Tuesday, May 9, 2017

நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்

கன்மலை கிறிஸ்தவ சபை
Title: நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்
Date: 07:05:2017
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua

" நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன் "

ரூத் 3:11
நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்

அவர் என்னவெல்லாம் நமக்கு செய்வார் ?

இந்த மே மாதத்திலே உங்களுக்கு வேண்டியபடியெல்லாம் கர்த்தர் செய்ய வல்லவராயிருக்கிறார். எனவே நீங்கள் பயப்படவேண்டாம். கர்த்தர் நமக்கு என்னவெல்லாம் செய்வார் என்பதனை இங்கே மூன்று காரியங்களில் நாம் காணலாம்.


1. கர்த்தர் உங்களுக்கு தயை செய்வார்

ரூத் 2:1
நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.

ரூத் 2:2
மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.

ரூத் 2:3
அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.

ரூத் 2:4
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.

ரூத் தன் மாமியாராகிய  நகோமியோடே பெத்லகேமிலே இருக்கிறாள். இவர்கள் மிகவும் ஏழைகளாய் இருக்கிறார்கள். நகோமியோ வயதான ஸ்திரி என்பதால் ரூத் தன் மாமியாருக்காக வயல்களில் கதிர்களை பொருக்கி கொண்டு வருவதற்காக ஆயத்தமாகிறாள். 

ரூத் வயல் வெளியில் கதிர் பொருக்கபோகும்பொழுது யாருடைய கண்களில் எனக்கு தயை கிடைக்குமோ அவர் பிறகே கதிர்களை  பொறுக்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லுகிறாள். ரூத்திற்கு எந்த வயல் வெளிக்கு போகவேண்டும் என்று தெரியாது. அவளிற்கு அறிமுகமானவர் பெத்லகேமிலே எவரும் இல்லை, எப்படி வயல் வெளிக்கு போகவேண்டும் என்றும் தெரியாது ஆனாலும் கர்த்தர் தன்னை வழிநடத்துவார் என்று உறுதியாக விசுவாசித்தாள். 

கர்த்தர் தமது கிருபையினால் ரூத்திற்கு தயை கிடைக்க பண்ணுகிறார். அவள் போய் வயல் வெளியில் அருக்கிறவர்கள் பிறகே பொறுக்குகிறாள். தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட வயல் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடைய வயலாய் இருந்தது. ரூத்திற்கு தயை கிடைத்தது போலவே நம் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கும் இந்த மாதத்திலே உங்களுக்கு  தயை செய்வார். எந்த காரியமாக இருந்தாலும் சரி அவை நிறைவேற கர்த்தர் உங்களுக்கு தயை செய்வார் ரூத்திற்கு போவாசுடைய கண்களில் தயை கிடைத்தது போல ஆண்டவர் தமது பெரிதான கிருபையினால் தயை கட்டளையிடுவார். நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியம் கர்த்தரின் தயவில் நிச்சயமாய் நிறைவேறும். 

2. கர்த்தர் உங்களை விசாரித்து நன்மை செய்வார் 

ரூத் 2:5
பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.

ரூத் 2:6
அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.

ரூத் 2:7
அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக் கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்.

ரூத் 2:8
அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவே இரு.

ரூத் 2:9
அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.

ரூத் 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.

அருக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்டவன் போவாஸ் ரூத்தை விசாரிக்கும் பொழுது நற்சாட்சி கொடுக்கிறார். அதனால் போவாஸ் ரூத்திற்கு நன்மை செய்ய எண்ணுகிறார். ரூத்தின் குணாதிசயங்களை பார்த்து போவாஸிற்கு அவள் மீது அன்பும், பிரியமும், பாசமும் உண்டாயிற்று எனவேதான் அவளை நோக்கி மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவே இரு. என்று அன்பாய் சொல்லுகிறார். 

போவாஸ் ரூத்தை விசாரித்து அவளுக்கு நன்மை செய்தது போலவே உங்களுக்கும் நம் தேவனாகிய கர்த்தர் உங்கள் நல்ல செயல்களை கண்டு உங்களை விசாரிப்பார். உங்களுக்கு தேவையான நன்மைகளை அளித்து உங்களை ஆசீர்வதிப்பார். 

3. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடச்செய்வார் 

ரூத் 2:11
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.

ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
ரூத் தன்னுடைய தகப்பனையும், தாயையும் விட்டு, தன் கணவன் மரித்த பிறகு நகோமியை விட்டு பிரிய மனமில்லாமல் தன் சொந்த ஊரை விட்டு பெத்லகேமிலே வந்தாள். இவை யாவும் போவாசுக்கு விவரமாய் தெரிவிக்கப்பட்டது. ரூத் கர்த்தரை நம்பி வந்ததால் போவாஸ் அவளை ஆசீர்வதிக்கிறார். உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்று போவாஸ் ரூத்தை ஆசீர்வதிக்கிறார். 

ஆம் நாம் எதை விதைக்கிறோமோ அதையே அருக்கிறோம். நம் செயல்களுக்கு தகுந்த பலனை கர்த்தர் நமக்கு தருகிறார். இங்கு ரூத் நல்ல குணசாலியாக நடந்ததால் கர்த்தர் அவள் செய்கைக்கு தக்கவாறு நிறைவாய் ஆசிர்வதித்தார். அது போலவே உங்கள் செயல்களுக்கு தக்க பலனை கர்த்தர் உங்களுக்கு கட்டளையிடுவார். நாம் கர்த்தரை நம்பி வரும்பொழுது நாம் இழந்து போன எல்லாவற்றையும் கர்த்தர் நமக்கு திரும்பவும் கொடுப்பார் கர்த்தரால் நமக்கு நிறைவான பலன் கிடைக்கும். ஆமென். 

No comments:

Post a Comment