Saturday, January 7, 2017

கர்த்தர் உங்கள் முன்னே போவார்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: கர்த்தர் உங்கள் முன்னே போவார்
Date: 01:01:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

ஏசாயா 52:12
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

கர்த்தர் எப்படி நம் முன்னே போவார் ?

உபாகமம் 31:8
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி கர்த்தர் உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. மனிதர்கள் பார்க்கிற வண்ணமாக நான் உன்னை பார்ப்பதில்லை, காலையில் உதிக்கும் சூரியனை எழும்ப பண்ணுகிறவன் நான். காலமும், சமயமும் என் கரத்தில் இருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உனக்கு முன்பாக போவது மட்டும் இல்லாமல் நான் எப்பொழுதும் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, ஏனென்றால் நீ அவர் உள்ளம்கைகளில் இருக்கிறாய். 

சங்கீதம் 68:7
தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்

கர்த்தர் நமக்கு முன்பதாக போவதினால் என்ன நடக்கும் என்பதை பற்றி மூன்று விதமான காரியங்களில் இங்கு நாம் பாப்போம்.

1. கர்த்தர் உன் வாழ்க்கையில் வெளிச்சத்தை தர முன் செல்கிறார் 

யாத்திராகமம் 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

உன்னுடைய வாழ்க்கையில் இருண்ட நிலையிலே நீ கடந்து வந்திருந்தாலும் சரி, இன்றுமுதல் உன்னுடைய வாழ்க்கையில் வெளிச்சம் தர தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பதாக போவார். கஷ்டங்கள் வந்தாலும் மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள் வெளிச்சமான தேவன் என் கூட இருக்கிறார் என்று, நாம் அனைவரும் வெளிச்சத்தின் பிள்ளைகள். உங்களுக்கு நியமித்ததை முடிக்க கர்த்தர் வல்லவராயிருக்கிறார் ஏன் என்று சொன்னால் அவர் உங்களுக்கு முன்பதாக செல்கிறார். உங்கள் வாழ்க்கையில் உள்ள இருளையெல்லாம் கர்த்தர் அகற்ற போகிறார். பிரிவினையின் ஆவிகள் எல்லாம் இயேசுவின் நாமத்தில் விலகி ஓடுகிறது. வெளிச்சத்தை உன் குடும்பத்தின் மீது பிரகாசிக்க பண்ணபோகிறார். 

யாத்திராகமம் 33:14
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

உன்னுடைய வாழ்க்கையில் வெளிச்சம் மட்டும் இல்லாமல் ஒரு இளைப்பாறுதலை தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த வருஷத்திலே அதை அவர் உனக்கு கட்டளையிடுகிறார். அது ஒரு மகிழ்ச்சியான இளைப்பாறுதலாக இருக்கும். 

யாத்திராகமம் 33:19
அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,

2.  கர்த்தர் உனக்கு தைரியம் கொடுத்து முன் செல்கிறார் 

II சாமுவேல் 5:24
முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.

கர்த்தர் உன்னை தைரியப்படுத்துகிறார் ஏன் அவர் முன்பதாக போகிறார் என்றால் நீ ஏன் பயப்படுகிறாய் அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தாவீதுக்கு முன்பதாக சென்றது போல இன்று உன்னுடைய எல்லா பெலிஸ்தரையும் முறி அடிக்க நான் முன் செல்லுவேன் என்று கர்த்தர் சொல்கிறார். அதற்கு தேவையான பெலனை கர்த்தர் உங்களுக்கு தருவார். 

உபாகமம் 9:3
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

கர்த்தர் உன் தடைகளை நீக்க முன் செல்கிறார் 

மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

வசனம் சொல்கிறது தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார். இந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு நாளும் தேவன் உனக்கு முன்பதாக நடந்து செல்வார் மரணம் மேற்கொள்ளாது, வியாதி உன்னை அனுகாது, ஏவல்கள் உன்னை மேற்கொள்ளாது, பொறாமையின் கண்கள் உன்னை மேற்கொள்ளாது, தடையை நீக்குகிறவர் உங்களுக்கு முன்பதாக கடந்து செல்வார். இந்த வருஷத்திலே உங்களுக்கு எந்த தடையும் இல்லை ஆமென். 

No comments:

Post a Comment