Friday, September 1, 2017

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார்


கன்மலை கிறிஸ்துவ சபை 2017 செப்டம்பர் மாத வாக்குத்தத்தம் 

" கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார் "


சங்கீதம் 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
ஏன் ? எதற்காக ? நினைத்திருக்கிறார் 

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார். நம்மை படைத்தவர் நம்மை நினைத்திருக்கிறார். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் கர்த்தர் நம்மை விசாரித்து நினைத்திருக்கிறார். மனுஷனுடைய நினைவும் கர்த்தருடைய நினைவும் வேறாக இருக்கிறது. 

மனுஷனின் நினைவு ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நின்றுவிடுகிறது. ஆனால் கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற உன்னதமான திட்டமோ அது பெரியதாக இருக்கிறது. கர்த்தர் இந்த மாதத்தில்  உன்னை பார்த்து சொல்கிறதாவது நான் உன்னை நினைத்திருக்கிறேன். அவர் உன்னை நினைத்து எப்படி ஆசிர்வதிக்க போகிறார் என்பதை மூன்று விதமான காரியங்களில் நாம் பாப்போம்.

1. கர்த்தர் சமாதானத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் 

எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

எரேமியா 29:12
அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.

எரேமியா 29:13
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

எரேமியா 29:14
நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உங்களை குறித்து கர்த்தர் சமாதானமாய் நினைத்திருக்கிறார். கர்த்தர் சொல்கிறார் தீமையே எதுவும் உங்களுக்கு நடக்காது. எல்லாம் நன்மைக்கு ஏதுவாகவே கர்த்தர் இந்த மாதம் முழுவதும் உங்களை நடத்துவார். இந்த மாதம் முழுவதும் கர்த்தர் உங்கள் கூப்பிடுதலுக்கு செவி கொடுக்கிறவராய் இருக்கிறார். நீங்கள் அவரை தேடுகையில் கண்டடைவீர்கள். அவர் உங்களுக்கு காணப்படுவார். அவர் உங்கள் எல்லா சிறையிருப்பையும் மாற்றி உங்களுக்கு சமாதானம் அளிக்க வல்லவராய் இருக்கிறார். 

2. கர்த்தர் மகிழ்ச்சியுண்டாக்க நினைத்திருக்கிறார்

ஏசாயா 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 55:9
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

ஏசாயா 55:10
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,

ஏசாயா 55:11
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

ஏசாயா 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

ஏசாயா 55:13
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இரு

உயர்வான நினைவை இந்த மாதத்தில் கர்த்தர் உன்னை குறித்து வைத்திருக்கிறார். உன்னை குறித்து கர்த்தர் இந்த மாதத்தில் என்ன விரும்பி வைத்திருக்கிறாரோ அதை அனைத்தையும் கர்த்தர் நடப்பிப்பார். உனக்கு சொல்லப்பட்ட வாக்குத்தத்தங்கள், தீர்க்கதரிசனங்கள் எல்லாம் வாய்க்கும். உன்னை குறித்த கர்த்தரின் உயர்ந்த நினைவு உனக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
 

3. கர்த்தர் குடும்பத்தை ஆசீர்வதிக்க நினைத்திருக்கிறார் 

ஆதியாகமம் 8:1
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டுமிருகங்களையும், சகல நாட்டுமிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

கர்த்தர் நோவாவை நினைத்தருளினார். அது போல உங்களையும் அவர் நினைத்திருக்கிறார். 

ஆதியாகமம் 8:16
நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.

ஆதியாகமம் 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

நோவாவை நினைத்தது போல கர்த்தர் உங்களையும் நினைத்து ஆசீர்வதிப்பார். அவர் யாரையெல்லாம் ஆசீர்வதிப்பார் என்றால் 

சங்கீதம் 115:12
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

சங்கீதம் 115:13
கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.

இந்த மாதத்திலே அவர் உன்னை நினைத்திருக்கிறார் உன்னை ஆசீர்வதிக்க, இந்த மாதத்திலே அவர் உன்னை நினைத்திருக்கிறார் உனக்கு சமாதானம் கொடுக்க, இந்த மாதத்திலே அவர் உன்னை நினைத்திருக்கிறார் உன்னை உயர்த்த ஆமென். 


FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment