Wednesday, August 30, 2017

கர்த்தருக்குக் காத்திரு


கன்மலை கிறிஸ்துவ சபை
Word of God: Brother Joshua Durgesh
27.8.2017

" கர்த்தருக்குக் காத்திரு "

சங்கீதம் 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

இன்றைக்கும் கர்த்தர் நம்மிடையே சொல்கிறதாவது என்னிடம் வந்து காத்து இரு. என் சமூகத்தில் எனக்காக காத்திரு, அப்பொழுது அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். நாம் திட மனதாய் இருந்து கர்த்தருக்காய் காத்திருக்க வேண்டும். நாம் எப்பொழுது கர்த்தருக்கு காத்து இருக்க வேண்டும் என சங்கீதக்காரர் இப்படியாய் சொல்கிறார்.


சங்கீதம் 5:3
கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.

கர்த்தர் சொல்கிறார், எனக்காக நீ அதிகாலையில் எழும்பி என் சமூகத்துக்கு வா அப்பொழுது என்னை நீ கண்டடைவாய். நாம் அதிகாலமே எழும்பி கர்த்தருக்காக ஆயத்தமாய் காத்திருக்க வேண்டும்.

அப்படி நாம் கர்த்தருக்காக காத்திருக்கும் பொழுது அவர் என்ன செய்வார் ?

1. அவர் உன்னோடு உடன்படிக்கை செய்வார் 
2. அவர் உன் சத்துருக்களுக்கு முன்பு உன்னை உயர்த்துவார் 
3. அவர் எல்லாவற்றிலும் உன்னை மேற்கொள்ள செய்வார் 

1. அவர் உன்னோடு உடன்படிக்கை செய்வார் 

யாத்திராகமம் 24:12
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

யாத்திராகமம் 24:13
அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,

யாத்திராகமம் 24:14
அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.

யாத்திராகமம் 24:15
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

யாத்திராகமம் 24:16
கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.

கர்த்தருடைய சமூகத்தில் மோசே நாற்பது நாட்கள் காத்து இருந்தார். அவ்வாறு மோசே கர்த்தருடைய சமூகத்தில் காத்து இருந்ததால் அவர் கர்த்தரிடத்தில் நியாய பிரமானத்தின் உடன்படிக்கையை பெற்று கொண்டார். அந்த உடன்படிக்கை தான் பத்து கட்டளைகளாக நமக்கு உள்ளது. நீ கர்த்தரிடத்தில் காத்து இருக்கும் பொழுது தான் அவர் உன்னோடு உடன்படிக்கை செய்வார். 

அது என்ன உடன்படிக்கையாய் வேண்டுமானாலும் இருக்கலாம். எனக்காக நீ காத்திருக்கும் பொழுது நான் உன்னிடத்தில் உடன்படிக்கை செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார். ஏனென்றால் அவர் உடன்படிக்கையின் தேவன். அவரோடு உடன்படிக்கை செய்ய கர்த்தர் உன்னை அழைக்கிறார். அவர் உன்னோடு பேச ஆவலாய் உள்ளார். எனவே கர்த்தரோடு பேச நாம் நேரம் ஒதுக்க வேண்டும். நீ எனக்காக காத்திருக்கும் பொழுது உன்னோடு உடன்படிக்கை செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார். நீ என் பாதத்தில் அமர்ந்து காத்திருக்கும் பொழுது உன்னோடு உடன்படிக்கை செய்வேன் என்று கர்த்தர் வாக்கு பண்ணுகிறார்.

2. அவர் உன் சத்துருக்களுக்கு முன்பு உன்னை உயர்த்துவார் 

தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

தானியேல் 6:11
அப்பொழுது அந்த மனுஷர்கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம்செய்கிறதைக் கண்டார்கள்.

இன்றைக்கு உனக்கு எதிராக நிற்கும் எல்லா சிங்கத்தின் வாயையும் கட்டுவேன் என்று கர்த்தர் சொல்கிறார். யார் எல்லாம் உனக்கு எதிராய் தீமையானதை பேசினார்களோ அது வேலை ஸ்தலமாக கூட இருக்கலாம். யாரெல்லாம் உனக்கு விரோதமாய் எழும்பி நின்றார்களோ கர்த்தர் அதனை எல்லாம் முறியடித்து உன்னை அவர்களுக்கு முன்பாக உயர்த்துவார். ஏனெனில் கர்த்தர் உன் சார்பாய் புறப்பட்டு விட்டார். நீ கர்த்தருக்காக காத்து இருக்கும் பொழுது உன் சத்துருக்களை உனக்கு முன்பாக கர்த்தர் முறியடிப்பார். 

