Wednesday, September 6, 2017

என்னைக் கேளும் பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாக கொடுப்பேன்


கன்மலை கிறிஸ்துவ சபை
Word of God: Brother Micheal
3.9.2017

சங்கீதம் 2:8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

கர்த்தர் சொல்லுகிறார் பூமியின் எல்லைகளை உனக்கு சொந்தமாக கொடுப்பேன். இன்றும் நம் வாழ்விலே அநேக தடைகள் நாம் சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது. வாழ்வில் வரும் போராட்டங்களை கண்டு மனம் தளர்ந்து விடுவதும் உண்டு. ஆனால் நம்மை அழைத்தவர் உண்மை உள்ளவராய் இருக்கிறார். அவர் நம்மை கானானுக்குள் பிரவேசிக்க செய்வார். நாம் இப்பொழுது இருக்கின்ற நிலையிலே இருக்க போவது இல்லை. உன் துக்கத்தின் நாட்களுக்கு ஈடாக கர்த்தர் உனக்கு இரட்டிப்பான சந்தோஷத்தை தருவார்.


I நாளாகமம் 4:10
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.

இங்கு யாபேசை போலவே நம்முடைய வாழ்க்கையிலும் முன்னேற முடியாத ஒரு தீங்கு இருக்கிறது. வாழ்க்கையில் செழிப்பே இல்லாமல் முடக்கி வைத்த ஒரு நிலை, யாபேஸ் என்றாலே துக்கம் வசனம் சொல்கிறது யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். 

இங்கு  யாபேஸ் கர்த்தரிடத்தில் கருத்தாய்  ஜெபிப்பதை நம்மால் அறியமுடிறது. துன்ப முகத்தையே பார்த்து பார்த்து வருகிறீர்களா பயப்பட வேண்டாம். யாபேசை போல இஸ்ரவேலின் தேவனிடத்தில் கருத்தாய் ஜெபித்திடுங்கள். 

1. அவர் உன் குடியிருப்பின் எல்லைகளை குறித்திருக்கிறார் 

அப்போஸ்தலர் 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

நீங்கள் எங்கு குடி இருக்க வேண்டும் என்று உங்கள் எல்லைகளை கர்த்தர் முன் குறித்திருக்கிறார். நீ குடி இருக்கிற பட்டணத்தில் இருக்கிறதான அணைத்து ஆத்துமாக்களையும் ஒரே இரத்தத்தினாலேகர்த்தர் மீட்புக்கு என்ற நாளுக்கு முத்திரையாய் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் உன் மூலமாக அவர்களுக்கு தந்து நீ அவர்களை ஆத்துமா அறுவடை செய்து அங்கு இருக்கும் குடியிருப்பின் எல்லைகளை உனக்கு சொந்தமாக கர்த்தர் மாற்றி தருவார்.

2. அவர் பரிசுத்தத்தின் எல்லையை உனக்குள் வைப்பார் 

எசேக்கியேல் 43:12
ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.

எருசலேம் என்று சொன்னாலே அது பரிசுத்தம். எருசலேம் என்று சொன்னாலே சபை இந்த எருசலேம் வருகிற நாட்களிலே கட்டப்படும்.  நாம் கர்த்தருடைய ஆலயத்தில் வரும் பொழுது நம்மை அறியாமலே நம் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டு பரிசுத்தம் ஆக்கப்படுகிறோம். ஏனென்றால் ஆலயம் எல்லை முழுவதிலும் பரிசுத்தம் நிரம்பி இருக்கிறது, இந்த பரிசுத்தத்தின் எல்லை சாதாரணமாகவோ அல்லது தற்செயலாகவோ கிடைப்பதே இல்லை இந்த பரிசுத்தம் நாம் ஆலயத்திற்கு வரும் பொழுது கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவிற்குள் இந்த பரிசுத்த எல்லை இருந்ததாலே பிசாசானவன் இயேசுவுக்கு சகலத்தையும் உனக்கு தருவேன் என்று சொன்ன போதிலும் அவருக்குள்ளே பரிசுத்தத்தின் எல்லை ஆகிய பரிசுத்த ஆவியானவர் இருந்த படியால் இயேசு பிசாசை மேற்கொண்டார்.
 

அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

வல்லமையும், பரிசுத்தமும் உனக்குள் இருந்தால் அந்த எல்லை எப்பொழுதுமே உன்னை விட்டு நீங்காது. பேதுரு இயேசுவை மறுதலித்தார் ஆனாலும் பேதுரு தனியாக சென்று மனம் கசந்து அழுதார். பின்னாளில் பேதுரு நிழல் பட்டால் சுகம் என்கிற அளவுக்கு தேவன் பரிசுத்தத்தின் வல்லமையான எல்லையை அவருக்குள் வைத்து பேதுருவை தேவன் பயன் படுத்தினார். இன்றைக்கு உங்களுக்கும் அந்த பரிசுத்தத்தின் எல்லையை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பாராக 

3. அவர் உனக்கு சமாதானத்தின் எல்லையை கட்டளையிடுவார் 

சங்கீதம் 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

உச்சிதமான கோதுமை என்றாலே ஆசிர்வாதம் அதை ஆண்டவர் தருவதினாலே உன் எல்லையெங்கும் சமாதானம் நிலவும். குடும்பத்தில், வேலையில், பிரச்சனையா சமாதானம் இல்லையா ? வசனம் சொல்கிறது அவர் உன் எல்லையெங்கும் சமாதானமாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னை திருப்தி ஆக்குவார். உன் குடும்பத்திற்குள் ஒரு சமாதானத்தை அனுப்புவார். கர்த்தர் சொல்லுகிறார் உன் வீட்டிற்கு சமாதானத்தின் எல்லையை அனுப்புவேன். நமக்கும், நம் குடும்பத்திற்கும்,  சமாதானத்தின் எல்லையை கர்த்தர் கட்டளையிடுவாராக.

4. அவர் உன் எல்லையில் வாசமாய் இருப்பார் 

உபாகமம் 33:12
பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

காப்பாற்றுவதில் கர்த்தரை போல ஒருவரும் கிடையாது. உன்னை காப்பாற்ற வேண்டும் என்றால் கர்த்தர் உனக்குள் வாசம் செய்ய வேண்டும். உன் பக்கத்தில் ஆயிரம் பேரும்  உன் வலது புறத்தில் பதினாயிரம் பேர் வந்தாலும் உன்னை கைவிட மாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ வீழ்வதில்லை, அவர் உன்னை உள்ளம் கையில் ஏந்தி இருக்கிறார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கைவிடுவதும் இல்லை.ஆமென். 

FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment