Tuesday, February 20, 2018

உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்


கன்மலை கிறிஸ்துவ சபை

தேவசெய்தி : Brother Micheal

Date: 18.02.2018

சங்கீதம் 145:18
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

வசனம் தெளிவாய் சொல்கிறது தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவரை நோக்கி நீங்கள் எதை கேட்டாலும், எதை நீங்கள் நம் பரலோக தந்தையிடம் பரிந்து பேசி கேட்கிறீர்களா அதை நம் தேவன் தர வல்லவராய் இருக்கிறார். ஆண்டவர் தெளிவாய் சொல்லி இருக்கிறார், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் கர்த்தரை உண்மையாய் கூப்பிடுகிற வேளையிலே கர்த்தர் உனக்கு சமீபமாய் வந்து உன்னை அசீர்வதிப்பார். 

அவர் எதற்காக சமீபமாயிருக்கிறார் ?

1. அவர் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பார் 

எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

நீங்கள் கர்த்தரை நோக்கி முழங்கால் படியிட்டு உண்மையாய் கூப்பிடும் பொழுது கர்த்தர் சமீபமாய் உன்னிடத்தில் வந்து உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை செய்வார், அதை உனக்கு அறிவிப்பார். கர்த்தர் செய்வார் நீங்கள் உண்மையாய் கூப்பிட்டால் கர்த்தர் சமீபமாய் உங்களிடத்தில் வருவார்.
2. அவர் உன்னை தப்புவித்து கனப்படுத்துவார் 

சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

அவர் ஆபத்துக்காலத்தில் உன்னோடு இருந்து உன்னை தப்புவித்து கனப்படுத்துவார். 

சங்கீதம் 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

சங்கீதம் 91:5
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

சங்கீதம் 91:6
இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்

வசனம் தெளிவாய் சொல்கிறது மேற்கூறிய வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆபத்துகள் வந்தாலும் நீங்கள் பயப்படவேண்டாம் ஏனென்றால் கர்த்தர் உன்னுடனே கூட இருந்து உன்னை தப்புவிப்பார். எத்தனை கன்னிகள் நம்மை கடந்து போயிற்று, எத்தனை சங்கார தூதர்கள் நம்மை கடந்து போனார்கள். அப்படி இருந்தும் நாம் சாகாமல் பிழைத்திருக்கிறோம் என்று சொன்னால் அது கர்த்தருடைய சுத்த கிருபையே ஆகும்.

3. அவர் உன் புலம்பலை ஆனந்தக் களிப்பாக  மாற்றுவார் 

சங்கீதம் 30:10
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

சங்கீதம் 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.







FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment