Wednesday, August 16, 2017

இயேசு கிறிஸ்துவின் தனி நபர் ஊழியம்


கன்மலை கிறிஸ்துவ சபை 
13.08.2017

" இயேசு கிறிஸ்துவின் தனி நபர் ஊழியம் "

ஊழியம் என்று சொன்னாலே சேவை ஆகும். அன்பும், மனத்தாழ்மையும் ஊழியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உன்னை நீ நேசிப்பது போல் பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக என்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார். அன்பே பிரதானம். நாம் மிகுந்த அன்போடும், மனதுருக்கத்துடனும் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். ஏனென்றால் உலகத்திற்கு நாம் வெளிச்சமாய் இருக்கிறோம். 

இன்னும் இந்த உலகில் அநேகர் இருளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை வெளிச்சத்தின் பாதையில் வழிநடத்தும் கடமை நமக்கு உள்ளது. அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். இந்த நாளிலும் நம் தேவனாகிய கர்த்தர்  தன் ராஜ்ஜியத்தின் சுவிஷேஷத்திற்கு ஆயுத்த பட உங்களை உற்சாக படுத்துகிறார். எல்லாவற்றிற்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு மாதிரியை நமக்கு வைத்து போய் இருக்கிறார். சுவிஷேஷத்தில் தனி நபர் ஊழியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே நம் ஆண்டவர் சமாரிய ஸ்திரீக்கு  எப்படி சுவிசேஷம் அறிவிக்கிறார் என்பதை வேதத்தில் இருந்து நாம் பார்க்கலாம்.

1. இயேசு சமாரிய ஸ்திரீயை தனியாக சந்தித்தார் 

யோவான் 4:6
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.

யோவான் 4:7
அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.

யோவான் 4:8
அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
இயேசு பிரயாணத்தில் இளைப்படைந்ததினால் அந்த கிணற்றின் அருகே உட்கார்ந்தார். முதலாவது  சுவிஷேசம் சொல்வதற்கு சரியான இடத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். எந்த இடத்தில் இரட்சிக்க படாதவர்கள் வருவார்கள், எந்த இடத்தில் பிணியாளிகள் இருப்பார்கள், எந்த இடத்தில் சுகவீனர்கள் இருப்பார்கள், எந்த இடத்தில் பின் மாற்றத்தில் போனவர்கள் இருப்பார்கள் என்று நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அந்த ஸ்திரி வருவாள் என்பதை இயேசு அறிந்ததின் நிமித்தமாக அங்கு உட்கார்ந்து இருந்தார். 

மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்.  

2. அவர் முறைமைகளை பாராமல் சமாரிய ஸ்திரீயிடம் சம்பாஷணை செய்தார் 

யோவான் 4:9
யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.

இங்கே அவர் ஒரு சாதாரண வேண்டுகோளை வைக்கிறார். எருசலேமிலிருந்து அதிக தூரம் பிரயாணம் பண்ணி வந்ததால் களைப்படைந்தவராய் அக்கிணற்றினருகே அமர்ந்தவராய் தண்ணீர் கேட்பது ஓர் அசாதாரணமான வேண்டுகோள் அல்ல. 
ஆனால் இந்த உரையாடல் நிகழ்த்திய மனிதர்களை நாம் கவனிக்க வேண்டும். யூதராகிய இயேசுகிறிஸ்து ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசுகிறார். அவள் ஒரு வேற்று நாட்டினைச் சார்ந்தவள். சமாரியர்களும் யூதர்களும் கலாச்சாரத்தால் வேறுபட்ட வர்கள். ஆயினும் சமய மற்றும் கலாச்சாரத் தடைகளை மீறி இயேசுகிறிஸ்து இப்பெண்ணிடம் தாகத்துக்குத் தரும்படி கேட்கிறார். 

I தீமோத்தேயு 2:4
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

மத்தேயு 18:14
இவ்விதமாக, இந்தச் சிறி  யரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

எல்லோரும் இரட்சிக்கப்படவும் மீட்கப்படவும் வேண்டும் என்பதும் ஒருவரும் கெட்டுபோக கூடாது என்பதும் தேவனின் சித்தமாக இருக்கிறது என்றும், அந்த சித்தம் நிறைவேறுவதற்காக தேவன் நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார் என்றும் வேதம் நமக்கு தெளிவுபடுத்துகிறது 

3. அவர் பரலோக ராஜ்ஜியத்தின் ஈவை அந்த ஸ்திரீக்கு வெளிப்படுத்தினார்

யோவான் 4:10
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

யோவான் 4:11
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.

யோவான் 4:12
இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.

யோவான் 4:13
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
யோவான் 4:14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

யோவான் 3:3
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அவளுடைய ஆத்துமா நொறுங்குண்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் ஒரு விதமான பாதிப்பு உண்டு. அப்படி உள்ளவர்களிடம் ஆண்டவர் எப்படி பேசுவார் என்றால் தனி நபர் ஊழியம் செய்பவர்களைத்தான் ஆண்டவர் பயன்படுத்துவார். அவர்கள் அந்த நபரிடம் பேசுகையிலே அவர்கள் தீர்க்கதரிசிகளாக மாறி விடுவார்கள் இதை தான் இங்கு இயேசுவானவரும் செய்கிறார். 

தனி நபர் சுவிஷேசம் சொல்லும் பொழுது அதில் ஒரு வல்லமை இருக்கிறது. அப்பொழுது தான் காரியங்கள் வெளிப்படும். அவர்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். 

4. அவர் அவள் செய்த பாவத்தை அவளுக்கு உணர்த்தினார் 

யோவான் 4:15
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.

யோவான் 4:16
இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
யோவான் 4:17
அதற்கு அந்த ஸ்திரீ எனக்குப்புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.

யோவான் 4:18
எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.

யோவான் 4:19
அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.

நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

அந்த ஸ்திரீயின் வாழ்க்கை ஆழமான பாவத்தில் இருக்கிறது. என்னுடைய சுவிஷேசத்தை ஏற்றுக்கொண்டால் உன் வாழ்க்கை முற்றிலும் பிரகாசமாக மாறிவிடும் என்று அந்த ஸ்திரீக்கு மறை முகமாக இயேசு சொல்கிறார். உடனே அந்த ஸ்திரீ ஆண்டவரே எனக்கு அந்த ஜீவத்தண்ணீரை தாரும் என்று கேட்கும் மாத்திரத்தில் ஆண்டவர் அவளுடைய வாழ்க்கையின் தற்போதைய நிலையை சொல்லுகிறார். அவளுடைய பாவ வாழ்க்கையை அவளுக்கு உணர்த்துகிறார். 

5. அவர் அந்த ஸ்திரியின் ஐயத்தை போக்கினார் 

யோவான் 4:20
எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.

யோவான் 4:21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
பாகமம் 4:7
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

அந்த சமாரிய ஸ்திரீ இயேசுவை நோக்கி நீங்களோ யூதர் நீங்கள் எருசலேமில் தொழுது கொள்கிறீர்கள் எங்கள் பிதாக்களோ இந்த மலையில் தொழுது கொண்டார்கள் அப்படியிருக்க நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். ஏனென்றால் சமாரிய நாட்டிற்கும் எருசலேமிற்கும்  உள்ள தொலைவு 1113 km ஆகும். அதற்கு இயேசு அந்த ஸ்திரீயிடம் நீங்கள் எங்கும் பிதாவை தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்று அவளின் அந்த ஐயத்தை போக்குகிறார்.

6. அவர் இரட்சிப்பை சமாரிய ஸ்திரீயிடம் விளக்கினார் 

யோவான் 4:22
நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.

யோவான் 4:23
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:24
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்

அதற்கு இயேசு இரட்சிப்பானது யூதரின் மூலமாக தான் வருகிறது. சமாரிய நாட்டினர் அறியாத பலவித காரியங்களை தொழுது கொள்ளுகிறீர்கள். நாங்களோ அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம். 

தேவனை நாம் தொழுது கொள்ளும் இடம் முக்கியமல்ல; அவரை அணுகும் முறையே முக்கியம். ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும்.

ஏசாயா 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

ஏசாயா 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

ஏசாயா 11:2
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

ஏசாயா 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

ஏசாயா 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

ஏசாயா 11:12
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.

7. அவர் தான் மேசியா என்பதை அந்த சமாரிய ஸ்திரீ அறிந்து கொண்டாள்

யோவான் 4:25
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

யோவான் 4:26
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.

8. அவள் தான் பெற்ற இரட்சிப்பை தன் ஜனத்தாருக்கும் அறிவித்தாள். 

யோவான் 4:28
அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி:

யோவான் 4:29
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.

அவள் இரட்சிப்பை பெற்று கொண்டு தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி வந்து பாருங்கள் நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் சொன்னார். அவர் தான் மேசியா வந்து பாருங்கள் என்றாள். கர்த்தரை விசுவாசித்து இந்த தேவன் நமக்கு அற்புதம் செய்வார். இந்த தேவன் நமக்கு நன்மை செய்வார் என கூறி தன் ஜனத்தார் அனைவரையும் கூட்டிக்கொண்டு சென்றாள். அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடத்தில் வந்தார்கள். 

அநேகர் அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்”.

அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். இயேசு கிறிஸ்துவின் இந்த தனி நபர் ஊழியத்தின் மூலமாக சமாரிய ஸ்திரீ இரட்சிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் சமாரிய ஜனத்தார் அநேகர் இயேசு கிறிஸ்துவே உலக ரட்சகர் என்று விசுவாசித்தார்கள். இங்கே இயேசு செய்ததை போலவே நாமும் இயேசுவே மெய்யான இரட்சகர் என்று அறிவிக்க ஆயுத்தப்படுவோம். நம்மை கொண்டு தேவன் பெரிய காரியங்களை செய்ய வல்லவராய் இருக்கிறார்.ஆமென்.

FOR CONTACT 
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment