கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்
Date: 08:01:2017
Speaker: Brother Micheal
Worship : Brother Micheal & Brother Joshua
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
கிறிஸ்துவுக்குள் வாழ்கிற நமக்கு ஆண்டவர் வைத்துப்போன ஒரு காரியம் என்னவென்றால் அதுவே சமாதானம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை வெறுமனே விட்டுப்போகாதபடிக்கு, அவர் நம்மை தேற்றும் படியாக ஒரு சொத்தை நமக்கு வைத்து விட்டு போயிருக்கிறார் அதுவே உள்ளத்தின் சமாதானம் ஆகும்.
இந்த தேவ சமாதானத்தை ஒரு நபர் பெற்று கொண்டிருப்பான் என்று சொன்னால் அவன் நடக்கிற எல்லா வழிகளிலும் ஒரு சமாதானம் நிலைத்திருக்கும், அது சுகமாக இருக்கலாம், அவன் வியாதியின் அநேக போராட்டங்களில் இருந்தாலும் அவன் சமாதானமாக இருப்பான். அவனுடைய எல்லா காரியங்கள் முடங்கியிருந்தாலும் அவன் கர்த்தருக்குள் சமாதானமாக இருப்பான் அவனுடைய இருதயம் எப்பொழுதும் சமாதானமாக இருக்கும்.
நாம் தேவ நாமத்தை தூஷிக்க வேண்டும் என்று பிசாசானவன் என்னதான் பல திட்டங்களை தீட்டினாலும் சமாதானத்தின் தேவன் யார் மூலமாவது நம்மிடையே கடந்து வருவார். எனவே நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சங்கீதம் 147:12
எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
சங்கீதம் 147:13
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
சங்கீதம் 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
ஆபிரகாமை கர்த்தர் கடலின் மணலை போல ஆசிர்வதித்தார் அவரின் எல்லைகளை பெரிதாக்கினார். அதுபோல உன்னுடைய எல்லை எங்கும் சமாதானம் உண்டாகும் படி இந்த நாளிலே நான் கட்டளையிடுகிறேன் அதை இப்பொழுதே தீவிரமாய் நடப்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் உங்களுக்கு சொல்லுகிறார்.
I சாமுவேல் 25:6
அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
முதலில் உனக்கு சமாதானம், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் சமாதானமாக இருந்தால் எந்த பிரச்சினையும் குடும்பத்தில் ஏற்படாது , எனவே அப்படிப்பட்ட ஒரு சமாதானத்தை கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு தருகிறார். உன் எல்லைகளில் இனி அழுகையின் சத்தம் இல்லை, உன் எல்லைகளில் இனி புலம்பலின் சத்தம் இல்லை. உங்கள் வீட்டுக்கும் உங்களுக்கு உண்டான எல்லாவற்றுக்கும் சமாதானத்தை கர்த்தர் இன்றைக்கு கட்டளையிடுகிறார்.
யோபு 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
நீங்கள் ஓயாமல் துதித்து கொண்டு இருக்க வேண்டும், ஜெபித்து கொண்டு இருக்க வேண்டும், பரிசுத்த உள்ளதோடு இருக்க வேண்டும் அன்பில் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த காரியங்கள் யாவும் குடும்பத்துக்குள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். துதிக்கிறவர்கள் தங்கள் வாயிலிருந்து தேவையில்லாத வார்த்தையை பேசவே மாட்டார்கள். பரிசுத்தமாய் இருக்கிறவன் தேவையில்லாத காரியத்தை செயல்படுத்தவே மாட்டான். அவன் தனித்து நிற்பவனாய் காணப்படுவான், ஜெபிக்கிற மனுஷன் அதிகமாக தேவை இல்லாமல் நேரத்தை செலவு பண்ண மாட்டான். அவன் தனித்து வாசமாய் இருப்பான்.
சங்கீதம் 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
எப்பொழுதும் நாம் குடும்பத்துடன் ஒரு ஐக்கியமாய் இருத்தல் வேண்டும் அப்படி இருக்கும் பொழுது தேவ சமாதானம் உங்கள் வீட்டில் நிலைக்கும். துதி, ஜெபம், பரிசுத்தம், அன்பு, இந்த நான்கு விதமான காரியங்கள் உனக்குள் இருக்கிறதா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும். கர்த்தர் சொல்லுகிறார் இந்த காரியங்கள் உங்களில் காணப்படும் பொழுது நீங்கள் குறைவை காணமாட்டீர்கள்.
பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள். தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.
யோபு 22:21
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
சமாதானமாக பழகி வாழும் பொழுது ஒரு நன்மை இருக்கிறது எனவே அந்த நன்மையை சுதந்தரித்து கொள்ள ஆயுத்தம் ஆகுங்கள். ஆமென் .
No comments:
Post a Comment