Saturday, December 3, 2016

உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக
Date: 13:11:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 
" உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக "

யோவான் 14:27
உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக

இருதயம் என்பது மனுஷனுக்கு ஒரு முக்கிய அவயமாக இருக்கிறது. இந்த இருதயத்திலே பயமும், கலக்கமும் நிரம்ப பெற்றுஇருக்கிறது. இன்று கர்த்தர் உங்களை பார்த்து சொல்கிறார் உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமல் இருப்பதாக ஆமென்.  எந்த ஒரு காரியத்தை குறித்தும் நீங்கள் கலங்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். இங்கே மூன்று விதமான காரியங்களை பற்றி நாம் காணலாம்.

1. நீ பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது 
2. நீ பயப்படாதே கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் 
3. நீ பயப்படாதே உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி காயங்களை ஆற்றுவார்

1. நீ பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது 

லூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

லூக்கா 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.

லூக்கா 1:8
அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,

லூக்கா 1:9
ஆசாரிய ஊழிய முறைமையின்படி, அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.

லூக்கா 1:10
தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா 1:11
அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.

லூக்கா 1:12
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.

லூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

லூக்கா 1:14
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

லூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.

இங்கே சகரியா வெகு காலமாக குழந்தைக்காக ஆண்டவரிடத்தில் ஜெபம் செய்கிறார். சகரியா வாழ்க்கையிலே ஒரு குழந்தை இல்லாதது மிகவும் அவருக்கு வருத்தமாக இருந்தது, பல வருடங்கள் கடந்து விட்டன. ஏன் இத்தனை வருடங்கள் இவருக்கு தடை என்று சொன்னால் வசனம் சொல்கிறது யோவான் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாய் இருப்பான். இயேசு பிறப்பதற்கு சற்று முன்பதாக யோவான் பிறக்க வேண்டும் என்பது தேவ சித்தம் அதனால் தான் இத்தனை கால தடை சகரியாவுக்கு இருந்தது. 

சகரியாவிற்கு முன் தேவ தூதன் தோன்றி நீ பயபடாதே நீ இத்தனை நாள் வரை செய்து வந்த ஜெபம் தேவனுக்கு எட்டியது ஆகையால் பிறக்கும் அந்த மகனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக என்று சொல்கிறார். ஏன் இந்த தடை என்றால் யோவான்ஸ்னானகன் கர்த்தருக்கு வழியை ஆயுத்தம் பண்ண தெரிந்து கொல்லப்பட்டவன். இயேசு இவரிடத்தில் வந்து தான் ஞானஸ்னானம் பெற வேண்டும் என்பது தேவசித்தம் ஆகும். யோவானுடைய பிறப்பின் நிமித்தம் அநேகர் சொந்தோஷப்படுவார்கள், இவர் தான் சுவிசேஷத்தை முதலில் வனாந்திரத்தில் போதித்தார். 

இதுபோல நீங்களும் மிக நீண்ட நாளாக ஜெபம் செய்திருக்கலாம். கர்த்தரை இன்றைக்கு உங்களை பார்த்து சொல்கிறார் பயப்படாதே உன்னுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது அதை ஏற்ற காலத்தில் செய்வேன் என்று சொல்கிறார். நீங்கள் ஜெபிக்கும் அந்த தேவைகள் தாமதமானால் அது உங்களுக்கு கிடைக்கப்பெறும் போது மிகுந்த மகிமை வாய்ந்ததாக இருக்கும் எனவே பயம் கொள்ளாதிருங்கள் உலகத்தை ஜெயம் கொண்ட இயேசு நம் பட்சம் இருக்கிறார் ஆமென்.

I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

I சாமுவேல் 1:10
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

I சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

I சாமுவேல் 1:12

அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

I சாமுவேல் 1:13
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

I சாமுவேல் 1:14
அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

I சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

கர்த்தர் உன் விண்ணப்பத்தை கேட்பார், நீ ஜெபிக்கிற எந்த காரியமாக இருந்தாலும் சரி நம் தேவனாகிய கர்த்தர் மெய்யாகவே உன் வேண்டுதலை நிறைவேற்றுவார். நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு. வேதம் சொல்கிறது நீங்கள் எதை கேட்கிறீர்களா அதை பெற்று கொள்வீர்கள். விசுவாசோத்தோடே தரித்திருங்கள் இஸ்ரவேலின் தேவன் உங்கள் வேண்டுதல்களை கேட்பார்.

 2. நீ பயப்படாதே கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் 

யோவேல் 2:21
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

நாம் எதை செய்தாலும் அது தோல்வியில் போய் முடிகிறதே என பயப்படுகிறோம், எதை சிந்தித்தாலும் அது விளங்கவில்லை, எல்லாவற்றிலும்  ஒரு தடை இருந்து கொண்டே இருக்கிறது. யாரிடம் போய்  இதை சொல்வது என்று தெரியவில்லை, ஒரு வித பயம் எதிர்காலத்தை குறித்த பயம் என் வாழ்க்கை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்ற பயம், ஆகையால் கர்த்தர் சொல்கிறார் உங்களுக்காக நான் பெரிய காரியங்களை செய்வேன், ஆமென். கர்த்தர் எப்படிப்பட்ட காரியங்களை செய்வார் என்றால் வாசிப்போம்.

யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

கர்த்தர் உங்களால் எண்ணி ஆராய முடியாத பெரிய காரியங்களை செய்வார். அவை எவ்வாறு நிகழ்ந்தது என்று உங்களால் அறிய முடியாது அப்படிப்பட்ட அதிசயமான காரியங்களை கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே வாய்க்கப்பண்ணுவார். 

சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

நீங்கள் தன் காலத்திலே தன் கனியை தரவேண்டும் அப்பொழுதுதான் நாம் எல்லா காலத்திலும் செழித்திருப்போம் நாம் செய்யும் காரியங்கள் யாவும் வாய்க்கும் ஆமென்.

3. நீ பயப்படாதே உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி காயங்களை ஆற்றுவார்

எரேமியா 30:10
ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

எரேமியா 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

எரேமியா 30:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.

எரேமியா 30:13
உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களும் இல்லை.

எரேமியா 30:14
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

எரேமியா 30:15
உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.

எரேமியா 30:16
ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

எரேமியா 30:17
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன். ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன். நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன். ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள். 

உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன். உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன். நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென் ஹல்லேலூயா. 

No comments:

Post a Comment