்த அப்பம் நான் சொல்வதெல்லாம் பரலோகத்தில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டது. இங்கே எலியாவுக்கும் கிடைத்ததும் பரலோகத்தின் அப்பம். 

நீ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவம் பத்தி வைராக்யமாய் இருப்பீர்கள் என்று சொன்னால். எப்படி பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி நம்மை காக்க கர்த்தர் வருவார். மீண்டும் தேவதூதன் வந்து, “எழுந்திரு! சாப்பிடு! இல்லாவிட்டால், நீண்ட பயணம் செய்யமுடியாது” என்றான். எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான்.

அதுபோல சோர்ந்து போகாதே நீ போக வேண்டிய தூரம் ரொம்ப தூரம் உன்னை வைத்து நான் சிலரை அபிஷேகம் பண்ணனும், அவர்களை நீ ராஜாவாக்கணும் உனக்கு கீழே ஒரு ஊழியக்காரரை கொடுக்கப்போகிறேன் என்று கர்த்தர் சொல்கிறார். கன்மலையாகிய கர்த்தர் உன்னை சாவுக்கு தப்புவித்து நீ எபோதும் சோர்ந்து போகாமல் கர்த்தர் உன்னை தட்டி எழுப்பி உன்னுடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் சரி கர்த்தர் அதை உன்னக்கு கொடுத்து மீண்டும் நடக்க பண்ணுவார். 

2. தம்மை நம்பி வந்தவர்களை சம்பூரணம் அடையச்செய்வார் 


லூக்கா 9:13
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங்கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டுவரவேண்டுமே என்றார்கள்.

லூக்கா 9:14
ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது, ஐம்பதுபேராக, உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.

லூக்கா 9:15
அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.

லூக்கா 9:16
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.

லூக்கா 9:17
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.



அந்த ஐயாயிரம் பேரும் சம்பூரணமாக சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள். இயேசு சீஷர்களை பார்த்து சொல்கிறார் நீங்களே கொடுக்கலாமே என்று அதற்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் உங்களிடம் அந்த அற்புதம் செய்யும் வல்லமை இருக்கிறது. ஆனால் சீஷர்கள் மாம்சத்தில் இவாறாக சொல்கிறார்கள் சீஷர்கள் “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாங்கள் உணவு வாங்கி வர முடியுமா?” என்று கேட்டனர்.இயேசு தன் சீஷர்களிடம், “மக்களிடம் ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக அமரும்படி கூறுங்கள்” என்றார்.


அப்போது இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்தார். இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்னர் இயேசு உணவைப் பகிர்ந்து தன் சீஷர்களிடம் கொடுத்து, அவ்வுணவை மக்களுக்குக் கொடுக்குமாறு கூறினார். ஆக இதுவும் பரலோகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அப்பமும், மீனும் ஆகும். 


சங்கீதம் 123:2



இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.


சங்கீதம் 123:3


எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.


வந்த யாவரும் எதுவும் கொண்டு வரவில்லை அவர்கள் இயேசு ஒருவரையே வந்தார்கள். வந்த அனைவரும் கர்த்தருடைய கரத்தினால் ஆசிர்வாதம் பெற்று தன் அற்புத கரங்களை உயர்த்தி எல்லோரும் சம்பூரணமாக சாப்பிடும் படி ஆண்டவர் கிருபை செய்தார். எனவே உங்களுக்கும் தேவைகள் எதுவோ கன்மலையாகிய தேவன் அதை ஆசிர்வதித்து உங்களுக்கு கொடுப்பார்.

3. தமது ஜனத்தை சம்பூரணம் அடையச்செய்வார் 


யாத்திராகமம் 16:2


அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:


யாத்திராகமம் 16:3
நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.

யாத்திராகமம் 16:8
பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.

யாத்திராகமம் 16:11
கர்த்தர் மோசேயை நோக்கி:

யாத்திராகமம் 16:12


இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.



யாத்திராகமம் 16:13

சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.



யாத்திராகமம் 16:14

பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.



யாத்திராகமம் 16:15

இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.



மத்தேயு 6:26

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?



மத்தேயு 6:28

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;



மத்தேயு 6:30

அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?



என்னதான் கர்த்தரை நாம்  முமுறுத்தாலும் தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் எப்பொழுதும் கைவிடுவதில்லை அவர் எப்பொழுதுமே நம் மீது நினைவாய் இருக்கிறார். நம் தேவைகளை சந்திக்க அவர் வல்லவராயிருக்கிறார். அனுதினம் நமக்கு தேவையானவைகளை தந்து கர்த்தர் போஷிப்பார் எனவே கவலை வேண்டாம் அவர் நம்மை சம்பூரணம் அடைய செய்வார், ஆமென்.

No comments:

Post a Comment