தானியேல் 6:20
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.

தானியேல் 6:21
அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.

தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

தானியேல் 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

தானியேல் 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

தானியேலுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. ஏன் என்றால் கர்த்தர் தன்னை தப்புவிப்பார் என்ற விசுவாசம் தனியேலுக்குள்ளே இருந்தது. அதுபோல உனக்கு எதிராய் யார் எழும்பினாலும் உன்னை சேதப்படுத்தவே முடியாது. தானியேலின் தேவன் நம்முடைய தேவனாய் இருக்கிறார். அதே ஜீவனுள்ள தேவன் நம் மத்தியில் உலாவி கொண்டு வருகிறார். தானியேலை தப்புவித்த தேவன் உன்னையும் தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார்.
 

சங்கீதம் 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

சங்கீதம் 37:9
பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

கர்த்தருக்காக காத்து இருப்பவர்கள் சாந்த குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் அவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வார்கள். அவர்களுக்குள் மிகுந்த சமாதானமும், மனமகிழ்ச்சியும் இருக்கும். கர்த்தர் உன்னோடு பேச ஆவலாய் இருக்கிறார். ஆனால் அதற்கு எந்த வழியையும் நீ ஆயுதப்படுத்தவில்லை. நீ எனக்காக காத்திருக்கும் பொழுது உன்னை கொண்டு பெரிய காரியங்களை செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

3. அவர் எல்லாவற்றிலும் உன்னை மேற்கொள்ள செய்வார் 

ஆதியாகமம் 32:24
யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,

ஆதியாகமம் 32:25
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

ஆதியாகமம் 32:26
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.

ஆதியாகமம் 32:27
அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.

ஆதியாகமம் 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

ஆதியாகமம் 32:29
அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.

யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். கர்த்தருக்காக அவர் காத்து கொண்டு இருந்ததையே இங்கு அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யாக்கோபிடம் ஒரு வித பயம் காணப்பட்டது ஏனென்றால் அவர் தவறு செய்து விட்டார். தந்திரமாக ஆசீர்வாதங்களை ஏசாவிடம் இருந்து பறித்து கொண்டார். அதற்கு காரணமாய் இருந்தவர் யாக்கோபின் அம்மா ரெபெக்காள். தன் சகோதரனுக்கு பயந்து யாக்கோபு லாபான் வீட்டுக்கு சென்று விடுகிறார். 

மறுபடியும் அவர் திரும்பி வருகையில் தன் அண்ணன் ஏசாவை நினைத்து அஞ்சுகிறார். ஆபத்து நேரத்தில் கர்த்தர் தன்னை விடுவிப்பார் என்பதனை யாக்கோபு நன்கு அறிந்து இருந்தார். ஆகையால் தான் அவர் தனித்து கர்த்தருக்காக காத்து இருந்தார்.

ஆதியாகமம் 33:4
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

கர்த்தர் யாக்கோபிடம் சொல்லிவிட்டார். நீ என்னை மேற்கொண்டு விட்டாய் ஆகையால் நீ போகிற காரியம் வெற்றியாய் முடியும் என்று நீ கர்த்தருக்காக காத்திருக்கும் பொழுது உன்னால் எதையும் மேற்கொள்ள முடியும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

மத்தேயு 6:5
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:6
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

இன்று நாம் பலவித சூழ்நிலைகளின் நிமித்தமாய் கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகி போய் கொண்டே இருக்கிறோம். ஆண்டவர் சொல்கிறார். முன்பு எப்படியெல்லாம் கர்த்தரை ஆராதித்து வந்தோமோ, அவரை எப்படியெல்லாம் தேடினோமோ அதேபோல் மீண்டுமாய் கர்த்தரிடத்தில் ஒப்புரவாகி கர்த்தருக்காக காத்திருக்கும் பொழுது உன்னை எல்லாவற்றிலும் கர்த்தர் தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். கர்த்தர் சொன்னது போல் அவருக்காக காத்து இருங்கள் அவர் உங்களோடு உடன்படிக்கை செய்து உன் சத்துருக்களுக்கு முன்பாக உன்னை உயர்த்தி உன்னை எல்லாவற்றிலும் மேற்கொள்ளா செய்வார். ஆமென்.

 FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment