கன்மலை கிறிஸ்துவ சபை
Message: Brother Micheal
ஆண்டவரே நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்
1. எதிர்பார்த்திராத வேளை
ஆதியாகமம் 18:1
பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து
ஆதியாகமம் 18:2
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து;
ஆபிரகாம் பகலின் உஷ்ணமான வேளையில் தன்னுடைய கூடார வாசலில் உட்கார்ந்திருந்த பொழுது கர்த்தர் அவருக்கு தரிசனமானார். ஆண்டவர் உங்களுடனே கூட இருக்கிறார். உங்களை விட்டு அவர் கடந்து போக மாட்டார். நீங்கள் ஆண்டவரை தேடினால் அவர் உங்களுக்கு வெளிப்படுவார். வசனம் தெளிவாய் சொல்கிறது ஆபிரகாம் பகலின் உஷ்ணமான வேளையில் தன் கூடார வாசலில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது ஆபிரகாம் எதிர்பார்க்காத வேளையில் கர்த்தர் அவருக்கு தரிசனமானார்.
இந்த இடத்தில் ஆவிக்குரிய ரீதியில் ஆழமாய் பார்க்கும் பொழுது இந்த மூன்று புருஷர்களை யாருக்கு ஒப்பிடலாம் என்று சொன்னால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இவர்கள் மூன்று பெரும் இணைந்தால் தான் அற்புதம் நடக்கும். இந்த இடத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய தாசனாகிய ஆபிரகாமுக்கு முன்னே நின்றார்கள். இது போலவே நீங்கள் எதிரிபார்க்காத வேளையிலே இந்த வருடத்தில் கர்த்தர் உங்களுக்கு தரிசனமாவார். எதற்காக என்றால் உங்களை ஆசிர்வதிக்கும் படியாய்.
2. எதிர்பார்த்திராத கிருபை
ஆதியாகமம் 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.
ஆதியாகமம் 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.
ஆதியாகமம் 18:5
நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.
இங்கே ஆபிரகாம் கருத்தாய் விசுவாசத்தோடு பேசி மூன்று புருஷர்களை தன் கூடாரத்திற்கு வர அழைக்கிறார். உறுதியான விசுவாசத்தோடு அவர்களிடத்தில் பேசுகிறார். நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும், நான் உங்கள் கால்களை கழுவ வேண்டும். நீங்கள் மரத்தடியில் வந்து சற்று இளைப்பாற வேண்டும் நான் சமைத்து கொண்டு வருவதை நீங்கள் சாப்பிட வேண்டும். இதற்காகவேதான் அடியேன் வீடுவரைக்கும் வந்தீர்கள் என்று கருத்தாய் வேண்டுகிறார். உடனே அந்த புருஷர்கள் நீ சொன்ன படியே செய் என்றார்கள்.
ஆபிரகாம் நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன் என்று இங்கு சொல்கிறார். அவரிடம் இருந்து ஏன் அப்படிப்பட்ட வார்த்தை வந்தது என்று சொன்னால் என் இருதயத்தை திடப்படுத்த எனக்கு ஒரு மகன் இல்லையே என்ற ஒரு கவலை அவர் மனதில் இருந்ததினால் அவர் இவ்வாறாக சொல்கிறார். இன்றைக்கு நம்முடைய இருதயமும் நம்மை சுற்றி நிகழும் பலவிதமான சூழ்நிலையை குறித்து நாம் நினைக்கும் பொழுது நம் இருதயத்தில் ஒரு தவிப்பும், சஞ்சலமும் ஏற்படுகிறது. அதை போக்கிடவே ஆண்டவர் உங்கள் வீட்டிற்கு வரப்போகிறார். ஆண்டவர் நம் வீட்டிற்கு வருவது எவ்வளவு பெரிய கிருபை. கர்த்தர் உங்கள் கூடாரத்திற்கும் வந்து உங்களை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் எதிர்பார்க்காத கிருபையை உங்கள் வீட்டிற்கு கர்த்தர் வைத்து இருக்கிறார்.
3. எதிர்பார்த்திராத ஆசிர்வாதம்
ஆதியாகமம் 18:6
அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
ஆதியாகமம் 18:7
ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.
ஆதியாகமம் 18:8
ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.
ஆதியாகமம் 18:9
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
ஆதியாகமம் 18:10
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆதியாகமம் 18:12
ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
இங்கே நாம் பார்க்கும் பொழுது எல்லாவற்றையும் ஆபிரகாம் சீக்கிரமாய் செய்கிறார். கர்த்தருக்கு செய்ய வேண்டும் என்றால் சீக்கிரமாய் செய்ய வேண்டும். ஆண்டவருக்கு கொடுக்க, ஆண்டவருக்கு செய்ய, ஆண்டவருக்கு ஓட அவர்கள் தீவிரமாய் இருந்தார்கள். வேலைக்காரரும் சரி, சாராலும் சரி ஆபிரகாமும் சரி, தீவிரமாயும், சீக்கிரமாயும், ஓடியும், சீக்கிரமாய் சமைத்தும் வைக்கிறார்கள்.
அவர்கள் சாப்பிட்டு திருப்தியான பிறகு உன் மனைவி சாராள் எங்கே என்று கேட்கிறார்கள், இது ஒரு ஆசிர்வாதமான நேரம் ஒவ்வொரு தூதருக்கும் நியமிக்கப்பட்ட ஒரு கட்டளை அந்த மூன்று புருஷர்களும் அபிராகாமையும், சாராளையும் அவர்கள் எதிரிபார்க்காத வேளையில் ஆசிர்வதித்தார்கள். இந்த மூன்றையுமே ஆபிரகாம் எதிரிபார்க்கவில்லை, அந்த அடிக்கப்பட்ட கன்று கூட எதிர்பார்க்கவில்லை அது ஆசிர்வதிக்கப்பட்ட கன்று, அது கர்த்தருக்காக நியமிக்கப்பட்ட கன்று.
யாரும் எதிர்பார்த்திராத வேளை உங்களுக்கும் இதுபோலவே நீங்கள் எதிர்பார்க்காத காரியங்கள் ஆண்டவர் உங்களுக்கு செய்வார். எதிர்பார்க்காத வேளையில் கர்த்தர் உனக்கு என்ன செய்ய சித்தமாய் உள்ளாரோ அதை அவர் நிச்சயமாய் செய்வார். எதிரிபார்த்திராத கிருபைகளை தந்து உங்களை நடத்துவார். எதிர்பார்க்காத ஆசீர்வாதங்களை நீங்கள் நினைக்காத வேளையில் அவர் செய்வார்.
வசனத்தில் உள்ளபடியே நீங்கள் நினையாத வேளையில் ஆண்டவர் வந்து, நீங்கள் நினையாத கிருபையை தந்து, நீங்கள் நினையாத ஆசிர்வாதத்தை உங்களுக்கு கட்டளையிடுவாராக ஆமென்.
FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261
No comments:
Post a Comment