Thursday, November 9, 2017

ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்


கன்மலை கிறிஸ்துவ சபை

Brother : Micheal

Date: 05.11.2017

I இராஜாக்கள் 3:5
கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.

I இராஜாக்கள் 3:9
ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

I இராஜாக்கள் 3:10
சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.

I இராஜாக்கள் 3:11
ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,

I இராஜாக்கள் 3:12
உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

I இராஜாக்கள் 3:13
இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை.

தேவ ஜனமே நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிற காலம், மிகவும் கொடிய காலம். கிருபையின் காலமாக இருந்தாலும் தேவனிடத்தில் நீங்கள் கேட்க வேண்டியது ஞானமுள்ள இருதயம். 

I பேதுரு 4:17
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

I பேதுரு 4:18
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

I பேதுரு 4:19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.

இன்றைக்கு நியாய தீர்ப்பு எங்கு இருந்து ஆரம்பிக்கிறது என்றால் தேவனுடைய வீட்டில் தொடங்குகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். 

எசேக்கியேல் 9:6
முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.

யார் அந்த பரிசுத்த ஸ்தலம் நீயும் நானும் தான் அந்த பரிசுத்த ஸ்தலம். ஆண்டவருடைய பரிசுத்த வேதம் சொல்கிறது தேவனே ஆலயமாய் இருக்கிறார். யார் அந்த ஆலயம் அந்த ஆலயம் நீங்களே என்று சொல்கிறார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். 

ஏன் எசேக்கியலுக்கு நெற்றியிலே முத்திரை போட்டவர்களை விட்டு விடு என்று சொல்வதற்கான காரணத்தை நாம் காண்போம். 

எரேமியா 18:1
கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

எரேமியா 18:2
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.

எரேமியா 18:3
அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.

எரேமியா 18:4
குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.

எரேமியா 18:5
அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:

எரேமியா 18:6
இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.

எரேமியா 18:7
பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

எரேமியா 18:8
நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

எரேமியா 18:9
கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

எரேமியா 18:10
அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.

கர்த்தர் நீ ஏன் வழியில் வருகிறாயா என்று பார்த்து கொண்டே இருப்பார். அவர் வழியில் வர சில காலம் அவகாசமும் ஆண்டவர் தருவார். அதை அசட்டை பண்ணி தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருந்தால் உனக்கு செய்வேன் என்று சொல்லி வாக்குத்தத்தம் தந்த கர்த்தர் நமக்கு அதை செய்யாதபடிக்கு மனம் மாறுவார். 

எசேக்கியேல் 9:4
கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.

எசேக்கியேல் 9:5
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,

எசேக்கியேல் 9:6
முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.

அது என்ன அடையாளம் ?

யோபு 19:29
பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.

யோபுவுக்கு கிடைத்த வெளிப்பாடு என்னவென்றால் பட்டயத்துக்கு பயப்படுங்கள். வசனம் தெளிவாய் சொல்கிறது எசேக்கியலில் சொன்ன பட்டயம் யாரையும் பார்க்காமல் வெட்டு யாரிடத்தில் முத்திரை உள்ளதோ அவர்கள் அண்டையில் போகவேண்டாம். மற்ற எல்லாரையும் வெட்டு தன் சொந்த ஜனமான இஸ்ரவேல் ஜனத்தை பார்த்து சொன்னார் என்று நாம் பார்க்கிறோம். 

ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

உனக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு கண்ணீரோடு உனக்காக, சபைக்காக, மக்களுக்காக வேண்டுதல் செய்கிறார். பெருமூச்சு விட்டு ஆண்டவரிடத்தில் உறவாடி மற்றவருக்காக பரிந்து பேசி ஜெபிப்பது தன்னுடைய பாவங்களை நினைத்து ஆண்டவரே உமக்கு விரோதமாய் இப்படிப்பட்ட பாவம் செய்தேன் என்று சொல்லி மனக்கிலேசத்தோடும், மனபாரத்தோடும் விடுதல் செய்து மன்னிப்பு கேட்பது தான் இங்கு சொல்லப்பட்டுள்ள பெருமூச்சு ஆகும். 

ரோமர் 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

எபேசியர் 1:13
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டிலே கெட்ட வார்த்தைகளை பேசாதிருங்கள் இல்லையென்றால் கர்த்தருடைய பட்டயம் வாயிலேயே வெட்டும். தேவனுடைய வீட்டில் கெட்ட பேசாமல் எச்சிற்க்கையாக இருக்க வேண்டும்.  நீ செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் கர்த்தர் திட்டமாய் வைத்து இருக்கிறார். அவர் தேவனிடத்தில் இருந்து வந்த பரிசுத்த ஆவியானவர் அவரை துக்கப்படுத்தாதிருங்கள்.
 

மனம் திரும்பு நான் உனக்கு செய்ய நினைத்த அந்த நன்மைகளை செய்யாதிருக்க மனம் மாறுவேன். எனவே நீ வழி தவறி போகாதே  

வெளி 3:16
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

இப்படி அனலும், குளிருமின்றி இருந்தால் தேவன் என்ன செய்வார் ?

ஏசாயா 63:9
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

ஏசாயா 63:10
அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

பிலிப்பியர் 2:12
ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

ஆண்டவர் சொல்கிறார் உங்கள் இரட்சிப்பு நிறைவேற அதிகம் பிரயாச படுங்கள்.  மனம் திரும்புங்கள். நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். ஆமென்.

FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment