Saturday, December 17, 2016

உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
Date: 27:11:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 

ஏசாயா 60:15
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.

கர்த்தர் தலைமுறை தலைமுறையாய்  நம்மை  மகிழ்ச்சியாய் வைக்கப்போகிறார். வசனம் மூன்று விதமான காரியங்களை சொல்கிறது, நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், கடந்து போவதும், அப்படிப்பட்டவராய் நீங்கள் இருந்தாலும் உங்களை எப்படி கர்த்தர் வைக்க போகிறார் என்றால், மாட்சிமையாய் நம்மை மாற்றப்போகிறார், உனது வேலை ஸ்தலத்திலே மாட்சிமை இல்லாமல் இருக்கிறாயோ, கர்த்தர் சொல்கிறார் நான் உன்னை மாட்சிமையாய் வைப்பேன் என்று ஆமென், நீங்கள் எதினால் நெகிழப்பட்டீர்களோ, நீங்கள் எதினால் கைவிடப்பட்டீர்களோ, எதினாலே உங்களை ஒருவரும் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த காரியத்திலே உன்னை மாட்சிமையாய் மாற்றி, உனக்கு மகிழ்ச்சியை தருவது மட்டும் இல்லாமல், நித்தியமாய், தலைமுறை தலைமுறையாய் மகிழிச்சியை கர்த்தர் தரப்போகிறார். ஆமென், அல்லேலூயா. 

எப்படிப்பட்ட காரியங்களில் கர்த்தர் நமக்கு மகிழ்ச்சியை வைத்திருக்கிறார் என்பதை இங்கு மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம். 

1.  கர்த்தர் நீதிமான்களின் நம்பிக்கையை மகிழ்ச்சியாய் மாற்றுவார் 

நீதிமொழிகள் 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

நீங்கள் எல்லோரும் நீதிமான்கள், என்றைக்கு நீங்கள் கர்த்தருடன் உடன்படிக்கை செய்தீர்களோ, என்றைக்கு கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டீர்களோ அப்பொழுதே நீங்கள் எல்லோரும் நீதிமான்கள். உங்களை குற்றப்படுத்த ஒரு இலட்சம் பேர் சேர்ந்து நீ குற்றவாளி என்று சொன்னாலும், நீ பாவத்தை செய்தாய் என்று ஒதுக்கி வைத்தாலும் சரி கர்த்தர் உங்களை நீதிமானாக்க கல்வாரி சிலுவையிலே தன்னையே ஒப்பு கொடுத்தார். கர்த்தருடைய கிருபை காலை தோறும் புதிதாய் இருக்கும். நீதிமான்களாகிய உங்களின் நம்பிக்கையை மகிழ்ச்சியாய் மாற்றுவார். மனிதரிடம் நாம் வைக்கும் நம்பிக்கை பொய்யாய் போகலாம் ஆனால் கர்த்தரிடம் வைக்கும் நம்பிக்கையோ எப்பொழுதும் நிலைத்து நிற்கும், ஏனென்றால் நம் தேவனாகிய கர்த்தர் பொய்யுரையா தேவன், அவர் உடன்படிக்கையின் தேவன், உங்களின் மன விருப்பங்களை கர்த்தர் நிறைவேற்றி மகிழ்ச்சியால் உங்களை நிரப்புவார்.

கிறிஸ்துவ வாழ்க்கையே ஒரு நம்பிக்கையின் வாழ்க்கை, பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே இருப்பதினால் அந்த நம்பிக்கையை கொடுத்து கர்த்தர் கிருபையாய் நம்மை வழிநடத்துகிறார். இயேசுவின் வருகை மிக சமீபமாய் இருக்கிற இந்த காலத்திலே நம்பிக்கையாய் நம் நாயகனை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்த காலத்திலே ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம் தேவனாகிய கர்த்தர் நடுவானிலே மின்னல்கள் முழங்க சேனைகளோடு இறங்கி வருவார். இந்த நமிக்கையிலே ஒரு மகிழ்ச்சி இருக்கா இல்லையா ஆமென். 

சங்கீதம் 39:7
இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.

சங்கீதக்காரன் சொல்கிறார் நீரே என் நம்பிக்கை என்று நீங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தால் போதும் அவர் உங்களின் நம்பிக்கையை மன மகிழ்ச்சியாய் மாற்றுவார். 

சங்கீதம் 71:14
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

என்னதான் தோல்விகள் வந்தாலும், சத்ருவின் தடைகள் வந்தாலும், நாம் எப்பொழுதும் எல்லா காலத்திலும் தாவீதை போல கர்த்தரை மேன்மேலும் துதித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் துதிக்கும் பொழுது உங்கள் நம்பிக்கையெல்லாம் கர்த்தர் மகிழ்ச்சியாய் மாற்றுவார்.

2. கர்த்தர் உங்கள் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார் 

ஏசாயா 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.

மனுஷன் அப்பதினால் மாத்திரம் அல்ல தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையால் பிழைக்கிறான். கர்த்தருடைய வார்த்தை நம்மை தேற்றுகிறது, பிழைப்பூட்டுகிறது அதுவே கொழுமையான பதார்த்தம். நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கவனமாய் செவி கொடுக்க வேண்டும். ஒரு ஆத்துமா கலங்கி வருகிறது என்று சொன்னால் அந்த ஆத்துமா எதற்காக வியாகுலப்பட்டு வருகிறது என்றால் அந்த ஆத்துமாவை தேற்ற பரிசுத்த ஆவியானவர் வார்த்தைகளை அளித்தால் அதை தவறாமல் அவருக்கு சொல்லி விடுங்கள், ஏனெனில் அவர்களின் ஆறுதலுக்கான தேடல் கர்த்தருடைய வார்த்தையில் மட்டுமே உள்ளது அதுவே அவர்களுக்கு கொழுமையான பதார்த்தம் ஆகும். 

சங்கீதம் 39:9
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.

சங்கீதம் 39:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

நமெக்கெல்லாம் உலகத்திலே சொத்து வேண்டாம், பந்தம் வேண்டாம், நகைகள் வேண்டாம், இது எதுவுமே வேண்டாம். கர்த்தருடைய இரட்சிப்பு முக்கியம். உலகத்திலே யாருக்குமே கிடைக்காத ஸ்லாக்கியம் நமக்கு உண்டு நாம் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேற பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட ஜனம். ஆமென். இந்த இரட்சிப்பினால் மகிழ்திருந்து நித்யநித்யமாய் அவரோடு பரலோகத்தில் ஒன்றாய் இருப்போம். அதை விட பெரியது எதுவுமே இல்லை. அந்த மகிழ்ச்சி நமக்கு போதும் அல்லேலூயா. 

3. கர்த்தர் உங்களுக்கு பெலன் தந்து மகிழ்ச்சியாக்குவார்

நெகேமியா 8:10
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாய் இருப்பதால் வரும் பெலன், அந்த பெலனே நம்மை நீண்ட நாள் வாழ வைக்கும் அந்த பெலன் தேவன் கொடுத்த பெலன் அது எப்படி இருக்கும் என்று சொன்னால் நீங்கள் எவ்வளவுதான் சோர்ந்து போனாலும் எழுந்து நிற்க வைக்கும் பெலன். இந்த பெலனை கொள்ளை அடிக்க சாத்தான் அநேக விதமான காரியங்களை கொண்டு வருவான். அந்த பெலனை தேவன் உங்களுக்கு தருவாராக, சாத்தானுக்கு இடம் கொடுக்காதீர்கள் எப்பொழுதும் கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள், அந்த மகிழ்ச்சியால் உண்டாகும் பெலன் இன்றைக்கு இதை படிக்கும் உங்களுக்கு தருவாராக ஆமென் அல்லேலூயா. 

No comments:

Post a Comment