Monday, November 20, 2017

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக


கன்மலை கிறிஸ்துவ சபை

Brother : Micheal

Date: 12.11.2017


II தெசலோனிக்கேயர் 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர்உங்களனைவரோடுங்கூட இருப்பாராக

அவர் சமாதான பிரபு, அவர் இரக்ககுணம் உள்ளவராய், நீடிய சாந்தம் உடையவராய் இருக்கிறவர். ஆகையால் தான் இந்த பட்டணத்தில் நாள் உயிரோடு இருக்கிறோம். வசனம் சொல்கிறது எப்பொழுதும், சகல விதத்திலும் சமாதானத்தை தருகிற தேவன் உங்களோடு கூட இருக்கிறார்.

கொலோசெயர் 3:15
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

1. துதிக்கிறதினாலே நமக்கு உண்டாகுகிற சமாதானம் 

சங்கீதம் 147:12
எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.

சங்கீதம் 147:13
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

சங்கீதம் 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

வசனம் சொல்கிறது கர்த்தரை துதி அதனாலே உன் எல்லையெல்லாம் சமாதானம் உண்டாகும், அதனாலே உன் குடும்பத்தின் எல்லையெல்லாம் சமாதானமாய் இருக்கும். ஆண்டவரை நீங்கள் துதித்து ஆராதிக்கும் பொழுது அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

I சாமுவேல் 25:6
அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,

உனக்கும், உன் குடும்பத்திற்கும் உனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானத்தை தர கர்த்தர் உங்களை வாழ்த்துகிறார். 

யோபு 5:23
வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும்.

யோபு 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.

பிலிப்பியர் 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

யோபு 22:20
நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.

அனைவரிடமும் சமாதானமாய் பேசி பழகுங்கள், அதினாலே உங்களுக்கு நன்மை உண்டாகி இருக்கும். 

2. ஜெபிக்கிறதினாலே நமக்கு உண்டாகுகிற சமாதானம் 

சங்கீதம் 122:6
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

3. வேதத்தை வாசிக்கிறதினாலே உண்டாகுகிற மிகுந்த சமாதானம் 

சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

சகரியா 9:10
எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.

சகரியா 9:11
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.



FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment